தமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி ?

தமிழ் ஈழம் கிடைக்க என்னதான் வழி ?

இன்று அனைத்து தமிழ் மக்களின் பார்வையும் ஜெனிவாவை நோக்கி திரும்பியுள்ளது.  காரணம் தமிழன்அழியும்போது சர்வதேசம் கண்டும் காணாமல் இருந்தது தமிழன் நீதி கேட்டுப் போராடும் அழுத்தம்  காரணமாக  இலங்கை அரசுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை  கொண்டு வரபோகின்றதாக சொல்கிறார்கள். இவர்கள் சொல்வதைப் போல செய்ய  போகிறதுமில்லை  அப்படியே நிறைவேற்றினாலும் இலங்கை
அரசை மிரட்டி தங்களது  சொந்த  நலனைப்  பெற்று  கொள்வதற்காகதான். அதனால்தான் தமிழர் கடந்த காலத்தைப் போல் நம்பி ஏமாறாமல் ஒற்றுமையுடனும் மிகுந்த  விழிப்புடனும்  போராட்டத்தை  முன்னெடுத்து வருகின்றனர் 

அதன்  அழுத்தமே  ஐக்கிய  நாட்டு  சபையை இப்படி பேச வைக்கிறது. இதில் இந்திய அரசின் பங்கை தமிழர் எதிர் பார்க்கவில்லை அவர்கள் வழமை  போலவே கழுத்தறுத்து விடுவர். சிலவேளை இலங்கை அரசை எதிர்த்து வாக்களிகலாம் அது சர்வதேசத்தில் தமிழர்களின் போராட்டத்தினால் அன்றி வேறு இல்லை. இந்திய மத்திய  அரசானது தாங்கள்தான்  தமிழரின் பாதுகாவலர் போல பிரச்சாரம் செய்யலாம். ஆனால் தமிழர்கள் எளிதில் பழைய அனுபவத்தை மறக்கமாட்டார்கள், ஏமாறவும்  மாட்டார்கள்,  தமிழ் ஈழம் கிடைக்க  என்னதான் வழி ?
நான் அண்மையில் வாசித்த குறிப்பு என்னை சிந்திக்க வைத்தது எனது சிந்தனையில் பட்டத்தை உங்களுடன் பகிந்து கொள்கின்றேன் இது  நிறைவேறுமா  எனக்  கேட்டால்  எனக்குத்  தெரியாது   ஆனாலும்  இந்த வழியிலும் முயற்சிப்பது நல்லது  என நினைக்கிறேன்
இந்த நூ
ற்றாண்டின் சித்ர் என  அழைக்கப்படும்யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அருளிய  தத்துவக்  குறிப்பு; 


''நமது ஐவகைக் கடமைகளில் கடைசியில் வரும் உலகக் கடமையினை ஆற்றுவதில் முடிந்த வரையில் மிகுதியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பொருளிலோ, செல்வாக்கிலோ, உடல் கட்டிலோ போதிய வலிவு இல்லாத நாம் எப்படி உலக நலக் கடமையினை ஏற்று ஆற்ற முடியும் என்று எவரும் மலைக்கவோ, சோர்வுறவோ வேண்டாம்.

        உங்களிடம் தவத்தால் உறுதி பெற்ற மனோ வலிவு இருக்கிறது. உலக நலத்திற்காக உங்கள் விருப்பத்தைச் சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலித்துக் கொள்ளுங்கள். சிதாகாசமாக இயங்கும் உங்கள் உயிராற்றலிலிருந்து கிளம்பும் அந்த உயர்ந்த நினைவு அலை மகாகாசம் என்ற பேரியக்கத் தொடர்கள் உயிரோடு கலந்து அந்த விருப்பம் நிறைவேற வழிவகுத்துக் கொள்ளும்.

        உங்கள் கடமைகளில் ஒன்றாக நாள்தோறும் "வாழ்க வையகம்" என்ற மந்திரத்தைப் பத்து தடவையாகிலும் நமது உடன் பிறந்தவர்களாகிய உலக மக்கள் அனைவரையும் விரிவாக நினைந்து ஒலித்துக் கொண்டிருங்கள்.

        அன்பர்கள் பலருடைய இத்தகைய எண்ண உறுதி செயல்படுத்துவதற்காக எந்த நாட்டிலோ, ஒரு வெற்றி வீரனைப் பிறக்கச் செய்யலாம். அல்லது இப்போது உள்ள உலக நல நாட்டம் கொண்ட ஒருவரையோ, பலரையோ உலக நலத் தொண்டில் முழுமையாகத் திருப்பிவிடலாம். பேரியக்கத் தொடர் களத்தில் அத்தகைய மாபெரும் ஆற்றல் அடங்கியுள்ளது.''
இந்த  தத்துவ குறிப்பின்படி உடல் கட்டிலோ  வலுவிலோ  அல்ல  சங்கற்பமாக்கிப் பல தடவை உள்ளுக்குள் ஒலிபதில்  வெற்றி தங்கியுள்ளது ஒருவேளை நீங்கள் இந்த  கலையை கற்றிருந்தால் உங்களது  தியான  வேளையில் தமிழ் ஈழம் விரைவில் கிடைக்கவேண்டும் வாழ்கவளமுடன் என மூன்று தடவை சொல்லவும் . எனவே தாமதிக்காது இன்றே தொடங்குங்கள் .