உந்தன் உயிரிலும் மேலாக
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
இடி என இன்னல்கள் வந்தாலும்
வெண்பனி போல் மாற்றீனீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும்
நீர் என்னை ஆசீர்வதித்தீர்
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எந்தன் உயிரை கொல்ல தேடியபோது
உந்தன் சிறகுகளில் மறைத்து காத்தீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன்
நீர் எனக்கு அடைக்கலமே