நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

‘என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று திருகோணமலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த போது 8 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பின் அக் குழுவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. கட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஐந்து கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்தேன். நான் சேர முன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே. அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாதிருந்தது.

சேர்ந்த போது தான் பலதும் வெளிவந்தன. ஆனால் முன்னர் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன்.

கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது தான் யதார்த்தமாக இருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எந்தவித கூட்டுக் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டேன்.

நடைமுறை நலன்கள் எவ்வாறு அமைந்தனவோ அவற்றை முன்வைத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்துக்கெடுக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு தேர்தல் விஞ்ஞாபன சிந்தனைக்கேற்ப இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணை கொண்டுவரப்பட்டு எமது வடமாகாண சபையால் 10.02.2015இல் ஏக மனதாக ஏற்கப்பட்ட போது கட்சித் தலைமைத்துவம் அதிர்ச்சி அடைந்ததை நான் கண்டேன்.

அது சம்பந்தமான தலைமைத்துவக் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததையும் கண்டு கொண்டேன். பின்னர் தான் அறிந்து கொண்டேன் சிலருக்கு வரவிருந்த சுயநல வரவுகள் சில அந்தப் பிரேரணையால் பறிபோனதென்று.நாங்கள் மக்களிடம் வாக்கு கேட்கும் போது எமது கொள்கைகளை முன் வைத்தே கேட்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் அவற்றை மாற்றி, குறைத்தோ கூட்டியோ நாங்கள் அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பது என்றால் அது மக்களின் கருத்துக்கிசைவாக நடைபெற வேண்டும்.

ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கருத்தொருமிப்பின் அடிப்படையில் அவ்வாறான முரண்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட வேண்டும். ஏன் என்றால் நாங்கள் மக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். அவர்கள் நலம் சார்ந்தே நாங்கள் அரசியல் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக சுயலாபம் கருதி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.

ஆனால் அவ்வாறு தலைமையே கூட்டுக் கட்சியின் கொள்கைகளை உதாசீனம் செய்யும் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று வெளியேற வேண்டும். வெளியேறினால் உதாசீனம் செய்து நடந்து கொள்பவர்கள் கை ஓங்கிவிடும். இது எமது மக்களையே பாதிக்கும்.மக்கள் பெருவாரியாக என்னைத் தேர்ந்தெடுத்த போது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஒட்டு மொத்த கொள்கைகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவற்றிலிருந்து ஒரு கட்சியின் தலைமைத்துவம் வழுக முற்படும் போது கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் சார்பாக மாற்ற எத்தனிப்பதே எமது கடமை என்று உணர்ந்தேன்.

கட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைகளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவி தான் கட்சி ஒழுக்கம் என்ற பிரம்பு. “நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்குக் கட்சித் துண்டு கிடைக்காது” என்பார்கள் அல்லது “நாங்கள் சொல்வதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்றால் அடுத்த முறை உங்களுக்குத் துண்டு நிச்சயம்” என்பார்கள்.

நான் என் கட்சியை அடையாளப்படுத்துங்கள் என்று ஏற்கனவே உங்களிடம் கேட்டுள்ளேன். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு நான் நடக்கவில்லை என்று கூறும் போது அதே கட்சியின் கொள்கைக்குக் கட்டுப்படாத கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் என்ன பதில் கூற முடியும்? என்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் எமது முரண்பாடுகள் பற்றிக் கூறியிருப்பேன். அது நடைபெறாத நிலையில் எமது கொள்கை ரீதியான விடயங்களை வெளிப்படையாக மக்களுக்குக் கூறுவதே எமது கடமை என்று நான் நினைத்தேன். அதையே செய்தும் வருகின்றேன்.

தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது. தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலுக்கு எந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குக் கேட்கின்றது என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்பொழுது தான் கட்சித் தலைமைத்துவத்திடம் சில கேள்விகளை மக்கள் கேட்கலாம். அதாவது எமக்கு ஒன்றைக் கூறி அதற்கு மாறாக அரசாங்கத்துடன் நீங்கள்நீங்கள் நடந்து கொள்ளும் நடவடிக்கையின் பின்னணி என்ன? நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள்? என்று இன்னோரன்ன கேள்விகளை மக்கள் கேட்க வழிவகுக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு “நாம் தான் தலைமை! நாம் முடிவெடுத்து விட்டோம். அது வழி நடவுங்கள் அல்லது சீட்டுமில்லை சிறப்புமில்லை” என்று கூறுவது ஜனநாயகம் ஆகாது. அவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலஞ் சாராது.ஆகவே தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நான் கூறும் பதில் பல தடவைகள் சிறை சென்ற போது நீங்கள் கொண்டிருந்த உறுதியான கொள்கைகளில் இருந்து நீங்கள் வழுவி விட்டீர்களா? ஏன்? பிறழ்வான கொள்கைகளுக்கு என்னைப் பணியச் செய்வதில் உங்களுக்கென்ன இலாபம்? உங்கள் கொள்கைகளைப் பழையபடி உறுதியாக எடுத்தியம்பி நிலையான தமிழரசுக் கட்சிக் கொள்கைகளுக்கு நீங்கள் இன்னமும் விஸ்வாசமாக இருக்கின்றீர்கள் என்று பகிரங்கமாக அறிவியுங்கள்.

