<title>அமெரிக்காவின் | முனைங்
Showing posts with label அமெரிக்காவின். Show all posts

நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவுவைத்துக் கொள்ள, அதிகம் விரும்புவார் ட்ரம்

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் மைக்கேல் வுல்ப் என்பவர் 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்கின்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து உலகத்திற்கு தெரியாத பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த புத்தகம் அமெரிக்காவில் பிரச்சனையை ஏற்படுத்துமா..? என்று
பலரும் நினைத்துக் கொண்டு இருந்த போதே., அது டிரம்ப்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து வெளிவர இருக்கும் இந்த புத்தகத்தை 300 க்கும் அதிகமான நபர்களிடம் பேட்டி எடுத்து எழுதி இருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.

டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரிடம்  அவர் பேட்டி எடுத்துள்ளார். அதனோடு., ரஷ்யாவில் இருக்கும் சில நபர்களிடமும் மைக்கேல் வுல்ப்  பேட்டி எடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது. அது தற்போது இந்த புத்தகத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

இந்த புத்தகத்தில் இருக்கும் இன்னொரு மிக முக்கியமான குற்றச்சாட்டு., டிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

அவர் தன் நண்பர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சில பேட்டி அளித்துள்ளனர். இந்த புத்தகத்தினால் வெள்ளை மளிகை கலக்கத்தில் உள்ளது.