ஏன் தேவனை ஆராதிக்க வேண்டும்?
தேவனை ஆராதிப்பதின் எண்ணமும்;, வாஞ்சையும் பிறப்பிலேயே நம் உள்ளத்தில் பிறந்திருக்கிறது. இது யாரோ ஒருவர் கற்றுக் கொடுப்பதுமில்லை அல்லது பழக்குவிப்பதும் இல்லை. மாறாக, பிறப்பிலே தேவனால் உருவாக்கப்பட்டுள்ளது. காட்டுவாசியைப் பார்த்தாலும், படித்தவர்களைப் பார்த்தாலும் தேவனை ஆராதிக்கிறார்கள். சிலர் பணத்தையும், சிலைகளையும், இன்னும் சிலர் முற்பிதாக்களையும் மற்றும் மரித்த ஆவிகளையும் ஆராதிக்கிறார்கள். கேள்வி நாம் ஆராதிப்பதைப் பற்றி அல்ல, ஆனால் யாரை ஆராதிக்கிறோம் என்பதே!
ஏதாவது ஒரு குறிக்கோளை வாழ்க்கையில் முன் குறித்து அடைய பிரயாசப்பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை அதை அடைந்த பிற்பாடு உண்மையான திருப்தியை பெற்றிருக்கிறீர்களா? இல்லை. ஒரு வெறுமையை தான் உணர முடியும். பொதுவாக வாழ்க்கைச் செழிப்பாக இருக்க பணம் அவசியம். ஆகவே அதை சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஒருவேளை நீ;ங்கள் இருக்கக் கூடும். அப்படியே அதை நீங்கள் அடைந்த பிற்பாடு ஏதாவது மாற்றங்கள் அடைந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அந்த பணம் வந்த பிற்பாடு பிரச்சினைகளும், கடன்களும் கூடவே வரும். அதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி அது நமக்கு ஆசையாக மாறும்.
ஆனால் இவை எல்லாம் நம்முடைய வாழ்வில் அடி மனதில் ஒரு வெறுமையைக் காட்டும். இந்த வெறுமையை கடவுள் தான் மாற்ற முடியும். ஆனால் இன்று மனிதர்கள் உள்ளத்திலிருக்கும் வெறுமையை மாற்றுவதற்க்காக காதலர்களைத் தேடுகிறார்கள், நல்ல நண்பர்களைத் தேடுகிறார்கள், சின்னச் சின்ன இன்பங்களைத் தேடுகிறார்கள். இவைகள் சிறிது நேரம் சந்தோஷம் போல் காணப்படும், ஆனால் தனிமையாய் இருக்கும் பொழுது இவைகள் எல்லாம் மாயையும், வேதனையும் என்றுத் தெரியும்.
இந்த வெறுமையை எப்படி மாற்ற முடியும்?
ஆதியிலே பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாக. இருந்தது. தேவன் அதை சீர்படுத்தி நன்மையாக மாற்றினார். நம்மைப் படைத்த ஆண்டவரோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்து ஐக்கியப்படும் பொழுது தான் அந்த வெறுமை நம்மில் அகற்றப்பட்டு, சந்தோஷமும் சமாதானமும் அடைகிறான். வாழ்க்கைக்கான சரியான அர்த்தத்தை விளங்கிக் கொள்ளவும் முடியும். நெருங்கி ஐக்கியத்தை ஏற்படுத்துவது ஆராதனையின் ஒரு பகுதி. ஆகவே உண்மையான தேவனை ஆராதிப்பதன் மூலமாக அந்த வெறுமை மாற்றப்பட்டு ஒரு பரிபூரண ஜீவியத்தை அனுபவிக்க முடியும்.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத் 6:33
ஆராதனை (பூஜை, தொழுகை) என்றால் தகுதியில்லாத நமக்கு கொடுக்கப்பட்ட காரியங்களின் கனத்தை, மகிமையை ஆண்டவருக்கு செலுத்துவது தான் ஆராதனை.
நம்மையே தேவனுக்கு பரிசுத்தமாக அர்ப்பணிப்பது புத்தியுள்ள ஆராதனை.
ஆராதனையின் சாராம்சம் இருதயத்தின் ஆழத்திலிருந்து வெளிக்கொண்டு வரும் அன்பு, துதி, மரியாதை மற்றும் புகழ் ஆண்டவருக்கு செலுத்துதல்.
நிம்மதியை தேடி அலையவேண்டாம்
தேவனுக்கு ஆராதனை செலுத்துங்கள்
கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். சங்29:2
நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர். சங்99:5
1. பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
2. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
3. கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
4. அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
5. கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
நன்றி http://www.tamilarticle.com/article.php?list=Basics#

நிம்மதி உங்களை தேடி வரும்.