மனித உயிர்களை பறிக்கும் Blue Whale Game: பெற்றோர்களே உஷார்
இன்றைய இளையதலைமுறையினரை ஆட்டிவிக்க வந்துள்ளது ப்ளூவேல்(Blue Whale) கேம்.இந்த விளையாட்டை, செயலி போல பதிவிறக்கம் செய்து விளையாட முடியாது, ஆன்லைனில் மட்டுமே விளையாட முடியும்.
வித்தியாசம்,த்ரில் என்று சுற்றும் டீன்ஏஜ்களை குறி வைத்து விளையாடப்படும் இந்த விளையாட்டு ரஷ்யாவில் இருந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது.
இந்த விளையாட்டில் இணையும் விளையாட்டாளருக்கு தொடர்ந்து 50 நாட்கள் Administartor வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுப்பார். தொடக்கத்தில் அதிகாலையில் பேய் படம் பார்க்க வேண்டும், யாரிடமும் பேசக்கூடாது, பயத்திலிருந்து வெளியே வா என்பது போன்ற டாஸ்க்குள் கொடுக்கப்பட்டு அவற்றை புகைப்படம் எடுத்து பதிவிடச் சொல்வார்களாம்.
பின்னர் கையை கத்தியால் வெட்டு, மேம்பாலத்தில் நுனிப் பகுதிக்குச் செல், நீ தான் ப்ளூ வேல் என்பது போல டினேஷ்களை தனிமைப்படுத்தி அவர்களை கிட்டதட்ட சைக்கோவாக்கி 50வது டாஸ்க்காக தற்கொலைக்கு தூண்டுவார்களாம்.
2015 மற்றும் 2016 காலகட்டத்தில் இந்த விபரீத ஆன்லைன் விளையாட்டால் ரஷ்யாவில் மட்டும் 130 இளம் சிறார்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா, பிரேசில், அர்ஜென்டினா என்று உலக நாடுகளைக் கடந்து இந்த விளையாட்டு இந்தியாவிலும் காலெடுத்து வைத்துவிட்டது என்பது மும்பையில் சமீபத்தில் நடந்த சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.
மும்பையில் 14 வயது சிறுவன் இந்த விளையாட்டின் போது தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளான்.
மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஷ்,"ப்ளூ வேல் கேம் என்பது மிகவும் ஆபத்தான விளையாட்டாக உள்ளது. இதனால் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். இப்பிரச்னை குறித்து மத்திய அரசுடன் பேசப்பட்டுள்ளது,'' என்று கூறியுள்ளார்.
மேலும், பெற்றோர்களும் இந்த விளையாட்டு குறித்து அதிக எச்சரிக்கை கொள்ள வேண்டும்