ஆட்டிப்படைக்கும் ஆளுமை.! பிரபாகரன்

ஆட்டிப்படைக்கும் ஆளுமை.! பிரபாகரன்

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று.  இத்­த­கைய நிலையில், கடந்த 18ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சரும் பீல்ட் மார்­ஷ­லு­மான சரத் பொன்­சேகா உரை­யாற்­றிய போது, வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னையும் தொட்டுச் சென்­றி­ருந்தார். அவ­ரது உரையின் முக்­கி­ய­மான பகுதி அது.
“பிர­பா­க­ர­னிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிர­பா­கரன் உரு­வா­கி­யதால் தான், பீல்ட் மார்ஷல் ஒரு­வரும் உரு­வானார்” என்று அவர் கூறி­யி­ருந்தார்.
2011ஆம் ஆண்டு ஒஸ்­லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய, நோர்­வேயின், இலங்­கைக்­கான முன்னாள் சமா­தானத் தூதுவர் எரிக் சொல்­ஹெய்மும், அமெ­ரிக்­காவின் முன்னாள் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்­மி­ரேஜூம், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை ஒரு சிறந்த போரியல் வல்­லுனர் – இரா­ணுவ மேதை என்று குறிப்­பிட்­டி­ருந்­தனர்.
ஆனாலும், பிர­பா­க­ரனின் அர­சியல், இரா­ஜ­தந்­திர ஆளு­மையை அவர்கள் அந்­த­ள­வுக்கு சிறப்­பாக மதிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.  எனினும், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின், போரியல் ஆளுமை என்­பது, எவ­ராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாத ஒன்­றா­கவே இருந்­தது என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஒன்றும் பிர­பா­க­ர­னுக்கு புக­ழாரம் சூட்­டு­வ­தற்­காக, பாரா­ளு­மன்­றத்தில் அந்தக் கருத்தைக் கூறி­யி­ருக்­க­வில்லை. அது பிர­பா­க­ரனின் போரியல் ஆளு­மையை வெளிப்­ப­டுத்தும், அங்­கீ­க­ரிக்கும் கருத்து என்­பதில் சந்­தே­க­மில்லை.
இன்று இலங்­கையின் முப்­ப­டை­களும் அதி­ந­வீன ஆயு­தங்கள், போர்த்­த­ள­வா­டங்­க­ளுடன் இருக்­கின்­றன என்றால், மூன்று இலட்சம் படை­யி­னரைக் கொண்­ட­தாக விளங்­கு­கி­றது என்றால், அதற்கு ஒரே காரணம் பிர­பா­கரன் தான்.
அதனால் தான், பிர­பா­க­ர­னிடம் தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருந்தார்.
போர் தொடங்­கிய போது, வெறும் 10 ஆயிரம் படை­யி­னரே இலங்­கையில் இருந்­தனர். அப்­போது எந்த நவீன போர்த் தள­வா­டங்­களும் படை­யி­ன­ரிடம் கிடை­யாது. போருக்­கான ஆயத்­த­நி­லையும் இல்லை.
இருந்­தாலும், மர­புசார் பயிற்­சி­களைப் பெற்ற ஓர் இரா­ணுவம் இருந்­தது. அதனை எதிர்­கொண்டு தான் பிர­பா­கரன் தனது போர் ஆற்­றலை வளர்த்துக் கொண்டார்.
பிர­பா­கரன் எங்கும் போர்க்­க­லையைக் கற்­க­வில்லை. எந்த நாட்­டி­டமும் பயிற்­சி­களைப் பெற­வில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவே, பிர­பா­க­ர­னிடம் தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அள­வுக்கு அவ­ரது போர் ஆளுமை அமைந்­தி­ருந்­தது.
இலங்கை இரா­ணுவம் இப்­போது, உலகில் கவ­னிக்­கத்­தக்க ஓர் இரா­ணு­வ­மாக இருக்­கி­றது என்றால்,  இலங்கை இரா­ணு­வத்­திடம் போர் அனு­ப­வங்­க­ளையும் நுட்­பங்­க­ளையும் கற்­றுக்­கொள்ள பல நாடுகள் முற்­ப­டு­கின்­றன என்றால், அதற்கு ஒரே காரணம், பிர­பா­க­ரனின் போர் ஆளுமை மட்டும் தான்.
