குடற் புற்று நோயை நீக்கும், போிச்சம்
பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும். குடலியக்க பிரச்சினையால் அதிகம் சங்கடப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. இவ்வாறு சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கி, குடலியக்கம் சீராக்கப்படும். முக்கியமாக குடல் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும். குடற் புற்று நோயை நீக்கும் போிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்கலாம். மற்றும் உடலின் கொலஸ்ரோல் உறிஞ்சும் அளவை இது குறைக்கின்றது. இதனால் கொலஸ்ரோல் பிரச்சனையால் இதய நோய் வருவது தடுக்கப்படும். பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும், எலும்புகளை பலப்படுத்தும், இளைப்பு நோயைக் குணப்படுத்தும், புண்களை ஆற்றும் மற்றும் மூட்டுவலியை நீக்கும்.