தமிழ் மாணவிக்கு, கனடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை.. நாடு கடத்தப்படும் அபாயம் ..
கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர். இவர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்த போதும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திய ஜனநாயக கட்சி உறுப்பினர் Alexandre Boulerice தெரிவித்துள்ளார். 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார் என கனேடிய ஊடகம் குறிப்பிட்டிருந்தது. பிரஞ்சு சரளமாக தமிழ் பேச கூடிய குறித்த மாணவி scolaire de Montréal ஆணையத்தினால் விருதொன்றையும் பெற்றிருக்க வேண்டியவர் என குறிப்பிடப்படுகின்றது.
நாடு கடத்தலுக்கு எதிராக கனேடிய ஊடகங்கள் உட்பட ஐம்பத்திற்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக மாணவியின் தந்தை ரொபர்ட் ராஜரட்ணம் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். கணிதத்தில் 94 வீத சித்தியை பெற்ற திறமையான இந்த மாணவியின் குடியுரிமை நிலை தொடர்பில் கவனம் செலுத்த அனுமதித்தால் அவரால் கனேடிய சமூகம் பெரிதும் பயன் பெறும் என்று நம்புவதாக scolaire de Montréal ஆணையத்தின் தலைவர் Catherine Harel-Bourdon மாணவிக்கு ஆதரவாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். scolaire de Montréal ஆணையத்தின் ஆணையர்கள், புதனன்று அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
லியோனி பவித்ரா மற்றும் அவரது குடும்பத்தின் நாடு கடத்தல் தொடர்பில் கனேடிய பிரதமர் கவனம் செலுத்துவதுடன் ஊடாக இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக கியூபெக் solidaire இன் அமீர் காடிர் தெரிவித்துள்ளார். கியூபெக் ஏற்றுக்கொண்டமை மற்றும் கற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கான சான்றிதழ்களை மாணவி பெற்றுள்ளார். இந்த நிலையில் கல்லூரி அவரை ஏற்றுக் கொண்டாலும் பவித்திரா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொது நிர்வாகத்தில் காணப்படுகின்ற முரண்பாடே இதற்கு காரணம் என Boulerice தெரிவித்துள்ளார். இதேவேளை, புகலிடம் கோரிய விண்ணப்பங்கள் தொடர்பில் மாகாண அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் வழங்கவில்லை என Heurtel அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை மாணவி மற்றும் குடும்பத்தினரின் நாடு கடத்தல் பிரச்சினை ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.