இடைக்கால அறிக்கையின் போதாமை பற்றிப் பிரஸ்தாபியுங்கள். எவற்றை நாங்கள் அரசியல் ரீதியாகப் பெறவேண்டும் என்பதைப் பகிரங்கமாக அறிவியுங்கள். அவை கட்சியின் 2013ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்புடையதாக இருந்தால் நான் கட்சி கூறுவதற்குக் கட்டுப்படுவேன்.

அடுத்து மீண்டும் வன்முறை வெடிக்கும் சாத்தியம் பற்றியது…

உண்மையைக் கூறினால் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதின் அர்த்தம் ஒருவர் மிரட்டினால் அடங்கிப் போங்கள் என்பது தான். நாம் கூறி வருவது எமக்குத் தெரிந்த உண்மை. உண்மையைக் கூறப் பின் நின்றால் பொய்மைக்கு நாம் இடமளிக்க வேண்டி வரும். சரித்திர ரீதியாக சிங்கள மொழி 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே பிறந்தது என்றேன். எனவே அதற்கு முன்னைய மக்களைச் சிங்கள மக்கள் என்று நாம் எவ்வாறு அழைக்க முடியும் என்று கேள்வி கேட்டேன். சிங்கள மொழி பேசுவதால் தான் ஒரு குழு மக்கள் சிங்கள மக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.

அந்த மொழியே ஒரு காலத்தில் இல்லாதிருந்த போது அம் மக்கள் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு அடையாளப்படுத்த முடியும்? இது தான் யதார்த்தம். இது தான் உண்மை.நாங்கள் இது வரை இதைக் கூறவில்லை. இப்பொழுது இதை நான் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைப் பொறுக்க மாட்டாதவர்கள் தான் என்னைப் பைத்தியம் என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். பகைவனாகப் பார்க்கின்றார்கள்.

அடுத்து நான் சமஷ்டியைக் கோருவதால் வன்முறை வெடித்துவிடும் என்று பயமுறுத்துகின்றார்கள். இப்பொழுது சிங்கள மக்களிடையே படிப்பறிவுடையவர்கள் சமஷ்டியைச் சரியென ஏற்றுக்கொண்டு வருகின்றார்கள்.பின் எதற்கு இந்தப் பயம்? ஒரு விடயம் புரியாமல் இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு நாங்கள் அதை இதைக் கூறிவிடுகின்றோம். ஆனால் புரிந்துணர்வு ஏற்படும் போது அமைதியாக சிந்திக்க தொடங்குகின்றோம்.

சமஷ்டி ஒரு பூச்சாண்டி அல்ல. அது பிரிவினை அல்ல. மாறாக மக்களைச் சேர்க்கும் ஒரு அரசியல் உபாயம் என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எங்களுள் சிங்களம் தெரிந்தவர்கள் இதைச் சிங்களப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.சிவாஜிலிங்கமும் நானும் இதைச் செய்கின்றோம். அதே போல் சம்பந்தனும், சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு சமஷ்டியின் தேவைகளையும் அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக் கூற முன் வர வேண்டும்.

எம்மவருள் சிலர் “அது எப்படி சமஷ்டியைக் கேட்பது சிங்களவர்கள் அதற்கெதிரே” என்று கூறுகின்றார்கள். அவர்கள் தான் தெற்கில் இருந்து கொண்டு சிங்கள மக்கள் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள்.இவர்கள் ஒன்றைப் புரிந்த கொள்ள வேண்டும். நாங்கள் வடகிழக்கு இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, சமஷ்டியை விட்டுக் கொடுத்து ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் குறைந்த ஒரு தீர்வைப் பெற்று விடலாம். எலும்புத் துண்டுகள் எமது அப்போதைய சுயநலப் பசியைத் திருப்திப்படுத்தக் கூடும். ஆனால் நாளடைவில் நடக்கப் போவதென்ன? எமது தனித்துவம் அழிந்து விடும்.

மீண்டும் மீண்டும் எமது மக்கள் வெளிநாடுகள் நோக்கிச் செல்வார்கள். இப்பொழுது எமது வடமாகாண சபையில் இருவர் இருக்கும் இடத்தில் சபையின் பாதி அவர்களின் மக்கள் என்ற நிலை 20 வருடங்களுக்குள்ளேயே ஏற்பட்டு விடும்.இன்று பறங்கியர் பற்றி பேசும் போது நாம் கடந்த காலத்தைச் சுட்டியே பேசுகின்றோம். ஐம்பது வருடங்களின் பின்னர் எம்மைப் பற்றியும் கடந்த காலத்தில் தான் வைத்துப் பேசுவார்கள்.

இந்த நிலை வர ஒரு சில எலும்புகளைப் பெற்று கொள்கைகளை விட்டுக் கொடுப்பது தான் சரி என்று இந்தத் தெற்கத்தியத் தமிழர்கள் நினைக்கின்றார்களா? இந்த நிலை வர வேண்டும் என்பது தான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா? அப்படியானால் அது இனப்படுகொலை என்ற கருத்தினுள் அடங்கும் என்பதை அவர்கள் அறிவார்களா?வன்முறை வெடிக்கும் என்பது சம்பந்தமான எனது பதில் ‘வன்முறை வரும்’ என்பது எம்மைப் பயமுறுத்தும் ஒரு செயல்.

போர் வெடித்ததால் எமது நாடு எவ்வாறான உயர் கடன்களைப் பெறவேண்டியிருந்தது என்பதைத் தெற்கு அறியும். அவர்களின் இராணுவம் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். ஆகவே எமது சிங்கள அரசியல்வாதிகள் வன்முறை வெடிக்க விடமாட்டார்கள். இன்னுமொரு 1983 வந்தால் இலங்கையின் பெயர் உலக அரங்கில் நாறும். அதையும் மீறி அவ்வாறு வெடித்தால் வெடிக்கட்டுமே. நாம் இதுகாறும் கூறி வந்த உண்மையை உலகம் அறிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும்.

எமது மக்கள் இதுவரை பட்ட பாட்டிற்கு மேலதிகமாக நாங்கள் எதைச் சந்திக்கப் போகின்றோம்? வன்முறை வெடிக்கும் என்பது சுயநலவாதிகளின் பயமே ஒளிய அதில் உண்மை இல்லை.இந்தக் கூற்று தெற்கில் இருந்து வருவதில் இருந்து அதன் சுயநலப் போக்கைப் புரிந்து கொள்ளலாம். தெற்கில் கொழும்பில் சொகுசாக வாழ்பவர்கள் தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.

ஆகவே எமது கட்சித் தலைமைகள் தங்கள் நிலையை எமது மக்கள் சார்பாக அவர்களுடன் இணைந்து உருவாக்க முன்வரவேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார
அமெரிக்காவில் தெலாவரில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் இருந்தது. தற்போது அந்த தேவாலயம் சுவாமி நாராயணன் கோவில் ஆக மாற்றப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மணிநகர் பகுதியில் உள்ள சுவாமி ‘நாராயண் காடி சன்ஸ்தான்’ என்ற அமைப்பு அதற்கான ஏற்பாட்டை செய்தது. இந்த கிறிஸ்தவ தேவாலயம் செயல்படாமல் இருந்தது.

அதை விலைக்கு வாங்கி இந்து கோவிலாக மாற்றம் செய்துள்ளது. அதற்காக ரூ.10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் இந்து கோவிலாக (சுவாமி நாராயண் கோவில்) மாறியுள்ள 3-வது கிறிஸ்தவ தேவாலயமாக இது விளங்குகிறது. ஏற்கனவே கலிபோர்னியா மற்றும் கென்டக்கியில் 2 தேவாலயங்கள் இந்து கோவில்களாக மாறியிருக்கின்றன.

இவை தவிர இங்கிலாந்தில் லண்டன் மற்றும் மான்செஸ்டர் அருகேயுள்ள பாஸ்டன் ஆகிய 2 இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கோவிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகில் 5 கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்து கோவிலாக மாற்றம் கண்டுள்ளன.

அமெரிக்காவின் தெலாவரில் மாற்றம் செய்யப்பட்டுள்ள கோவில் 3 ஆயிரம் சதுர அடி கொண்டது. இங்கு சுவாமி நாராயண் சிலை கடந்த மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதவிர அனுமன் மற்றும் விநாயகர் சிலைகளும் அங்கு நிறுவப்பட்டுள்ளன.

சுவாமி நாராயண் காடி சன்ஸ்தான் அமைப்பின் தலைமை குரு புருசோத்தம் பிரியதாஸ் சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா வருகை தந்தார். அப்போது அங்கு கோவில் கட்ட விரும்பினார். அமெரிக்காவில் தெலாவர், மேரிலேண்ட், பென்சில்வேனியா, நியூஜெர்சி பகுதிகளில் தங்கியிருக்கும் சுவாமி நாராயண் பக்தர்களை சந்தித்தார்.

