<title>அடிக்கடி | முனைங்
Showing posts with label அடிக்கடி. Show all posts

உண்மையைக் கூறுவதால் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமாட்டோம்! – முதலமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமாட்டோம் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார். அந்த நாள் இன்று வந்திடாதோ என்று அமைச்சர் விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை பயங்கரவாதியாக அடையாளப்படுத்தி அவரது அமைச்சுப் பதவியை பறிக்க வேண்டும் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆவேசமாக கூறிவருவது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்கள் போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தவிர, பாதுகாப்பாகவே இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதனால் இந்த உண்மையை கூறிய விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதையோ அல்லது அவரது அமைச்சுப் பதவியை பறிப்பதோ நியாயமாகி விட முடியாது.

தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள் குறித்த உண்மையை கூறுபவர்களை பயங்கரவாதிகளாக அடையாயப்படுத்துவதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவை குறித்து உண்மையான கலந்துரையாடல்களை நடத்த முன்வர வேண்டும்.

வடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரித்துண்டு. நான் அண்றைய கூட்டத்தில் இருந்தேன். ஆனால் கௌரவ விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை.

முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு இருள் வந்த பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்று அப்படியா? வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன.

இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள்; பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன். நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது.அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக தென்னிலங்கை அரசியல் களத்தில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புக்களும், வெறுப்புக்களும் வெறுமனே அவருக்கு எதிரானவை அல்ல. தமிழ் மக்கள் மீது தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கும் வெறுப்பும், சந்தேகமும், அச்சமுமே வெளிப்படுகிறது.

தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் அமைச்சர் விஜயகலாவிற்கு எதிரானவை அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையூம் பிரதிபலிக்கின்றது. எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஷ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல் வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் நாங்கள் எங்கள் உரித்துக்கள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன். பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம். அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது.

புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆகவே அமைச்சர் விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக சேவைகள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சர், விஜயகலா மகேஷவரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது தொடர்பிலும் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

உண்மையை உணர்ந்த பின்னரே ஒருவரின் வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க கௌரவ இரஞ்சன் இராமநாயக்க அவர்களை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன். இரத்தினப்பிரிய பந்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார்.

எங்கள் நால்வரிடையில் விஜயகலாவும் சிவாஜிலிங்கமும் நானுமே இல்லாதவர்கள். எமது மக்களுக்குப் பாதுகாப்பில்லை; எமக்கு அதிகாரங்கள் இல்லை; எமது கருத்துக்களுக்கு தெற்கில் இடமில்லைஇ எமக்கு மதிப்பில்லை; புறக்கணிக்கப்படுகின்றோம்; ஆக்கிரமிக்கப்படுகின்றோம். ஆகவே இரத்தினப்பிரிய பந்து போல் எமக்கு வேண்டுவனவற்றை உடனே வழங்க கௌரவ இரஞ்சன் இராமநாயக்க முன்வரவேண்டும்.

எம்மிடம் இல்லாதவற்றை அவரின் அரசாங்கத்தின் ஊடாக எங்களுக்கு வழங்கினால் நாமும் அவர் மேல் அன்பும் மரியாதையும் காட்டுவோம். வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல கௌரவ பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிசாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று” எனப் பதிலளித்தார்.

ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்ஸ்

நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.வித, விதமான ஸ்மார்ட்போன்கள் வருகையால் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. தற்கால மனிதர்களின் சிறந்த நண்பனாக விளங்குவது செல்போன்தான். அதனுடன் மனிதன் செலவிடும் நேரம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

படுக்கையில் கூட செல்போன் பக்கத்திலேயே இருக்கிறது. தூங்குவதும், துயில் எழுவதும் செல்போனை பார்த்துவிட்டு தான் நடக்கிறது. அந்த அளவுக்கு செல்போன்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றன.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் செல்போன்களை இன்றைக்கு அதிகமாக சார்ந்திருக்கிறோம். திரைப்படங்கள், நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பார்க்க தொலைக்காட்சியை போல செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

அந்த வகையில், நம்மில் பலரும் செல்போன் கேம்ஸ் விளையாட நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள். தூங்கும் நேரம், பணியில் இருக்கும் நேரத்தை கூட செல்போன் கேம்ஸ் களவாடிவிடுகிறது. இதனால் ஏற்படும் விபரீதத்தை பலரும் உணர்வதில்லை.

காரணம், ஸ்மார்ட்போன் கேம்ஸ் விளையாடுவது இயல்பான செயல் என்று நம்புகிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, சோம்பலும் அதிகமாகிறதாம்.

நம் எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மனிதன் நிம்மதிக்கு அடிப்படையான விஷயம். நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் நமது எண்ண வெளிப்பாடுகள் மற்றும் உரையாடல்கள் குறைகின்றன. இது நம்மை ஆழ்ந்த அழுத்தத்துக்கு கொண்டு செல்கிறது.

அதுமட்டுமின்றி, இந்த பழக்கம் ஒருவித போதை என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு. அதாவது, ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கேம்ஸ் விளையாடுபவர்கள் அந்த போதைக்கு அடிமையானவர்களாக கருதப்படுகிறார்கள்.

‘கூகுள் பிளே ஸ்டோர்’ நமக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இலவச விளையாட்டுகளை தருகிறது. குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான கேம்சை தேர்வு செய்து விளையாடுகின்றனர். நீண்ட நேர செல்போன் விளையாட்டுக்கு அடிமையானவர்கள் மீண்டு வருவது எளிதான காரியமல்ல.

நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கேம்ஸ் விளையாடும்போது வெவ்வேறு உடல் தோரணைகள் கொண்டு விளையாடுவது வழக்கம். இது நமது கண், காது, கை போன்ற உறுப்புகளையும், மனித உடல் செயல்பாட்டின் தூண்களாக விளங்கும் முதுகு எலும்பையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.அதாவது, செல்போன் கேம்ஸ் விளையாடும்போது, இருக்கையில் அமர்ந்து, முதுகெலும்பை 90 டிகிரி நேரான கோட்டில் வைத்து, தலையை மிகவும் குனியாமல், கைகளை ஒரே கோணத்தில் வைத்து, 10 முதல் 20 நிமிடங்கள் விளையாடினால் அது விளையாட்டாக அமையும். அதே சமயம், படுக்கையில் படுத்துக்கொண்டு அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து விளையாடினால் அது கண்டிப்பாக உடலுக்கு பல பாதிப்புகளை கொண்டுவந்து சேர்க்கும்.

விளையாடுபவர்கள் பெரும்பாலும் தன்னையும், தன் சூழலையும் மறக்கின்றனர். இது அவர்களின் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கிறது. ஒரு மனிதன் நீண்ட நேரம் ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சுவாசித்துக் கொண்டு இருப்பதால், சுற்றுச்சூழல் தரும் மாசற்ற மற்றும் சுகாதார சூழல் அவருக்கு அங்கு கிடைக்காமல் போகிறது.

மனிதன் சுத்தமான நீர் மற்றும் உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நாம் சுவாசிக்கும் காற்று. நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பதால், நமக்கு ஆக்சிஜன் குறைவாகவும், மாசடைந்தும் கிடைக்க நேர்கிறது.

ஏற்கனவே மனிதன் 6-ல் இருந்து 8 மணி நேரம் உறங்குவதால் அவனுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களும் தங்கள் பங்குக்கு மனிதனை சிறைபிடிக்கின்றன.

மீதமுள்ள நேரத்திலாவது நாம் இயற்கையான சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதை மறந்து ஸ்மார்ட்போன் கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கிவிடுகிறோம். இது நமக்கு மட்டுமின்றி நம் சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது.

தூக்கமின்மைை-யும் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. நீண்ட நேரம் கண் விழித்து கேம்ஸ் விளையாடுவதால், நம் மூளை இயல்பான செயல்பாட்டுக்கு திரும்ப சில மணி நேரம் ஆகிறது. இரவில் கேம்ஸ் விளையாடுவது, நமது தூக்கத்தின் இயல்பை பெரிதும் பாதிக்கிறது.

கேம்ஸ் விளையாடுவதை நிறுத்திய பிறகும், நாம் அதன் ஒலி ஓட்டத்திலே உறங்குகிறோம். இது நமக்கு சிறப்பான தூக்கத்தை அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் ‘இன்சோம்னியா’ போன்ற தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு நாம் தள்ளப்படுவோம்.

கேம்ஸ் விளையாடும் சிலர் தங்களது தூக்கத்தில் கூட விளையாடுவது போல் கனவு காண நேரிடும். எனவே, இரவில் உறங்க செல்லும் முன்பு கேம்ஸ் விளையாடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஒரு பக்கம் பலவகையான கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ளும் நாம், நமது ஸ்மார்ட்போன் தரும் ஆபத்தான கதிர்வீச்சை உணர மறுக்கிறோம். பெரிதளவில் ஆய்வுகள் இல்லாத போதிலும், பல தன்னலமற்ற அமைப்புகள், ஸ்மார்ட்போன் மூலம் வரும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சை குறைக்க பரிந்துரைத்து வருகின்றன.

ஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால், அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை உணராமலேயே, அவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மனம், உடல், சமுதாயம், படிப்பு, வேலை, வருமானம் போன்ற மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

எனவே, நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.

உதவி பேராசிரியர் டாக்டர் ஜனார்த்தனன்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளதோடு ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தும் அவ்வாறான தன்மையில் அமைந்துள்ளதன் அடிப்படையில் அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு, இவ்வாரக் கேள்வி கொழும்பில் இருந்து வந்துள்ளது. கேள்வி பின்வருமாறு.

பத்திரிகையாளர் கேள்வி :- அடுத்த வாரம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில் :- 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது. இலங்கையின் அனுசரணையைப் பெறுவதற்காக மேற்கு நாடுகள் அந்தப் பிரேரணையின் காரத்தை பெருமளவுக்குக் குறைத்தன என்பது உங்களுக்குத் தெரியும். சர்வதேச சமூகம் தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சாதகமான முறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்படியும் அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.

இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. அடுத்தவாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன?

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு இப்போது ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டது. இன்னும் அது செயற்படத் தொடங்கவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் கைவாங்கப்படவில்லை. அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். பலர் சம்பந்தமாக வழக்குகள் பதியப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இனநெருக்கடிக்கான அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என்றே கூறலாம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம்.

இந்த நிலையில் சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது? சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுந்தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இருந்து வந்த நிஷா பிஸ்வால் அவர்களிடம் ஐ.நா மீண்டும் இருவருடங்கள் தவணை கொடுப்பதைப் பற்றி எனது ஆட்சேபணைகளை சென்ற வருட ஆரம்பத்தில் தெரிவித்த போது தமிழர்களை ஒரு போதும் அமெரிக்கா கைவிடாது என்றார். இப்பொழுது அவரும் பதவி இழந்துவிட்டார்.

எமது பெரும்பான்மையின அரசாங்கம் நெருக்குதல் இல்லாவிட்டால் ஒரு போதும் எமது உரிமைகளைத் தரமுன்வராது என்பதே எனது கருத்து. நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் முன்வராது. எந்தளவுக்கு நெருக்குதல்களை பிற அரசாங்கங்கள் உண்டு பண்ணுவன என்பது நாம் அவர்களுடன் சேர்ந்து பேசி ஏற்படுத்த வேண்டியதொன்று. காலங் கடந்தால் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” ஆகிவிடும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கருதுகின்றேன்.

சாவே இல்லாத மனிதர் 2050 ல் இருப்பார்கள்

2050ம் ஆண்டில் சாவு அற்ற மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வார்கள். இது அதிசயமாக இருக்கும் ஆனால் உண்மை. மனித வாழ்வு என்பது, இறுதியில் பார்த்தால் மூளையில் உள்ள நினைவுகள் தான். உடல் ஊனமாகிப் போகும். ஆனால் உண்மையில் மனித வாழ்வு என்பது, ஒருவரின் ஞாபகங்களே ஆகும். மூளை எப்போது இறக்கிறதோ. அன்றே மனிதனும் இறந்துவிடுகிறான் என்று பொருள். ஆனால் பலர் இதனை ஏற்க்க மாட்டார்கள்.

தற்போது விஞ்ஞானிகள் மனித மூளையில் உள்ள நினைவு செல்களை அப்படியே காப்பி செய்து. அதனை வைத்திருக்க கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் அதில் பயன் எதுவும் இல்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு சாதனம், மூளையை போல இயங்க வல்லது. எனவே எமது ஞாபங்களை காப்பி செய்து அந்த சாதனத்தினுள் செலுத்தினால் போதும். அந்த மூளை உயிர்பெற்று விடும். இதனூடாக ஒருவர் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். தற்போது இந்த இயந்திரத்தோடு உதடுகளை, கைகளை மற்றும் கால்களை பொருத்தவும்.

செயற்க்கை நியூரான்கள் கொண்டு அசைவுகளை ஏற்பாடுத்தவும் முனைகிறார்கள். இன்னும் 30 வருடங்களில் இது சாத்தியமாகிவிடும். இனி நாம் காரை வாங்கி வைத்திருப்பது போல இந்த சாதனத்தை வாங்கி, எமது நினைவுகளை மாற்றினால் போதும். எமது உடல் இறந்த பின்னனும் எமது மூளை உயிர்வாழும். இதனால் மனிதன் சாவைக் கடந்தும் வாழப் போகிறான்… இதுவே வருங்கால உண்மை ஆகும்…

நாட்டைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது

நாட்டைத் துண்டாடும் அல்லது பிளவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிலரால் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் நாட்டை துண்டாடவோ அல்லது பிளவுபடுத்தவோ தான் ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் எவருக்கும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொய்ப் பிரசாரங்களிலும் சந்தர்ப்பவாத அரசியல் தந்திரோபாயங்களிலும் இன்று நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதுடன் நாடு பயணிக்கும் பாதையை அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று நாட்டிற்கு தேவையாக இருப்பது மன்னராட்சி முறையன்றி மக்களாட்சி முறையே ஆகும் என்பதுடன் இதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அத்தகையதொரு அரசியல் மற்றும் சமூக மாற்றத்தினை நாட்டில் ஏற்படுத்தவே கடந்த மூன்று வருட காலமாக தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஊழல் அரசியல்வாதிகள் இன்று ஒரே குழுவாக இணைந்திருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன், அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவோ அல்லது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவோ அன்றி தமது தனிப்பட்ட அபிவிருத்திக்காகவே அதிகாரத்தைக் கேட்கின்றனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும், அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்து அரச வளங்களை அழிவடையச் செய்யும் அரசியல்வாதிக்கு எதிராக கடந்த ஆட்சி காலத்தில் எதுவித நடவடிக்கைகளும் அப்போதைய தலைவர்களால் மேற்கொள்ளப்படாததுடன், அவற்றைப் பற்றி உரையாட கூட அவர்கள் விரும்பவில்லை என்பதனால் கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடிகள் அதிகரித்திருந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் என்றவகையில் தான் மத்திய வங்கி தலைமையகத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளைப் பற்றிய கலந்துரையாடலில் பங்குகொண்டபோது அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக உரையாடியமையினால், மறுநாள் காலை அலரிமாளிகைக்கு தன்னை அழைத்த முன்னாள் தலைவர் அரசாங்கத்தின் அமைச்சர் என்றவகையிலும் கட்சியின் பொதுச்செயலாளர் என்றவகையிலும் அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பாக பேசக்கூடாது எனவும் வேறு பயணமொன்றை மேற்கொள்ள தயாராகின்றீர்களா என தம்மிடம் கேட்டதாகவும் இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுவது மாத்திரமன்றி அது தொடர்பாக பேசக்கூட முடியாது எனில் மக்களின் நன்மைக்காக தனியானதொரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என தான் அன்று உறுதியாக தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் செயற்படுகையில் கட்சி, நிறம், பதவி, உறவுகள் மற்றும் நட்பு என்ற எந்தவொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளாததுடன், இன்று நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தமது சகோதரர்களுக்கும் அவ்விதமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை தான் செயலில் தற்போது காட்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் திம்புலாகல பிரதேச சபைக்கு போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதேசத்தின் மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மத தலைவர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன, என்.பி.சமந்த உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதனிடையே பொலன்னறுவை கலஹகல ஸ்ரீதர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதி இன்று முற்பகல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

“கருணை ஆட்சி – நிலையான நாடு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான அளித்து, நோயற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டம் மற்றும் ஜப்பான் கூட்டமைப்பின் பிரதான நிறைவேற்றதிகாரி கலாநிதி மிட்சுகி சுகியின் அன்பளிப்பில் இந்த நீர் சுத்திகரிப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

”எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் கலஹகல ஸ்ரீ தர்மராஜ விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அறநெறி பாடசாலைக் கட்டிடமும் இதன்போது ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.விகாராதிபதி பொலன்னறுவை பிரதேச பிரதான சங்க நாயக்கர் குருவாஓயே தம்மசித்தி நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரால் பிரித் பாராயணம் செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு இதன்போது ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் பொலன்னறுவை திம்புலாகல பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்கள் பலவற்றிலும் இன்று ஜனாதிபதி பங்குபற்றினார்.

முதலாவதாக திம்புலாகல, கல்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அதன்பின்னர் யாய 08 அரச மரத்தருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

ஜனாதிபதி, 1989 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், பொலன்னறுவை மக்களுக்காக மேற்கொண்ட முதலாவது அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாய 08 பாலத்தின் அருகே இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு பிரதேச மக்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் யாய 05 ஸ்ரீ விசுத்தாராம விகாரைக்கு அருகே இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அரலகங்வில மற்றும் விஜயபாபுர வட்டாரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்பின்னர் அரலகங்வில, அரசமர சந்தியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மிகுந்த வினைத்திறனுடனும் துரிதமாகவும் இடம்பெற்று வருவதாக வலியுறுத்தினார்.

ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயற்பட்ட உலக தலைவர்களுடன் அந்நாட்டு மக்களும் இணைந்து கொண்டுள்ளதைப் போல தாமும் மக்களுடன் இணைந்து ஊழல், மோசடி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரட்ன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சிங்களத் தலைவர்கள், குழம்பிய நிலையில் தமிழ் தலைவர்கள்!

ங்கள அரசியல் தலைவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளானர். நாங்கள் எமக்குள் தெளிவு இன்றி நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் பற்றிய சிந்தனையின்றி காற்றினால் கொண்டு செல்லப்படும் கடதாசி போல் நடந்து வருகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்கள் இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியான மௌனத்தையே சாதிக்கிறார்கள் என மக்கள் மத்தியிலிருந்து எழும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், ‘இப்பொழுதும் எம்முள் பலர் கேட்பது, ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்து பொருளாதார நன்மைகளைப் பெற பின்னிற்கின்றீர்கள் என்பதையே, இத்தருணத்தில் நான் உச்ச நீதிமன்றத்தில் கூறியதையே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது, இது எப்படி இருக்கின்றது என்றால் நாம் கனிஷ்ட மாணவர்களாகக் கல்லூரியில் மாபிள்கள் விளையாடிக் கொண்டிருந்த போது எம் சிரேஷ்ட மாணவர்கள் வந்து அத்தனை மாபிள்களையும் அடித்துப்பறித்து தாம் கையகப்படுத்தி விடுவார்கள்.

நாங்கள் அழுது புலம்ப, ஆசிரியர்களுக்குத் தெரியவரப் போகின்றதென்று கையகப்படுத்திய 25 மாபிள்களை தாமே வைத்துக் கொண்டு 6 அல்லது 7 அல்லது 8 தருவதாகப் பேரம் பேசுவார்கள். நாம் பத்தைக் கேட்டால் உடனே தந்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 15 ஐ தாம் எடுத்துச் சென்று விடுவார்கள். அதேபோல் பொருளாதார நன்மைகளைத் தந்து எம்மை ஆறுதல்ப்படுத்துவது எமது முக்கியமான உரிமைகளைத் தாம் வைத்திருப்பதற்கே. நாம் பொருளாதார விருத்திகளைத் தந்துவிட்டோம் என்று கூறி எமது வரலாற்றுப் பிறப்புரிமைகளை அவர்கள் கைவசம் வைத்திருப்பதற்கே.

ஆகவே முழுமையான ஒரு பரந்த சிந்தனையுடன் எங்களைச் சுற்றி நடப்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார நன்மைகள் முக்கியம் தான். ஆனால் அவற்றை நாம் எமது புலம்பெயர்ந்தோர் ஊடாகவும் பெறலாம். சர்வதேச உதவிகளுடாகவும் பெறலாம்.

அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் சதா காலமும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் தாமாகக் கொடுப்பது வேறு நாம் திருவோடு ஏந்தும் நிலை வேறு. அவர்களிடம் தஞ்சம் புகுந்தவுடன் நடப்பது என்ன? தமக்கு வேண்டியவற்றை அவர்கள் சாதித்துக் கொள்வார்கள். காணிகளைக் கேட்பர், அவர்கள் இங்கு வந்து தொழில் செய்யக் கேட்பர், இராணுவம் தொடர்ந்திருக்கக் கேட்பர், நாங்கள் அவர்களிடம் எடுத்திருப்பதால் முடியாது என்று கூறமுடியாது.மேலும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் வருவர். வந்து ஜம்புகஸ்பட்டுணவைக் காட்டி இது எமது சிங்கள நாட்டின் ஒரு பகுதி, தமிழர்கள் இங்கு 10 ஆம் நூற்றாண்டில் வந்து எம்மைத் துரத்திவிட்டு இப்பொழுது இங்கு குடியிருந்து கொண்டு எம்மையே எதிர்க்கப்பார்க்கின்றார்கள் என்று கூறுவர். அப்பொழுது அதற்கு மறுப்புத் தெரிவிக்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்க மாட்டோம். எமது தனித்துவத்தை இழந்து விட்டிருப்போம். பிச்சைபோட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேவலமான இனமாக சர்வதேசத்தால் அடையாளப்படுத்தப்படுவோம்.

இருப்பதை நாம் இழந்து வருவதற்குக் காரணம் எமது பாரம்பரியம், வரலாறு, எமது இலக்கியம், இன்றைய சுற்றுச் சூழல் எதனையுமே அறியாது அரசியல் நடத்துவதேயாகும். பலமுள்ளவன் தான் விட்டுக் கொடுக்க வேண்டும். பலமற்றவன் விட்டுக்கொடுத்தால் அது பேடித்தனம். பயந்து விட்டுக்கொடுப்பதாகவே இருக்கும்.

பலமுள்ளவன் உடனே உங்கள் பலமற்ற நிலையைப் புரிந்து கொள்வான். இப்போது எமது அரசாங்கங்கள் எமது பலமற்ற நிலையை நன்றாக அறிந்து கொண்டிருக்கின்றன. எம்மை வாங்கிவிட முடியும் என்று நினைக்கின்றன. நாமும் அதற்கேற்றவாறே நடந்து வருகின்றோம். நாங்கள் பலமுள்ளவர்களாக மாறினால் தான் எங்களிடமிருந்து பறிப்பதை மற்றவர்கள் நிறுத்துவார்கள்.

நாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி? முதலில் நாங்கள் பிச்சை கேட்பதை நிறுத்த வேண்டும். அடுத்தது நாங்கள் உண்மையின் வழி நிற்கின்றோம் என்ற எண்ணம் எம்முள் பிறக்க வேண்டும். நாம் எம்மை நாமே ஆண்ட மக்கள். இன்று ஆங்கிலேயர் தயவால் அதிகாரங்களைத் தமதாக்கி எம்மைப் பெரும்பான்மையினர் ஆளப்பார்ப்பது எமது உண்மை நிலையை மறைப்பதாகும், கொச்சைப்படுத்துவதாகும்.

ஆகவே தமிழ் மக்கள் தமது உரித்துக்களைப் பெறப் போராடுவது நியாயமானது என்பதில் நாங்கள் அசைவற்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் சிங்கள மக்களின் உரித்துக்களைப் பறிக்கப் போராடவில்லை. அவர்கள் மீது எமக்கு எவ்விதக் கோபமோ குரோதமோ இல்லை. அவர்களின் அரசியல்வாதிகள் மீது எமக்குப் பரிதாபம் இருக்கின்றது. கேவலம் பதவிக்குவர இந்த அருமருந்தன்ன நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள் என்ற மனவருத்தம் எமக்குண்டு.

எமது உரித்துக்களை அவர்கள்தான் கையகப்படுத்தியுள்ளார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்து நாம் பலமற்றவர்கள் என்று நினைப்பதைக் கைவிட வேண்டும். நாம் பலமுடையவர்கள். உலகம் பூராகவும் எம்மவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது. உண்மையில் சிறுபான்மையினர் மனோநிலையில்த் தான் சிங்கள மக்கட் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை நாம் எமது மனதில் பதிய வைக்க வேண்டும்.

நாங்கள் உண்மைக்குப் போராடுகின்றோம், எம் மக்கள் நன்மைக்குப் போராடுகின்றோம், நியாயத்திற்குப் போராடுகின்றோம் என்ற திட நம்பிக்கை வந்துவிட்டால் நாங்கள் பலமுள்ளவர்களாக மாறுவோம். அவ்வாறான சிந்தனையில் நாம் இல்லாதபடியால்த்தான் மற்றவர்கள் பெருந்தன்மையை நாங்கள் எதிர்பார்த்து நிற்க வேண்டியுள்ளது. அதன்போது இருப்பவற்றையும் நாம் இழந்து வருகின்றோம். நிலங்கள் பறி போகின்றன. அதிகாரங்கள் பறிபோகின்றன. தரவேண்டியவை தராமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.


ஆன்டி இந்தியன்

ஒபாமா அதிபராகப் பதவியேற்ற இரண்டு முறையும் வெள்ளை மாளிகை முன்பு தரை தெரியாத அளவுக்கு மனிதர்களால் நிரம்பி வழிந்தது வெள்ளை மாளிகை வளாகம். ட்ரம்பின் பதவியேற்பில் கூட்டமே இல்லை. மேலும் நீங்கள் எங்கள் அதிபரே இல்லை என்ற பதாகைகளுடன் எதிப்பாளர்கள் அமெரிக்க வீதிகளில் வலம் வந்தனர். அமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளில் ட்ரம்புக்குத் துளியும் செல்வாக்கு இல்லை. அங்குதான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்பது ஜனநாயகக் கட்சியின் வாதம்.

ட்விட்டர் அதிபர்

அதிபராகப் பதவியேற்ற நாள்முதல் தனது சொந்த ட்விட்டர் பக்கத்திலிருந்து 2598 ட்விட்களை செய்துள்ளார். அதிபருக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து 1797 ட்விட்களை செய்துள்ளார். இதில் 672 ட்விட்கள் தனது சொந்தப் பக்கத்திலிருந்து ரீ-ட்விட் செய்யப்பட்டவை. ஒபாமா அதிபராக இருந்த காலகட்டத்தில் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து 18 மாதங்களில் 372 ட்விட்களைதான் செய்துள்ளார். ஆனால் ட்ரம்ப் ட்விட்டரிலேயே வாழ்கிறார் ஒருநாளைக்கு சராசரியாக 12 ட்விட்களை தட்டி விடுகிறார் ட்ரம்ப்.

தடையோ தடை

ட்ரம்ப் பதவியேற்று முதலில் கையெழுத்திட்டதே ஒபாமா கேர் ரத்து செய்யும் ஆணையில்தான். அதனை தொடர்ந்து சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை என்று அறிவித்தார். பின்னர் ஹ1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு வருபவர்களுக்கும் செக் வைத்தார். மெக்ஸிகோவிடம் சுவர் எழுப்பப் பணம் கேட்டது. வடகொரியாவை ஒற்றை பட்டனை அழுத்தி அழித்து விடுவேன் என மிரட்டுவது என வருடம் முழுவதும் அதிர்ச்சி மோடிலேயே வைத்திருந்தார்.

ட்ரம்ப்

மிரட்டிய சிலிக்கான் வேலி

அமெரிக்காவில் சட்ட விரோதமாகப் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவேன். அமெரிக்கர் அல்லாத பிறநாட்டவரின் எண்ணிக்கையையும் குறைக்கும் அமெரிக்க ஃபர்ஸ்ட் திட்டத்துக்கு ட்ரம்ப் அச்சாரம் போட்டதும் சிலிக்கான் வேலி சிஇஓ-க்களின் எதிர்ப்பு முதல் வில்லனாக ட்ரம்புக்கு அமைந்தது. திறமையானவர்களை இழந்துவிடுவீர்கள் என கூகுள் சுந்தர் பிச்சை குரலுயர்த்தினார். என்னங்க சார் உங்க சட்டம், அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் கட்டமைக்கப்பட்டது என மார்க் ஆங்க்ரி மோடை ஆக்டிவேட் செய்தார்.

ஆன்டி இந்தியன்

இந்தியாவுடன் நட்பு பாராட்டுவேன் என்று சத்தமாக முழங்கிய ட்ரம்புக்கு இந்தியர்கள் மீது வெறுப்பு அதிகமாகிவிட்டது. ஹச்1பி விசாவில் கிடுக்கிபிடி போட்ட ட்ரம்ப் இப்போது லட்சக்கணக்கில் இந்திய டெக்கிகளை வெளியேற்ற ப்ளான் போடுகிறார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கர்களைப் பணியமர்த்த வலியுறுத்தும் திட்டமும் உள்ளதாம். இதனால் நிறுவனங்களுக்குச் செலவு அதிகமாகும் என விழி பிதுங்கியுள்ளனர் சிலிக்கான் வேலி சிஇஓ-க்கள். க்ரின்கார்டுக்கு காத்திருப்போரும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்றால் 6 லட்சம் இந்தியர்கள் இந்தியா திரும்பும் சூழல் ஏற்படும் என்கின்றனர் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.பயமுறுத்தும் வார் ரூம்

அமெரிக்க அதிபருக்கு அன்றாடம் அமெரிக்கா குறித்த தகவல்களை வழங்க வெள்ளை மாளிகையில் வார் ரூம் என்ற அமைப்பு செயல்படுகிறது. காலை 9 மணிக்கும், மாலை 4 மணிக்கும் இந்த அமைப்பு அளிக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் ப்ளஸ், மைனஸ் இருக்கும். ஆனால் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வார் ரூம் பாசிட்டிவ் செய்திகளை மட்டும்தான் தரவேண்டும் என்ற உத்தரவால் அமெரிக்கா புகழ் மட்டுமே வாசிக்கிறது. இது ஆபத்தானது என்ற அபயக்குரலும் எழத் தொடங்கிவிட்டது.

பொருளாதாரத்தில் சிக்ஸர்

2016ல் ஒபாமா அரசு இருந்த போது 1.5 சதவிகிதமாக இருந்த ஜிடிபி ட்ரம்பின் ஓராண்டு ஆட்சியில் 2.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2009 பொருளாதாரச் சரிவின் போது 10 சதவிதமாகவும், ட்ரம்ப் பதிவியேற்பதற்கு முன்பு 5 சதவிகிதமாகவும் இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 4.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ட்ரம்ப் அதிபராவதற்கு முன்பு நவம்பர் 9, 2016ல் 18589 புள்ளிகளாக இருந்த டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை தற்போது 26,014 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. ட்ரம்ப் ஆட்சியில் பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பதில் மறுப்பதற்கு இடமில்லை.

ட்ரம்ப்

துப்பாக்கிச் சூடு

ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து நடந்த மோசமான தாக்குதல்கள் எண்ணிக்கை மொத்தம் ஐந்து. அதில் உயிரிழந்தோர் மட்டும் 145 பேர். ஒரு ஆண்டில் அமெரிக்காவின் 127 நகரங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் என்பதை தாண்டி அரசு துப்பாக்கி சந்தையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். அமெரிக்காவில் உள்ள அரசியல் லாபி தான். குறிப்பாக குடியரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பலருக்கு தேசிய ரைபிள் அசோசியேஷன் மற்றும் அமெரிக்க துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் லாபி செய்கிறது. மொத்தமாக உள்ள 435 அமெரிக்க பிரதிநிதிகளில் 232 பேரை இந்தச் சங்கங்கள் லாபி செய்கின்றன. இதனை மறைக்க ட்ரம்ப் மக்களின் மனநிலையில் பிரச்னை என்று கூறியதும் சர்ச்சைக்குள்ளானது.

அவமானப்படுத்திய மேடைகள்

சென்ற வருட ஆஸ்கர் மேடையில் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெலின் லைவ் ட்விட்டில் ட்ரம்ப்பை சாடியது, 2017 கோல்டன் க்ளோப் விருதில் மெரில் ஸ்ட்ரீப்பின் ட்ரம்ப்புக்கு எதிரான மிக நீண்ட உரை, 2018 கோல்டன் க்ளோப் விருது மேடையில் ட்ரம்பை நக்கலாக கலாய்த்த செத் மேயர்ஸ் என விருது மேடைகள் ட்ரம்புக்கு எதிராகவே அமைந்தன.

குடும்ப அரசியல்

அதிபர் ட்ரம்பின் ஆலோசகராக அவரது மகள் இவான்கா நியமிக்கப்பட்டுள்ளார். இவான்காவின் கணவர் ஜெராடும் அதிபர் ஆலோசகர்தான். அரசாங்கத்தின் முக்கியப் பதவிகளில் இன்னும் சில முக்கிய உறவினர்களைப் பணியமர்த்தியிருக்கிறார் ட்ரம்ப். அதிபர் தேர்தலின் போது பிரசார அதிகாரியாக இருந்த டேவிட் பூன் அமெரிக்க அதிபருக்கும் ரஷ்யாவுக்கு நடந்த பேச்சுவார்த்தைகள், தேர்தல் விதிமீறல்கள் எனப் பல விஷயங்களை முன் வைத்தார். மேலும் ட்ரம்பின் மகள் இவான்காவுக்கு அதிபர் ஆகும் ஆசை இருந்தது, ட்ரம்பின் மகனும், மருமகனும் ரஷ்ய வல்லுநர்களோடு ட்ரம்ப் டவரில் பேசிய விஷயங்கள் அமெரிக்காவுக்குத் தீங்கு விளைவிப்பவை என்று கூறினார். இதற்கு டேவிட் பூன் மனநிலை தவறிவிட்டார் என்கிறார் ட்ரம்ப்.
மொத்தத்தில் ஓராண்டில் நிறைய வைரல் நிகழ்வுகளை நிகழ்த்திய ட்ரம்ப் ஆக்கபூர்வமான எதையும் செய்யவில்லை. மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்றவர் ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. அமெரிக்கர்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்பவரை அமெரிக்கா வெளிப்படையாக எதிர்க்கிறது. இது முதல் வருடம் அதற்குள் இம்பீச்மென்ட் குறித்தெல்லாம் பேச்சு எழுகிறது.

2020ன் அமெரிக்க அதிபருக்கான அரியணையை ட்ரம்ப் தக்க வைப்பாரா என்ற கேள்விக்கு இந்த வருட பதில் இல்லை என்பதுதான். ஓப்ரா வின்ஃப்ரேவும், மார்க் சக்கர்பெர்க்கும், மிச்செல் ஒபாமாவும்தான் அமெரிக்காவும் 2020 களத்தில் இருக்கிறார்கள். மிஸ்டர் ட்ரம்ப் நீங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரி அல்ல, அமெரிக்க அதிபர் அந்த மனநிலைக்கு மாறி மீதமுள்ள நாள்களில் செயல்பட்டால் மேக் ட்ரம்ப் க்ரேட் எகெய்ன் சாத்தியம். இல்லையெனில் மீண்டும் குத்துச்சண்டை மைதானங்களில் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும்.

மத்திய அரசுடன் மோதமுடியும்! – முதலமைச்சர்

நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் “இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல்” என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சர்வதேச சட்டம் பலவழிகளிலும் விரிவடைந்து வருகின்றது என்பதை அவதானிப்போம். சர்வதேச சட்டம் என்றாலேயே பாரம்பரியமாகவோ, உடன்பாடுகள் மூலமாகவோ ஒன்று சேர்ந்த ஒரு தொகை விதிகளையே அடிப்படையில் அதுகுறிப்பிடும். இந்த விதிகளைக் கொண்டு நாடுகள் தம்மிடையேயான உறவுகளை வளர்க்கும் போது விதிகள் சட்ட அந்தஸ்து பெறுகின்றன. அண்மைக் காலங்களில் பல முக்கிய மாற்றங்கள் சர்வதேசச் சட்டத்தில் ஏற்பட்டுள்ளன. பலநாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள், அவற்றினால் உலக மக்கள் மனதில் ஏற்பட்ட தாக்கங்கள் போன்றவை இந்த மாற்றத்திற்குக் காரணம் ஆகிவிட்டன.

1983ம் ஆண்டு ஜுலை மாதத்தில் எமது அப்போதைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் அவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்தார். அம் மாதம் 23ஆம் திகதிக்கு பின் வந்த நாட்களில் இலங்கையில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வுகள் தொலைக்காட்சி ஊடக ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதுபற்றி அவர் பின்னர் என்னிடம் கூறியபோது “எமது நாடு அந்தக் காலகட்டத்தில் நாறியது” என்றார். “வெட்கப்படுகின்றேன்” என்றார்.

அவ்வாறு நாடுகளில் நடந்தவற்றைப் பார்த்த சட்ட வல்லுநர்கள் பலர், சர்வதேச ச்சட்டத்தை விரிவாக்க வேண்டும் என்று எண்ணிய காரணத்தாலேயே சர்வதேசச் சட்டம் இப்போது விரிவடைந்த நிலையில் உள்ளது. இதன் பிரதிபலிப்பே உலகக் குற்றவியல் நீதிமன்ற ஏற்பாடு. அதுமட்டுமல்ல நிலைமாற்றத்தின் போது பாதிப்புக்குள்ளான நாடுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி இப்பொழுதுவலுவான கருத்துக்கள் தோன்றியுள்ளன. நிலைமாற்றம் என்றால் என்ன? ஒருநாட்டின் அரசியல் நிலையில், யதார்த்தநிலையில் மாற்றம் ஏற்படுவதையே அதுகுறிக்கின்றது. ஒரு இருண்ட காலத்தினுள் இருந்து வெளிச்சத்தை நோக்கி எட்டிப்பார்ப்பதையே நிலைமாற்றம் குறிக்கின்றது.

எனவே நிலைமாறும் நாடுகள் நீதிக்குகந்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே நிலைமாற்ற நீதிமுறைகள் ஆவன. இதையே Transitional Justice என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கஷ்ட நிலையில் இருந்து ஒருநாடு மீண்டுவரும் போது என்னென்ன நடவடிக்கைகளை நீதிக்குகந்ததாக அந்நாட்டில் எடுக்கவேண்டும் என்று சர்வதேச சட்டம் எதிர்பார்க்கின்றதோ அவற்றையே நிலைமாற்ற நீதிமுறைகள் என்று குறிப்பிடுகின்றது சர்வதேசச்சட்டம்.யாரோ அடக்கி ஆளப்பட்டதால்த்தான் அந்நாட்டில் வன்முறை வெடித்திருக்க வேண்டும் அல்லது கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலைமாற்ற நீதிமுறைகள் இரண்டு முக்கிய எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்தியுள்ளன.ஒன்று அதிகாரப் பரவலாக்கம் மற்றது போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தல். இவற்றைச் சர்வதேசச் சமூகம் இலங்கையிலும் எதிர்பார்க்கின்றது. போர் முடிவுக்கு 2009ல் வந்திருப்பினும் இனப்பிரச்சனை அதனால்த் தீர்க்கப்படவில்லை.

அதனால்த்தான் அதிகாரப் பரவலாக்கம் தேவையுடையதாகின்றது. தற்போதும் 13வது திருத்தச்சட்டம் அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தியேயுள்ளது. ஆனால் அது பெரும்பான்மையினரின் பெருந்தயவை முன்வைத்தேயாக்கப்பட்டுள்ளது.அதனால் தான் 1992இன் 58வது இலக்கச் சட்டமான மாவட்ட செயலாளர்கள் பற்றிய அதிகாரமாற்றச் சட்டத்தை இயற்றக் கூடியதாக இருந்தது. ஒற்றையாட்சி எனும் போது முன்னர் கொடுத்த அதிகாரங்களைப் பறித்து இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவரலாம்.

