20 நிமிடங்களிலேயே புகைபிடித்தலை கைவிட்டால் மாற்றம் உண்டா?

20 நிமிடங்களிலேயே புகைபிடித்தலை கைவிட்டால் மாற்றம் உண்டா?

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.

* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டால் அடுத்த 20 நிமிடங்களிலேயே ரத்த அழுத்தம் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். நாடித்துடிப்பும் சீராகும்.



* புகைப்பிடிப்பதால் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவில் சீரற்ற நிலை உருவாகும். அந்த பழக்கத்தை முழுமையாக கைவிடும் பட்சத்தில் 8 மணி நேரத்திலேயே ஆக்சிஜன் அளவு இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். ரத்தத்தில் இருக்கும் நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு அளவும் குறைய தொடங்கிவிடும்.


* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபட்ட 48 மணி நேரத்திற்குள் உடலில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறிவிடும். நுரையீரல் சீராக செயல்பட தொடங்கி சளித்தொல்லை குறையும். சாப்பிடும் உணவின் சுவையிலும், வாசனையிலும் மாற்றத்தை உணரலாம்.



* 72 மணி நேரத்திற்கு பிறகு சுவாசம் தொடர்பான பிரச்சினைகளில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். அதற்கான சிகிச்சைகளை தொடரும்போது படிப்படியாக சுவாச பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். உடலில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.



* புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட 2 முதல் 12 வாரங்களில் ஒட்டுமொத்தமாக ரத்த ஓட்டம் சீராகும்.



* மூன்று முதல் ஒன்பது மாதங்களில் நுரையீரலின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும். சளி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு விடலாம்.



* ஓராண்டு கழித்து புகைப்பிடிப்பவர்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.