நீ என் மகன் நான் உனது தகப்பன்
என் அன்பு மகனே ஏன் கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன் என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக மற்றும் உங்களில் பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும் நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள் மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன் நான் உனது தகப்பன் எனவே தான் நான் உனக்காக அனைத்து பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் . நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில் இருந்து விடுதலை அளிக்க முடியாது. வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும். நான் நியாயம் தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன். எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .