September 2018

அமெரிக்க ஜனாதிபதி கார் என்ன செய்யும் தெரியுமா ?

அமெரிக்க ஜனாதிபதி பயணிக்கும் கார் உலகில் மிகவும் பாதுகாப்பான கார். அசைக்கவே முடியாது என்கிறார்கள். இதில் அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா ? இதோ ஒரு செக்கியூரட்டி கம்பெனி போட்டு உடைத்துள்ள தகவல் ,
.

இந்த காரின் டயருக்கு நீங்கள் எத்தனை தடவை வேண்டும் என்றாலும் சுடலாம். பஞ்சர் ஆனா உடனே தானாகவே காற்று நிரம்பிவிடும். பெற்றோல் டாங் இருக்கும் இடத்தை நோக்கி சுட்டால் கூட சூடு பிடிக்காது. 5 அங்குல அகல கண்ணாடி. இதனால் இதனையும் சுட முடியாது. காருக்கு முன்னால் டியர் காஸ் அடிக்கும் திறமை. இதனால் ஒரு கூட்டமே காரை வழி மறித்து தாக்குதல் நடத்தினால் கூட. உடனே காருக்கு முன்னாலும் பின்னாலும் டியர் காஸ் வெளியேறி. அவர்களை திணறவைக்கும். காருக்கு உள்ளே யார் பயணிக்கிறார்களோ. அவர்களுக்கு கொடுக்க என செயற்கை ரத்தம் எப்பொழுதும் காரில் இருக்கும். அத்தோடு உயிர் காக்கும் அதி நவீன மருத்துவ கருவிகள் உள்ளது.

இது போக அதி நவீன குறி சுடும் துப்பாக்கி, ஏதாவது அசிட் அல்லது கெமிகல் வீசினால் அதனை தாக்கும் பிடிக்கும் ரப்பர்கள் கண்ணாடியை பாதுகாக்கிறது. 8 அங்குல விட்டம் கொண்ட இரும்பு தகடுகள் காரின் இரு பக்கமும் உள்ளதால் அருகே குண்டு வெடித்தால் கூட காருக்கு எதுவும் நடக்காது. இது மட்டுமால் இதே பாதுகாப்பு காருக்கு கீழேயும் உள்ளது. இதனால் நிலக் கண்ணிவெடி வெடித்தாலும் கார் அசையாது. இது போக காரில் பயணிக்கும் ஜனாதிபதி உடனடியாக துணை ஜனாதிபதி மற்றும் பெண்டகன்(பாதுகாப்பு துறையோடு) உடனடியாக தொடர்பு கொள்ள வசதிகள் உள்ளது.

இப்ப சொல்லுங்கள் இந்த காரை தகர்க்க முடியுமா ? இதே போல தான் அமெரிக்க ஜனாதிபதி பயணிக்கும் விமானத்திலும் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளது. அதனை ஏர் போஸ் 1 என்று அழைப்பார்கள். ஏவுகணை ஏவினால் கூட, அந்த ஏவுகணையை திசை திருப்பி விடும் துல்லியமான கருவிகள் ஏர் போஸ் 1 விமானத்தில் உள்ளது.

விமானத்தில் வந்து கொழும்பு நகரைத் தாக்கி அழிக்கலாம் என்ற அச்சம் அரசாங்கத்திடம்

இறுதி யுத்தத்தின் இறுதி இரு வாரங்களிலும் விடுதலைப் புலிகள் பலமான நிலையிலேயே போரிட்டு வந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா சபையில் பங்கேற்க நியூ யோர்க் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால அங்கு இலங்கைச் சமூக த்தினரைச் சந்தித்த போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இறுதி தருணத்திலும், அவர்கள் மீண்டெழுந்து விமானத்தில் வந்து கொழும்பு நகரைத் தாக்கி அழிக்கலாம் என்ற அச்சம் அரசாங்கத்திடம், மேலோங்கி இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, தங்களைப் பாதுகா த்துக் கொள்வதற்காக இறுதி தருணத்தில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், தானே யுத்தத்தினை முடித்து வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் நிறைவடைந்த இறுதி தருண ங்களை எல்லோரையும் விட நானே நன்கு அறிந்தவன். யுத்தத்தின் இறுதி இரு வாரங்கள் நானே நாட்டின் பதில் பாதுகாப்பு அமை ச்சராக இருந்தேன்.

முன்னாள் ஜனாதிபதியோ, முன்னாள் பிரதமரோ, இராணுவத் தளபதியோ, முன் னாள் பாதுகாப்புச் செயலாளரோ யுத்தத்தை வெற்றி கொண்ட இரு வாரங்களில் நாட்டில் இருக்கவில்லை.

இது குறித்து பலருக்கு ஞாபகம் இருக் காது. அவர்கள் ஏன் நாட்டை விட்டு சென்றார்கள் என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் ஏன் சென்றார்கள் என்று எனக்கு தெரியும்.

விடுதலைப்புலிகள் விமானம் மூலம் வந்து கொழும்பில் தாக்குதல் நடத்தும் போது, கொழும்பில் ஒரு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் யுத்தத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை. அவர்கள் தென் னிந்தியாவில் அதாவது சென்னையிலோ, அல்லது வேறு எங்கு காட்டுப்பகுதியிலிரு ந்தோ விமானம் மூலம் வந்து கொழும்பில் குண்டு மழை பொழிந்து கொழும்பை நாச ப்படுத்துவார்கள் என்று, அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்திருந்தது.

அதனால்தான் அவர்கள் அனைவரும் பயந்து நாட்டை விட்டு வெளியேறினார்கள். இதுதான் உண்மைக் கதை. இந்த இரு வாரங்களில் நான் கொழும்பில் இருக்கவில்லை.

என் இருப்பிடத்தை அறிந்து கொள்வார்கள் என்ற காரணத்தினால் நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலேயே தங்கியிருந்தேன். இதுதான் யுத்தத்தின் அனுபவம். விடுதலைப் புலி களின் ஐந்து தாக்குதல்களை எதிர் கொண்ட வன் நான் என தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை மீட்க சோனியா காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது ???

2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்க சோனியா காந்தி தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- போரின் இறுதி கட்டத்தின்போது, அப்போதைய இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபாகரனுக்கு தகவல் ஒன்றை வழங்கியிருந்தார். பிரபாகரனை காப்பாற்ற இந்திய கடற்படை வரும் என்றும், அதற்காக காத்திருக்குமாறும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரபாகரன் காட்டு பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி பயணித்தபோது அங்கு கடற்படை சென்றது. ஆனால் அது இலங்கை கடற்படை.
இந்திய கடற்படை கப்பல் புறப்பட தயாராகியிருந்த போதும், அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்தக் கப்பல் புறப்படவில்லை.
எனினும், திட்டம் மாற்றப்பட்டமை குறித்து அப்போதைய காங்கிரஸ் தலைமையினால் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக குறித்த இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தொடர்பிலும், போர் தொடர்பிலும் சுப்ரமணியன் சுவாமி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புது டில்லியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ அதில் கலந்து கொண்டிருந்தார். இதேநேரம், தமது இந்திய விஜயத்தின் போது அந்த நாட்டு ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தகவல்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இறுதிப் போர் குறித்து தற்போது மேற்கண்ட தகவலை சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.