முனைங்


தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது. மனிதர்களுக்கு பதிலாக பல துறைகளில் ரோபோக்கள் பணியில் நியமிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள 'ரோபோட்' என்ற சைனீஸ் உணவகத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்கள் வெயிட்டர்களாக  செயல்படுகின்றன. இதற்காக இந்த உணவகத்தின் உரிமையாளர் சீனாவில் இருந்து 4 ரோபோக்களை இறக்குமதி செய்துள்ளார்.

உணவகத்தில் உள்ள மேஜையில் பொருத்தப்பட்டுள்ள ஐ-பேட் மூலம் வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம். அது டிரன்ஸ்மிட்டர் மூலமாக சமையல் அறைக்கு செய்தி சென்றடையும். அதை கண்ட சமையல் காரர்கள் சமைத்து அதனை ரோபோட்டின் கையில் உள்ள தட்டில் வைத்து அனுப்புவர். அது உணவை வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும்.

ரோபோட்டில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் அவை வாடிக்கையாளர்களை சென்றடையும். ரோபோவானது வாடிக்கையாளர் வாசலில் வரும் போதே அவர்களை வரவேற்று மேஜையில் அமர வைக்கும். வாடிக்கையாளர்களை நினைவில் கொண்டு மீண்டும் உணவகத்திற்கு வந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும், உணவகத்தில் உள்ள ரோபோக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் மனிதர்கள் உணவு பரிமாறி பார்த்த வாடிக்கையாளர்க்கு ரோபோர்ட் உணவு கொடுப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த
உணவகம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.


ஆவிகள் உண்டா? இறந்தவர் ஆவிகள் எங்கே போகின்ன? .ஏன் இந்த உலகத்தில் பலவிதமான தெய்வங்கள் ? அவைகளில் யார் உண்மை தெய்வம் இப்படி பலவிதமான கேள்விகளிற்கு விடை இந்த காணொளிகள் 
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் தேர்தல் பிரசாரத்துக்கு நீர்வழி விமானத்தை பயன்படுத்துகிறார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ 2002-ம் ஆண்டே கடல்வழி விமானத்தை பயன்படுத்திவிட்டனர் என்பது வரலாறு.


குஜராத்தில் சபர்மதி ஆற்றில் நீர்வழி விமானம் இயக்கபடுகிறது. இந்த விமானம் மூலமாக தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.
இந்தியாவுக்கு கடல்வழி அல்லது நீர்வழி விமான சேவை புதியதாக இருக்கலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2002-ம் ஆண்டிலேயே இதனை பயன்படுத்தினார்.
இலங்கையுடன் பேச்சுவார்த்தை
பிரபாகரன் பிரஸ் மீட் .

2002-ம் ஆண்டு இலங்கை அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தனர். இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சர்வதேச செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.


பாலசிங்கத்துக்கு அழைப்பு
அனுமதி மறுப்பு
இந்த் பிரஸ் மீட்டில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தமிழீழத்துக்கு வருகை தர இருந்தார். ஆனால் இதற்கு உரிய அனுமதிகள் கிடைக்கவில்லை.


இதையடுத்து நார்வேயின் உதவியுடன் மாலத்தீவுக்கு பாலசிங்கம் வருகை தந்தார். அங்கிருந்து கடல்வழி விமானம் மூலமாக வன்னியின் இரணைமடுகுளத்துக்கு பாலசிங்கமும் அவரது மனைவி அடேல் அம்மையாரும் வருகை தந்தனர்.இரணைமடுகுளத்துக்கு நேரில் சென்று பாலசிங்கத்தை தளபதிகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வரவேற்றார் என்பது  வரலாறு. அவருடன் மனைவி மதிவதினி, அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலிகளின் குரல் வானொலி பொறுப்பாளர் ஜவான் உள்ளிட்டோர் பாலசிங்கத்தை வரவேற்றனர்.
பிரான்ஸில் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிற்கு மாணவர்கள் தொலைபேசி கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் தொலைபேசி பாவிப்பதற்கு ஏற்கனவே தடை உள்ளது. ஆனாலும் தற்று போது பிரான்ஸ் கல்வி அமைச்சர் Jean Michel Blanquer அறிவித்துள்ள தடையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவர்கள் தொலைபேசி கொண்டுவருவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத் தடையானது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரானின் தேர்தல் கொள்கைகளில் ஒன்றாகும்.

இருப்பினும் இத் தடையை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனென்றால் வகுப்புக்கள் முடிந்து வெளியில் செல்லும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் தொடர்பில் இருக்க முடியாது என கூறியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி பிரான்ஸில் 80 சதவீத பதின்ம பருவத்தினர் ஸ்மாட் போன்களை வைத்துள்ளனர். தற்போது ஸ்மாட் போன் பயன்படுத்தும் ஆரம்பப்பள்ளி மாணவர்களது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
சமாதானத்தை நோக்கி நகரும் விதமாக, ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற உண்மையுடன் பாலத்தீனியர்கள் கட்டாயம் உடன்பட வேண்டும் என இஸ்ரேஸ் பிரதமர் கூறியுள்ளார்.
ஜெருசலேம் 3,000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்த மக்களுக்கும் தலைநகராக இருந்ததில்லை என இஸ்ரேஸ் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்த பிறகு முஸ்லிம்கள் மற்றும் அரபு உலகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் பெஞ்சமின் நெதன்யாகு இக்கருத்தைக் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகில் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.
ஜெருசலேமில், மத்திய பேருந்து நிலையத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு வீரரைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்திய ஒரு பாலத்தீனியர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் உடனான பேச்சுவார்த்தைக்கும் பிறகு பேசிய பெஞ்சமின் நெதன்யாகு,''ஜெருசலேமிற்கும் யூத மக்களுக்கு உள்ள ஆயிரமாயிரம் இணைப்புகளை மறுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அபத்தமானது'' என கூறினார்.
''இதைப்பற்றி மிகவும் நல்ல புத்தகமான பைபிளில் படிக்கலாம்'' என கூறினார்.
''எங்கள் புலம்பெயர்ந்த யூத சமூகத்தின் வரலாற்றின் மூலம் இதைப்பற்றி நீங்கள் அறியலாம். ஜெருசலேம் இல்லாமல் வேறு எங்கு இஸ்ரேலின் தலைநகர் இருக்கும்'' என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு.
''இந்த உண்மையுடன் விரைவில் பாலத்தீனியர்கள் உடன்பட்டால், விரைவாக நாம் அமைதியை நோக்கி நகரலாம்'' எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்,அமெரிக்க துணை அதிபரான மைக் பென்ஸ் உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது 'துரதிருஷ்டவசமானது' என மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எகிப்தின் மூத்த கிறித்துவ மற்றும் முஸ்லிம் மதகுருக்களும், மைக் பென்ஸ் உடனான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளனர்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்குப் பரவலான கண்டங்கள் எழுந்துள்ளன. ஜெருசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா காத்துவந்த நடுநிலை, டிரம்பின் நடவடிக்கையால் மாறியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலத்தீனியர்களுக்கும் ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த இடம். யூதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் புனித தளங்கள் இங்கு உள்ளன.
ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் எப்போதும் கருதுகிறது. ஆனால், 1967 போரின் போது கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக பாலத்தீனியர்கள் கூறுகின்றனர்.