காரணம் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் பெரும்பான்மையினரின் கைவசமே தொடர்ந்திருக்கும். மாகாணசபைகளின் அதிகாரத்தின் கீழிருந்த மாவட்டச் செயலர்கள் திடீரென்று இந்தச் சட்டம் இயற்றப்பட்டதும் மத்திக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் இன்று வடமாகாணத்தில் இரட்டை நிர்வாகம் நடைபெற்று வருகின்றது. ஒன்று மக்களால்த் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண உறுப்பினர்களின் நிர்வாகம். மற்றையது மத்திய அரசாங்கத்தின் முகவர்களின் நிர்வாகம்.

இங்கு இரு முகவர்கள் சேர்ந்தும் சேராமலும் அவர்கள் நிர்வாகத்தை நடத்தி வருகின்றார்கள். ஆளுநரும் மத்தியின் முகவர். அரசாங்க அதிபரும் அவர்களின் முகவரே. ஆகவே அதிகாரப் பரவலாக்கம் என்ற போது நாம் எதிர்பார்த்தது நம்மை நாமே ஆண்டு வருவதையே. ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்ற போர்வையில் எமக்குக் கிடைத்தது வேண்டியபோது மத்தியின் ஊடுறுவல்களே. இவ்வாறு ஊடுறுவல்கள் தொடர்ந்து இருந்தால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படப் போகின்றவர்கள் போருக்கு முன்னர் பாதிக்கப்பட்ட அதேமக்களே. இதனால்த்தான் ஒற்றையாட்சியைக் களைந்து சமஷ்டி ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுவருகின்றோம்.

இடைக்காலவரைவுகள் ஒற்றையாட்சியினையே மையமாகக் கொண்டு வரையப்பட்டதால்த்தான் சர்வதேச நாடுகள் போதிய அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இப்பொழுது இன்றைய பேச்சாளர்களின் பேச்சுக்களின் கருப்பொருட்களின் ஒன்றுக்கொன்றான தொடர்பானது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். சர்வதேசச் சட்டம் எதிர்பார்ப்பதைத்தான் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளன.

ஆர்ஜென்டீனா சர்வாதிகாரத்தில் இருந்து வெளிவந்த போது யுகோஸ்லாவியா, றுவண்டா மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் உள்நாட்டுப் போர்களில் இருந்து அவைவிடுபட்ட போது நிலைமாற்ற நீதிமுறைகள் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் தடைகளை விதித்தன.உலகக் குற்றவியல் மன்றத்தை உருவாக்குவதில் ஐக்கிய நாடுகள் கரிசனைகாட்டின. ஆகவே சர்வதேசச் சட்டம் நிலைமைக்கேற்றவாறு, சூழலுக்கேற்றவாறுமாறுதல் அடைந்து வந்துள்ளது.

எனவேதான் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் நிலைமாற்ற நீதிமுறைகள் என்று எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலும் போர்க்குற்ற விசாரணையும் எமக்கு முக்கியமாகியுள்ளன. இரண்டையுந் தட்டிக்கழிக்கவே இலங்கை அரசாங்கம் முற்பட்டுள்ளது. அதிகாரப் பரவலில் நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் எமக்கு மறுக்கப்படவிருக்கின்றது. மத்தியின் மையத்தினுள் மாகாணத்தை தொடர்ந்துவைத்திருக்கவே அரசாங்கம்மும் முரம் காட்டுகின்றது.

ஆனால் எம்முள் சிலரோ “அதற்கென்ன நாங்கள் கொழும்பில்த்தானே வசிக்கின்றோம், மத்திய அரசாங்கம் இங்குதானே இருக்கின்றது, நாம் இங்கு சுதந்திரமாக எப்படியும் வலம் வரலாம், ஆனால் மக்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால் எமது சுதந்திரம் பறிபோய்விடும், எனவே அரசாங்கம் சாட்டையைத் தன்கைவசம் வைத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம்” என்ற பாணியில் நடந்து வருகின்றார்கள்.

அவர்களின் நடவடிக்கை காலாகாலத்தில் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் என்பதை அவர்கள் உணர்கின்றார்கள் இல்லை.ஒற்றையாட்சியால் எமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி இடங்கள் பறிபோகப் போகின்றன. படைகள் தொடர்ந்து எம் மாகாணங்களில் நிலைநிற்கப்போகின்றன. எம் காணிகளின் வருமானங்கள் அவர்கள் கைவசம் செல்லவிருக்கின்றன.

மகாவலி சட்டத்தின் கீழ்மேலும் மேலும் வெளியிலிருந்து மக்களை எமது மாகாணத்தினுள் கொண்டுவந்து குடியேற்ற இருக்கின்றார்கள். சுற்றுலாவை தமக்குச் சாதகமாக வளர்த்துக் கொள்ளவிருக்கின்றார்கள். எம்மக்களின் தொகைக் குறைவினால் திணைக்களங்களில் தென்னவரை நிலைநிறுத்தி வருகின்றார்கள். இந்த நிலை தொடரும். முன்னேற்றம் என்றபோர்வையில் எமதுகாணிகளைச் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.

இன்னும் பலதையும் கூறலாம். சமஷ்டி அரசியலின் கீழ் சுயாட்சிச் சுதந்திரம் அதிகாரப்பரவலாக்கல் மூலம் எமக்குக் கிடைத்தால் இவற்றைத் தடுத்துநிறுத்தலாம். ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அவைதடுக்கப்படமுடியாது.ஐக்கிய நாடுகள் முன், தாமே முன் வந்து செய்வதாக ஏற்றுக்கொண்டவற்றை இன்றுசெய்யப் பின் நிற்கின்றது எம் நாட்டின் அரசாங்கம்.

அடுத்து போர்க்குற்ற விசாரணைகளையும் நிலைமாற்ற நீதிமுறைமைகள் வலியுறுத்துகின்றன.அதைத் தட்டிக்கழிக்கப் பார்க்கின்றது எமது அரசாங்கம். போர்க்குற்றங்கள் எத்தகையன என்பது பற்றியெல்லாம் பேராசிரியர் சுவர்ணராஜா அவர்கள் விளக்கப்படுத்தினார். போரை அநியாயமான முறையில் வேண்டுமென்றே நடத்துவது போர்க்குற்றம்.

அடுத்து மனித குலத்திற்கெதிரான செயல்களில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றாவது வேண்டுமென்றே இன அழிப்பில் ஈடுபடுவது போர்க்குற்றம். மூன்றிலும் எமது அரசபடைகள் ஈடுபட்டிருந்தன. அக்குற்றவாளிகளை இனங்காண எமது மத்திய அரசாங்கம் பின் நிற்கின்றது. இனப்படுகொலை பற்றிய விளக்கமும் அண்மைக் காலங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

பர்மாவில் றோகின்தியாகொலைகள், ஈராக்கில் யாசிடியரின் வன்புணர்வு நிகழ்ச்சிகள் இனப்படுகொலையின் அம்சமே என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்றைய பேச்சுக்களால் நாம் முக்கியமான இரு விடயங்களைப்புரிந்துள்ளோம்.

சர்வதேசச் சட்டம் விரிவடைந்துள்ளதால் எமது அல்லல்களும் அழிவுகளும் அதனுள் அடங்குவன என்ற முறையில் சர்வதேசச் சட்டத்தை ஒரு கேடயமாக ஏந்தி மத்திய அரசுடன் மோதமுடியும் என்பது.

அடுத்து இல்லாததை இருப்பதாகக் கூறி இனிவருங்காலத்தில் இருப்பதையும் இல்லாததாக்க நாம் உடன்படக்கூடாது என்பது.ஆகவே சர்வதேசச் சட்டம் எதிர்பார்க்கும் நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் முறையான அதிகாரப் பரவலாக்கத்தை முயன்றுபெற நீங்கள் அனைவரும் முன்வரவேண்டும்.நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் போர்க்குற்றவிசாரணைகளாவன சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிக் குற்றவாளிகளை அடையாளங்காண வேண்டும்.

நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம்.அந்தக் காவாலிகளை வீரதீரசூரர்கள், சிங்கள மக்களின் காவல் மன்னர்கள் என்ற முறையில் மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் பலர் காப்பாற்ற விளைந்துள்ளார்கள்.

எமது நெருக்குதல்கள் காவாலிகளைக் கடைத்தெருவுக்கு இழுத்துவர வேண்டும் என்று கருதுகின்றோம். இவற்றைச் செய்ய நாம் மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும் என்றுகேட்டுக் கொள்கின்றேன். எமது பார்வை சரியென்று கருதும் யாவரும் எம்முடைய மக்கள் இயக்கத்துடன் இணைந்து, அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நெருக்குதல்களை ஏற்படுத்த முன்வரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆர்கே..நகரில் பண பட்டுவாடா நேரடி காட்சிகள்

ஆர்கே..நகரில் பண பட்டுவாடா நேரடி காட்சிகள்

அரசியல் விபச்சாரி வைகோ


புலிகள் தோற்று போனது வைகோ திருமா போன்றவர்களினால் இவர்கள் செய்யும் துரோகம் என்ன ?
வைகோ, திருமாவளவன் திமுகவோடு கூட்டு வச்சதுக்கு இருவரையும் வறுத்தெடுக்கும் ஈழத்தமிழர்

புலிகள் தோற்று போனது வைகோ திருமா போன்றவர்களினால்

புலிகள் தோற்று போனது வைகோ திருமா போன்றவர்களினால் இவர்கள் செய்யும் துரோகம் என்ன ?
வைகோ, திருமாவளவன் திமுகவோடு கூட்டு வச்சதுக்கு இருவரையும் வறுத்தெடுக்கும் ஈழத்தமிழர்

உயிருடன் இருந்த குழந்தையை பார்சல் செய்து கொடுத்த ஆஸ்பத்திரி

டெல்லி ஷாலிமார்பாக் பகுதியில் மேக்ஸ் ஆஸ்பத்திரி என்ற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஒரு பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 30-ந் தேதி ஒரு குழந்தை இறந்து பிறந்தது. பிறந்த இன்னொரு குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த குழந்தையும் இறந்து விட்டதாக பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அந்த குழந்தையின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுத்தனர். பெற்றோரும் அந்த குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து தகனம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் அப்போது அந்த குழந்தையின் உடலில் அசைவு இருப்பதை கண்டு பெற்றோர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.

அதே நேரத்தில் உயிருள்ள குழந்தையை இறந்து விட்டதாக தவறாக அறிவித்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

இதற்கிடையே, “இந்த சம்பவம், மிக அபூர்வமாக நடந்து விட்டது. இதை அறிந்ததும் நாங்கள் அதிர்ந்துபோனோம். இது குறித்து விசாரணை நடத்துகிறோம். சம்பந்தப்பட்ட டாக்டரை விடுமுறையில் அனுப்பிவிட்டோம்” என கூறி மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

டெல்லி அரசும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றதில்லை

விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாகநாங்கள் அறிந்திருக்கவில்லையென வடமாகாணமகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன் அவர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு Tablet களை வழங்கிவைத்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன் அவர்களால் மூன்றுலட்சம் ரூபாபெறுமதியில் 20 மாணவர்களுக்கு Tablet கள் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது. கிழக்குபல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாணத்தை சேர்ந்த மாணவர்களுக்கு Tablet களை வழங்கிவைத்து அமைச்சர் உரையாற்றியபோது மேலும் தெரிவிக்கையில்…

கிழக்குடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் வடக்கில் அதிகரித்த நிலையிருப்பதை காணக்ககூடியதாக உள்ளது. இதனை சரி செய்ய வேண்டுமாயின் கொள்கையின் அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். இதனையேநான் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றேன்.

பெண்கள்தான் பெண்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆனால் அரசியலில் பெண்களின் வகிபாகம் மிகமிகசொற்பமாபகவே இருந்துவருகின்றது. இந்தநாட்டில் நூற்றிற்கு 52 வீதமானபெண்கள் இருக்கின்றபோதிலும் பெண்களின் அரசியல் பற்கேற்பென்பது சொற்பமாகவே இருக்கின்றது. உள்ளுராட்சி தேர்தல்களத்தை பார்த்தோமானால் வெறும் 1.8 சதவிகிதமே பெண்கள் இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் 2.8 சதவிகிதமான பெண்களே இருக்கின்றார்கள். வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 38 உறுப்பினர்களில் ஒரேஒருபெண் பிரதிநிதியாகநான் மட்டுமே இருக்கிறேன். ஆகவேதான் கொள்கையடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதைவலியுறுத்திக் கூறிவருகின்றேன்.

வட மாகாண சபையில் 2018 ஆம் ஆண்டிற்கான நிதி யொதுக்கீட்டில் கிழக்குபல்கலைக் கழகத்தில் கல்விபயிலும் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக தமிழர்களாகிய நாம் கல்வியையும் பொருளாதாராத்தினையும் இழந்துள்ளோம். பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் அதேநேரம் கல்வியிலும் அக்கறை செலுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது.

பல்கலைக் கழக கற்கையை தொடர்வதற்காக ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்திற்கு செல்லும் போது அவர்களின் தேவை அதிகரித்து வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்கமுடியாத நிலையில் மாணவர்கள் இருக்கின்றார்கள். கடந்த காலத்தில் இவ்விடயம் தெரியப்படுத்தப்படாத காரணத்தினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவிகளைச் செய்ய முடியாதிருந்தது.

இருந்தபோதிலும் எம்மால் முடிந்தளவுக்கு நாங்கள் பதவியில் இருக்கும் வரை உதவிகளை வழங்குவோம். இவ்வாறு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவிகளைச் செய்ய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.

இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலம் ஏற்றுக்கொண்டாலும் நாங்கள் வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு தேசமாகவே இருக்கின்றோம். எங்களுக்குள் பிரிவுகளும் பிளவுகளும் இல்லை. அந்த கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குக்காக நாங்கள் நீதி கோரும் பயணத்தினை மேற்கொண்டிருக்கும் நிலையிலும் நாங்கள் அபிவிருத்தியையும் கல்விமேம்பாட்டினையும் கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல், 184 பேர் பரிதாப பலி

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே இன்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 184 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிராத்தனைக்காக மசூதிக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இதனையடுத்து, எகிப்து பிரதமர் அப்துல் பாத்தா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசணை கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.




இரண்டாம் இணைப்பு..


கெய்ரோ: எகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின் தலைநகரில் அல் ரவாடா பகுதியில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டான். அந்த மசூதி மீது பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலும் நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 235 பேர் உடல் சிதறி பலியாகினர். 100-க்குமு் மேற்பட்டேர் காயமடைந்தனர்.


எகிப்து வரலாற்றில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இது தான் மிகப்பெரிய தாக்குதல் என அந்நாட்டு டி.வி.சானல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.


தாக்குதல் சம்பவத்தையடுத்து அந்நாட்டு அதிபர் அப்துல் பதா அல் சிசி, உயரதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்றுநாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளதாவும், விமான நிலையங்கள், மக்கள் கூடும் வழிபாட்டு தலைங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

வல்லாரை சாம்பல் செய்வது எப்படி ?

வல்லாரை மாணவர்களிற்கு மிகவும் உகந்தது அத்துடன் பல மருத்துவ குணம் உள்ளது 

Platic Egg பிளாஸ்டிக் முட்டைகள்

இதனால் வரும் ஆபத்துகள் இதன் பிண்ணி  என்ன ? இந்த காணொளி விளக்குகிறது 

தமிழர் பகுதி சிங்கள மயமாக சுமந்திரன், செல்வம் உடந்தையா?

சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குவதற்கு உடந்தையாக செயற்படுகின்றனரா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ்பிரமேச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் தெரிவிக்கையில்;

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ள விமர்சனங்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட, கடந்த பாராளுமன்ற, மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டவாறு வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு மாகாணமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வுடனான ஒரு சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற தமிழ் மக்களின் ஆணைக்கு புறம்பாக செயற்படுகின்றது. இந்த மக்கள் ஆணையில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியிருக்கிறது.

