ஜெகத் ஜயசூரிய மீதான – போர்க்குற்ற வழக்கால் இலங்கைக்கு பிரச்சினை ! ஐ.நா அறிக்கையாளர் எச்சரிக்கை
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நாட்டில் தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு, இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மிகப்பெரிய பிரச்சினையாக உரு வெடுக்கலாம் என ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.
இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை உத்தரவாதங்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரிவ் தனது இரண்டு வாரகால விஜயத்தின் முடிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் இராணுவத் தளபதி ஜயசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்ப ட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசா ங்கம் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
\”உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ பொறுப்புக் கூறல் கோரப்படலாம்\” என அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் 2009ஆம் ஆண்டு, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் காணாமல் ஆக்கப்படுவதற்கும்,
சித்திர வதை செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்த ராணுவ குழுக்களுக்கு பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார் என தென் அமெரிக்கா நாடுகளில் மனித உரிமை குழுக்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் ஜயசூரியவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு தாக்கல் செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்த மோதல்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உரிய நம்பகமான பொறுப்பு கூறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் பப்லோ டி கிரிவ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதற் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்த அவர், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்துடன், நான்கு விஜயங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கும் நோக்கில் முதல் மூன்று விஜயங்களும் அமைந்திருந்ததாகக் கூறிய அவர், இலங்கை அரசு உறுதியான தீர்மா னங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஒரு சிக்கலான சூழலில், ஐ.நாவின் மனித உரிமைப்
பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் தேவைக்காக இந்த விஜயம் அமைந்துள்ளதாக சுட் டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிய சட்டம் உரு வாக்கப்பட வேண்டும். காணாமல் போனோ ருக்கான அலுவலகம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அதற்கான அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது அரச தரப்பினர் மட்டுமல்லாமல் நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கும் விஜயம் செய்து பல் வேறு தரப்பினரையும், பாதிப்புக்கு உள்ளானவர்களையும் சந்தித்துள்ளதாகவும், இந்த சந்திப்புக்கள் தொடர்பிலான அறிக்கையும், நிலைமைகள் தொடர்பிலான தனது பரிந்து ரைகளையும் உள்ளடக்கிய முழுமையான தோர் அறிக்கை அடுத்த வருடம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.