Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது ?

Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது ?



மைக்ரோசொப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்காக அறிமுகம் செய்த இயங்குதளமே Windows Phone ஆகும்.

எனினும் இவ் இயங்குதளமானது ஏனைய மொபைல் இயங்குதளங்களைப் போன்று பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறவில்லை.

இவ்வாறிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது மற்றுமொரு சேவையான ஸ்கைப் சேவைக்கான அப்பிளிக்கேஷன் எதிர்காலத்தில் Windows Phone இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு கிடைக்காது என அறிவித்துள்ளது.

இது எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.

மேலும் இச் செயற்பாடானது நிரந்தரமானதாகும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் ஒருபோதும் Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் பின்வருமாறு தெரிவித்துள்ளது,

Windows Phone 8, Windows Phone 8.1 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களில் ஸ்கைப் அப்பிளிக்கேஷன் பாவனையில் உள்ளது. எனினும் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாது. இதற்கு வருந்துகின்றோம் என தெரிவித்துள்ளது.Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது ?