அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும், தனது ஏவுகணை இலக்கில் வந்துள்ளது - வடகொரியா
வடகொரியா இன்று பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஒன்றை சோதனை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன, அதையும் மீறி நாங்கள் எங்கள் சோதனையை விடமாட்டோம் என்று வடகொரியா தெரிவித்திருந்தது.
உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து தனது சோதனையை மேற்கொண்டு வந்தது. இதையடுத்து சுமார் இரண்டு மாத காலமாக சோதனை மேற்கொள்ளாமல் இருந்த வடகொரியா, எந்த நேரத்திலும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் வடகொரியா இன்று உள்ளூர் நேரப்படி காலை 3.30 மணி அளவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
அது கிழக்கு நோக்கி பறந்ததாகவும், ஆனால் அது முழுமையாக எந்த வகையில் தயார் செய்யப்பட்டது, எவ்வளவு தூரம் சென்றது என்பது குறித்து தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகொரியா இந்த ஆண்டு பல ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. அதுமட்டுமின்றி அடுத்தாண்டு அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை ஒன்றை வடகொரியா தயார் செய்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.
அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த பின்னர் வடகொரியா ஒரு அணுசக்தி நாடாக அதன் இலக்கை அடைந்து உள்ளது. தற்போது அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும் தனது ஏவுகணை இலக்கில் வந்துள்ளது.
பெருமையுடன் பிரகடனம் செய்கிறோம் இறுதியாக வடகொரியா அணுசக்தியை நிறைவு செய்யும் பெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது என வடகொரியா கூறி உள்ளது.