வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்குமாறு சீனா அதிகாரிகள் வலியுறுத்தல்

வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்குமாறு சீனா அதிகாரிகள் வலியுறுத்தல்


பீஜிங் : சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் தங்களின் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. உலகின் மிகப் பெரிய மதசார்பற்ற நாடாக விளங்கிய நாடு சீனா. ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி வந்த பிறகு, மதங்களின் மீதான நம்பிக்கையை போக்கி, தங்கள் கட்சியின் மீது நம்பிக்கை கொள்ள செய்வதற்காக ஏராளமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் அரசின் நலத்திட்டங்களைப் பெற கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஏசுவின் படத்துக்குப் பதிலாக அதிபர் ஜின்பிங் படத்தை வைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. தென்கிழக்கு சீனாவின் யுகான் மாகாணத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் வீடுகளில் அதிபர் ஜின்பிங் படத்தை வைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஏசு அவர்களை வறுமையில் இருந்து வெளிக் கொண்டுவரவோ, நோய்களில் இருந்து காப்பாற்றவோ மாட்டார் என்றும், ஆனால் அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.