முக்கியமாக இந்த கொள்கைகள் எல்லாம் கைவிடப்பட்டு இடைக்கால அறிக்கையில் சகலதும் கைவிடப்பட்டு வட, கிழக்கு இணைப்பு சம்மந்தமாகவும் சரி, சமஸ்டி சம்மந்தமாகவும் சரி இவ்வாறான விடயங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணையில் இருந்து தாங்கள் முன்வைத்த கொள்கைகளில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியிருக்கின்றது என்பதை மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் முன்வைத்த கருத்துக்களாக இருந்தது.

ஆகவே இவ்வாறான சூழல் ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்காலம் தொடர்பாக தங்களது உரிமைகள் தொடர்பாக கூட்டமைப்பு ஒரு தீர்மானத்திற்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். எனினும் தமிழரசு கட்சி கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளோடு ஆலோசிக்காமல் தாங்கள் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கின்ற காரணத்தினால் கொள்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள், கைதிகளினுடைய உண்ணாவிரதம் குறைந்தபட்சம் அவர்களது வழக்குகளை அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாமை போன்ற விடயங்களில் கூட அரசாங்கம் தன்னை மாற்றிக்கொள்ளாமல் உறுதியாக இருக்கின்றது. அவ்வாறான விடயங்கள் கூட மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

அரசாங்கம் கூறுகின்ற நல்லெண்ணம் என்ற விடயங்கள் அரசாங்கத்தினாலேயே குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. நேற்றைய தினம் வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி இங்கு நாமல்கம, கலாபோகஸ்வௌ போன்ற இடங்களில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை போன்ற சிங்கள கிராமங்களில் இருந்து அழைத்து வந்து தமிழருடைய காணிகளை பறித்தெடுத்து சிங்கள பெயர்களை சூட்டி குடியேற்றப்பட்ட மக்களிற்கு அந்த காணிகளை தாரைவார்த்து கொடுப்பதற்கான உறுதிகளை வழங்கியிருந்தார். அந்த சம்பவம் என்பது நேற்று நடைபெற்றிருக்கிறது.

நல்லாட்சி என்கிற இந்த அரசாங்கத்தில் கூட எந்தவித மாற்றங்களுமின்றி மகிந்த எவ்வாறு தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை செய்தாரோ அந்த நிகழ்வுகளிற்கே தற்போது உறுதி வழங்கி வைக்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளில் சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமையானது தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்குவதற்கு அரசாங்கத்துடன் உடந்தையாக செயற்படுகிறார்களா என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.ஆகவே இவ்வாறான விடயங்கள் ஆரோக்கியமான விடயங்கள் அல்ல கூட்டமைப்பு என்கின்ற பேரில் தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக இவ்வாறான விடயங்களை கையாளுகின்றது என்பது மட்டுமல்ல தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது என்ற அடிப்படையில் இது தொடர்பாக சரியான முடிவுகளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எடுக்க வேண்டும் என்றும் மத்தியகுழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான அரசியல் செயற்பாடுகளை எடுப்பதற்காக எமது கட்சியினுடைய மாநாடு டிசம்பர் மாத முதலாவது வாரத்தில் நடத்தப்பட வேண்டும் என்கின்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்கின்ற நிலைமை இருந்தால் கூட சில வேளைகளில் பிற்போடப்படலாம் என்கின்ற கருத்துக்களும் இருக்கின்றன. எனினும் அவ்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்து போட்டியிடுவது என்பது தொடர்பாக அரசியல் குழு தீர்மானிக்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. எனவே அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வரும் போது அரசியல் குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.

தமிழர் பகுதி சிங்கள மயமாக சுமந்திரன், செல்வம் உடந்தையா?

சுமந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குவதற்கு உடந்தையாக செயற்படுகின்றனரா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ்பிரமேச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் தெரிவிக்கையில்;

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் உள்ள விமர்சனங்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட, கடந்த பாராளுமன்ற, மாகாணசபை தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டவாறு வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு மாகாணமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான அதிகாரப்பகிர்வுடனான ஒரு சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற தமிழ் மக்களின் ஆணைக்கு புறம்பாக செயற்படுகின்றது. இந்த மக்கள் ஆணையில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியிருக்கிறது.

முக்கியமாக இந்த கொள்கைகள் எல்லாம் கைவிடப்பட்டு இடைக்கால அறிக்கையில் சகலதும் கைவிடப்பட்டு வட, கிழக்கு இணைப்பு சம்மந்தமாகவும் சரி, சமஸ்டி சம்மந்தமாகவும் சரி இவ்வாறான விடயங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணையில் இருந்து தாங்கள் முன்வைத்த கொள்கைகளில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியிருக்கின்றது என்பதை மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் முன்வைத்த கருத்துக்களாக இருந்தது.

ஆகவே இவ்வாறான சூழல் ஆரோக்கியமான விடயம் அல்ல. தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்காலம் தொடர்பாக தங்களது உரிமைகள் தொடர்பாக கூட்டமைப்பு ஒரு தீர்மானத்திற்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். எனினும் தமிழரசு கட்சி கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளோடு ஆலோசிக்காமல் தாங்கள் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கின்ற காரணத்தினால் கொள்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள், கைதிகளினுடைய உண்ணாவிரதம் குறைந்தபட்சம் அவர்களது வழக்குகளை அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாமை போன்ற விடயங்களில் கூட அரசாங்கம் தன்னை மாற்றிக்கொள்ளாமல் உறுதியாக இருக்கின்றது. அவ்வாறான விடயங்கள் கூட மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

அரசாங்கம் கூறுகின்ற நல்லெண்ணம் என்ற விடயங்கள் அரசாங்கத்தினாலேயே குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. நேற்றைய தினம் வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி இங்கு நாமல்கம, கலாபோகஸ்வௌ போன்ற இடங்களில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை போன்ற சிங்கள கிராமங்களில் இருந்து அழைத்து வந்து தமிழருடைய காணிகளை பறித்தெடுத்து சிங்கள பெயர்களை சூட்டி குடியேற்றப்பட்ட மக்களிற்கு அந்த காணிகளை தாரைவார்த்து கொடுப்பதற்கான உறுதிகளை வழங்கியிருந்தார். அந்த சம்பவம் என்பது நேற்று நடைபெற்றிருக்கிறது.

நல்லாட்சி என்கிற இந்த அரசாங்கத்தில் கூட எந்தவித மாற்றங்களுமின்றி மகிந்த எவ்வாறு தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை செய்தாரோ அந்த நிகழ்வுகளிற்கே தற்போது உறுதி வழங்கி வைக்கிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளில் சுமந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமையானது தமிழ் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்குவதற்கு அரசாங்கத்துடன் உடந்தையாக செயற்படுகிறார்களா என்ற விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.ஆகவே இவ்வாறான விடயங்கள் ஆரோக்கியமான விடயங்கள் அல்ல கூட்டமைப்பு என்கின்ற பேரில் தமிழரசு கட்சி தான்தோன்றித்தனமாக இவ்வாறான விடயங்களை கையாளுகின்றது என்பது மட்டுமல்ல தமிழ் மக்களிற்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது என்ற அடிப்படையில் இது தொடர்பாக சரியான முடிவுகளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எடுக்க வேண்டும் என்றும் மத்தியகுழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான அரசியல் செயற்பாடுகளை எடுப்பதற்காக எமது கட்சியினுடைய மாநாடு டிசம்பர் மாத முதலாவது வாரத்தில் நடத்தப்பட வேண்டும் என்கின்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என்கின்ற நிலைமை இருந்தால் கூட சில வேளைகளில் பிற்போடப்படலாம் என்கின்ற கருத்துக்களும் இருக்கின்றன. எனினும் அவ்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்து போட்டியிடுவது என்பது தொடர்பாக அரசியல் குழு தீர்மானிக்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. எனவே அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் வரும் போது அரசியல் குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.

சீமானின் கருத்துக்கள் மெர்சல் படத்தில்

சீமானின் கருத்துக்கள் மெர்சல் படத்தில்

சீமானின் கருத்துக்கள் மெர்சல் படத்தில்

சீமானின் கருத்துக்கள் மெர்சல் படத்தில்