March 2019

சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.
5. அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.

வேதனையில் உம்மை நான் நினைக்கிறேன் Song

வேதனையில் உம்மை நான் நினைக்கிறேன் இன்பத்தில் உம்மை நான் மறக்கிறேன் பாவ குழியில் விழுந்து விட்டதினால்
செய்த நன்மைகளை மறந்தேனய்யா உம்மாலே தான்எனக்கு உயர்வு தான் ஐயா உம்மை விட எனக்கு யாரும் இல்லை எப்போதும் என்னோடு இருக்கணும் இயேசையா

அரசியல் பிரமுகர் உதவியுடன் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பினோம்!

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, பெண்களை தன் வலையில் வீழ்த்தியது குறித்து சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இவ்வழக்கில் கைதான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசிடம் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கடந்த 15-ந்தேதி கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கில் வேறு யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது

போலீசாரின் கிடுக்கிபிடி கேள்விகளுக்கு முதலில் திருநாவுக்கரசு மழுப்பலாக பதில் அளித்தார். எனினும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2016-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்தேன். எனக்கு கல்லூரியில் நிறைய மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. வட்டித்தொழில் மூலம் என்னிடம் பணம் புரண்டது. இதனால் நண்பர்கள், தோழிகளுக்கு ஆடம்பரமாக செலவு செய்தேன்.


இதனால் மாணவிகள் என்னை நம்பினர். அப்போது அவர்களின் செல்போன் எண்ணை வாங்கி, நண்பர் சபரிராஜனிடம் கொடுத்தேன். அவர் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பெண்களை வலையில் வீழ்த்தி விடுவார். அவரிடம் மாட்டிக்கொண்ட பெண்களை காரில் சுற்றுலா செல்லலாம் என அழைப்பார்.இதை நம்பி அவருடன் வரும் பெண்களை ஆள் இல்லாத இடத்துக்கு அழைத்து வந்து, அவர் பாலியல் சீண்டல் செய்வார். இதை சதீஷ், திருநாவுக்கரசு ஆகியோர் மறைந்திருந்து வீடியோ எடுப்பார்கள். பின்னர் அதை காட்டி பெண்களை மிரட்டினோம். சில பெண்களை அனுபவித்தோம். சிலரிடம் பணம், நகை பறித்தோம்.

இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அரசியல் பிரமுகர் உதவியுடன் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பினோம். என்றாலும் கடந்த மாதம் ஒரு மாணவி எங்கள் மீது கொடுத்த புகார் விஸ்வரூபம் எடுத்ததால் போலீசில் சிக்கி கொண்டோம்.

தனிப்படை போலீசார் என்னை தேடுவதாக போலீஸ் ஒருவர் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. உடனே நான் ஆந்திராவுக்கு தப்பி சென்று திருப்பதியில் பதுங்கி இருந்தேன். பயத்திலும் பாதுகாப்புக்கும் சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். இதில், புகார் கொடுத்த பெண்ணை நான் பார்த்ததே கிடையாது, வழக்கில் என்னை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறி வழக்கை திசை திருப்ப நினைத்தேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.