விமானத்தில் வந்து கொழும்பு நகரைத் தாக்கி அழிக்கலாம் என்ற அச்சம் அரசாங்கத்திடம்

விமானத்தில் வந்து கொழும்பு நகரைத் தாக்கி அழிக்கலாம் என்ற அச்சம் அரசாங்கத்திடம்

இறுதி யுத்தத்தின் இறுதி இரு வாரங்களிலும் விடுதலைப் புலிகள் பலமான நிலையிலேயே போரிட்டு வந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா சபையில் பங்கேற்க நியூ யோர்க் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால அங்கு இலங்கைச் சமூக த்தினரைச் சந்தித்த போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இறுதி தருணத்திலும், அவர்கள் மீண்டெழுந்து விமானத்தில் வந்து கொழும்பு நகரைத் தாக்கி அழிக்கலாம் என்ற அச்சம் அரசாங்கத்திடம், மேலோங்கி இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, தங்களைப் பாதுகா த்துக் கொள்வதற்காக இறுதி தருணத்தில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், தானே யுத்தத்தினை முடித்து வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் நிறைவடைந்த இறுதி தருண ங்களை எல்லோரையும் விட நானே நன்கு அறிந்தவன். யுத்தத்தின் இறுதி இரு வாரங்கள் நானே நாட்டின் பதில் பாதுகாப்பு அமை ச்சராக இருந்தேன்.

முன்னாள் ஜனாதிபதியோ, முன்னாள் பிரதமரோ, இராணுவத் தளபதியோ, முன் னாள் பாதுகாப்புச் செயலாளரோ யுத்தத்தை வெற்றி கொண்ட இரு வாரங்களில் நாட்டில் இருக்கவில்லை.

இது குறித்து பலருக்கு ஞாபகம் இருக் காது. அவர்கள் ஏன் நாட்டை விட்டு சென்றார்கள் என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் ஏன் சென்றார்கள் என்று எனக்கு தெரியும்.

விடுதலைப்புலிகள் விமானம் மூலம் வந்து கொழும்பில் தாக்குதல் நடத்தும் போது, கொழும்பில் ஒரு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் யுத்தத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை. அவர்கள் தென் னிந்தியாவில் அதாவது சென்னையிலோ, அல்லது வேறு எங்கு காட்டுப்பகுதியிலிரு ந்தோ விமானம் மூலம் வந்து கொழும்பில் குண்டு மழை பொழிந்து கொழும்பை நாச ப்படுத்துவார்கள் என்று, அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்திருந்தது.

அதனால்தான் அவர்கள் அனைவரும் பயந்து நாட்டை விட்டு வெளியேறினார்கள். இதுதான் உண்மைக் கதை. இந்த இரு வாரங்களில் நான் கொழும்பில் இருக்கவில்லை.

என் இருப்பிடத்தை அறிந்து கொள்வார்கள் என்ற காரணத்தினால் நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலேயே தங்கியிருந்தேன். இதுதான் யுத்தத்தின் அனுபவம். விடுதலைப் புலி களின் ஐந்து தாக்குதல்களை எதிர் கொண்ட வன் நான் என தெரிவித்துள்ளார்.