மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல், 184 பேர் பரிதாப பலி

மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல், 184 பேர் பரிதாப பலி

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே இன்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 184 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிராத்தனைக்காக மசூதிக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இதனையடுத்து, எகிப்து பிரதமர் அப்துல் பாத்தா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசணை கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.




இரண்டாம் இணைப்பு..


கெய்ரோ: எகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின் தலைநகரில் அல் ரவாடா பகுதியில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டான். அந்த மசூதி மீது பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலும் நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 235 பேர் உடல் சிதறி பலியாகினர். 100-க்குமு் மேற்பட்டேர் காயமடைந்தனர்.


எகிப்து வரலாற்றில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இது தான் மிகப்பெரிய தாக்குதல் என அந்நாட்டு டி.வி.சானல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.


தாக்குதல் சம்பவத்தையடுத்து அந்நாட்டு அதிபர் அப்துல் பதா அல் சிசி, உயரதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்றுநாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளதாவும், விமான நிலையங்கள், மக்கள் கூடும் வழிபாட்டு தலைங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..