அந்த ஆளு­மையைத் தோற்­க­டித்த ஒரே கார­ணத்­தினால் தான், இலங்கை இரா­ணு­வத்­துக்கு இந்த மவுசும் மதிப்பும் கிடைத்­தது. வெளி­யு­லக ஆத­ரவு இல்­லாமல் ஒரு படைக்­கட்­ட­மைப்பை உரு­வாக்கி, சர்­வ­தே­சத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அள­வுக்கு அதனைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்தார் பிர­பா­கரன். பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படை­யினர் தான் இருந்­தனர். இப்­போ­துள்ள 3 இலட்சம் படை­யினர் இருந்­தி­ருந்தால், இரண்டு ஆண்­டு­களில் போரை முடி­வுக்குக் கொண்டு வந்­தி­ருப்போம் என்று கூறி­யி­ருக்­கிறார்.
இலங்கை இரா­ணு­வத்­துடன் போரைத் தொடங்­கிய போது, விடு­தலைப் புலி­களும் ஒன்றும் ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளி­க­ளையோ, மிகப்­பெ­ரிய ஆயுத தள­வா­டங்­க­ளையோ, நவீன போர்க்­க­ரு­வி­க­ளையோ, சண்­டைப்­ப­ட­குகள், விமா­னங்­க­ளையோ கொண்­டி­ருக்­க­வில்லை.
ஐந்து பத்துப் பேரில் இருந்து தான், இரா­ணு­வத்­துக்கு எதி­ரான போர் புலி­களால் தொடங்­கப்­பட்­டது. குறைந்­த­ளவு போரா­ளி­களே இருந்­தாலும், இரா­ணு­வத்தின் செறிவு குறை­வாக இருந்­தமை, புலி­க­ளுக்குச் சாத­க­மாக இருந்­தி­ருக்­கலாம்.
அதனால் தான், இப்­போ­துள்ள படை­ப் பலம் இருந்­தி­ருந்தால் இரண்டு ஆண்­டு­களில் போரை முடித்­தி­ருக்­கலாம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருக்­கிறார்.
எனினும், படை­பலம் மாத்­தி­ரமே, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை வெற்­றி­கொள்­வ­தற்கு சாத­க­மான அம்­ச­மாக இருந்­தது என்ற கருத்து ஏற்­பு­டை­ய­தல்ல. மூன்­றா­வது கட்ட ஈழப்­போரில் கூட, இரண்டு இலட்சம் படை­யி­ன­ருடன் தான் அர­சாங்கம் இருந்­தது.
ஆனாலும் புலி­களை அப்­போது தோற்­க­டிப்­ப­தற்­கான சூழலும், உத்­தி­களும் வாய்க்­க­வில்லை.
பிர­பா­க­ர­னிடம் இருந்து போரிடும் முறை­களை மாத்­திரம் இரா­ணுவம் கற்றுக் கொள்­ள­வில்லை. பல ஆயு­தங்­களின் அறி­மு­கமும்  கூட இரா­ணு­வத்­துக்கு புலி­களால் தான் கிடைத்­தி­ருந்­தது.
1985ஆம் ஆண்டு ஜன­வரி 9ஆம் திகதி, அச்­சு­வே­லியில் புலி­களின் முகாம் ஒன்றை இரா­ணு­வத்­தினர் சுற்­றி­வ­ளைத்­தனர். அது ஓர் ஆயுதக் களஞ்­சி­ய­மா­கவும் விளங்­கி­யது. அங்­கி­ருந்து தான், ஆர்.பி.ஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்­மு­த­லாக இரா­ணு­வத்தின் கையில் கிடைத்­தது.
அதற்குப் பின்னர் அதே ஆர்.பி.ஜிகளை பெரு­ம­ளவில் இரா­ணுவம் வாங்கிக் குவித்­தது. அது­போல பல ஆயுத தள­வா­டங்­களை விடு­தலைப் புலிகள் போரில் அறி­மு­கப்­ப­டுத்­திய பின்­னரே, இரா­ணு­வத்­தினர் அதனை வாங்க முயன்­றனர்.
சாம் எனப்­படும் விமான எதிர்ப்பு ஏவு­க­ணை­க­ளையும் விடு­தலைப் புலி­க­ளுக்குப் பின்னர் தான் விமா­னப்­படை வாங்­கி­யது. பல்­குழல் பீரங்­கி­க­ளையும் விடு­தலைப் புலிகள் தான் முதன் முதலில் இலங்­கையில் பயன்­ப­டுத்தத் தொடங்­கினர்.