30 இந்துக்கள் வீடுகள் தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
வங்காளதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர்புரா கிராமத்தில் உள்ள இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பேஸ்புக் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி தாக்குதல் நடத்தப்பட்டது.
பல கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 30க்கு மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகின. வன்முறை கும்பலை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிடப்பட்டுள்ளளது.
இந்நிலையில், இந்துக்கள் வீடுகளில் தீவைத்தது தொடர்பாக 53 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இந்துக்கள் வீடுகளில் தீ வைத்தது தொடர்பாக கோட்வாலி மற்றும் கங்காசரா காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 53 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.