அமெரிக்காவில் சுவாமி நாராயணன் கோவிலை கட்ட வலியுறுத்தினார். அதை தொடர்ந்து அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இக்கோவில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. வழிபாடுகள் நடைபெறுகிறது.
மனிதர்கள் பொதுவாக தமக்கு வரும் அறிகுறிகளை தவிர்த்து அதனை அசட்டையீனம் செய்வது வழக்கம். இது பெரும் ஆபத்தான விளைவுகளில் கொண்டு போய் விடும். எமது உடல் பாதிப்படைந்திருக்கிறது என்பதனை காட்டும் சில முக்கிய அறிகுறிகள் உள்ளது. அதில் மிக முக்கியமான 10 அறிகுறிகளை இங்கே தருகிறோம். இவற்றில் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருந்தால் கூட நீங்கள் உடனே வைத்தியரை நாடுவது நல்லது..

அறிகுறி 1: நெஞ்சில் சளியே இல்லாமல் அடிக்கடி இருமுவது. இந்த இருமல் ஒரு வகையாக இருக்கும். சற்று வித்தியாசமாக இருப்பதோடு, மூச்சு எடுத்துவிடவும் சிரமாக இருக்கும். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

அறிகுறி 2: உங்கள் உடல் எடை திடீரெனக் குறைவது. வழமையான சாப்பாட்டை உட்கொண்டு வந்தாலும். திடீரென நீங்கள் எடை குறைந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

அறிகுறி 3: நெஞ்சில் லேசாக வலிப்பது(இடது புறமாக) தோழில் நோ. வேலையே செய்யாமல் வியர்ப்பது. லேசான தலை சுற்று அத்தோடு வாந்தி எடுப்பது போல உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. வயதானவர்கள் அஸ்பிரின் மாத்திரை ஒன்றை வீட்டில் வைத்திருப்பது நல்லது. லண்டனில் ஒரு வயதான மூதாட்டி(80) வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு மேல் உள்ள அறிகுறிகள் தோன்றவே. அவர் உடனே என்.எச்.எஸ் க்கு டெலிபோன் அடித்துள்ளார். வீட்டில் அஸ்பிரின் மாத்திரை இருந்தால் உடனே உட் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு முன் கதவை விறந்து விட்டு இளைப்பாறுங்கள் என்று அவர்கள் சொல்ல. அவரும் அதுபோல செய்துவிட்டு இளைப்பாறியவேளை , மாரடைப்பு வந்து மயங்கிப் போனார். ஆனால் வைத்தியசாலையில், கண் முழித்தார். அவர் சாப்பிட்ட அஸ்பிரின் மாத்திரை அவரை காப்பாற்றியதோடு. அம்புலன்ஸ் ஆட்கள் வந்தவேளை, அவர்கள் தீ அணைக்கும் படையை அழைத்து கதவை உடைக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. (அதற்கு பல நிமிடங்கள் பிடித்திருக்கும்) கதவு ஏற்கனவே திறந்து இருந்த காரணத்தால் அவர்கள் உடனே உள்ளே போய் முதலுதவி கொடுத்து. அம்மூதாட்டியை வைத்திய சாலை கொண்டு சென்று பிழைக்க வைத்தார்கள். இது உண்மைச் சம்பவம்.

அறிகுறி 4: சாப்பாடு விழுங்க கஷ்டமாக இருத்தல், தொண்டையில் கட்டி அல்லது தடக்குவது போன்ற உணர்வு. இது தொண்டை புற்று நோய்க்கான அறி குறி.றிகுறி 5: கண்களுக்கு அருகாமையில் தோன்றும் சிறு சிறு கொப்பளங்கள். இவை மிக மிக சிறியவையாக இருக்கும். கண்ணின் கரு வளையங்களில் இவை தோன்றும். இது தோன்றினாலே உடலில் கொலஸ்ரோல் மிக மிக அதிகமாகி விட்டது என்பது அர்த்தம். உடனே வைத்தியரை அணுகி கொலஸ்ரோலை செக் செய்வது நல்லது.

அறிகுறி 6: வயிறு அபரிவிதமாக வீங்கி இருப்பது. எடை கூடாமல், திடீரென வண்டி வீங்கி காணப்படும். பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வந்தாலும். மீண்டும் சில தினங்களில் வண்டி வீங்கி பெரிதாவிவிடும். இது வயிற்றுப் புண் (அல்சர்) அல்லது நாள் பட்ட அல்சர் குடல் புற்று நோய்க்கான அறிகுறி.

அறிகுறி 7: கைகளில் ஏற்படும் விறைப்பு, அல்லது கைகளில் திடீரென ஏற்படும் வலி(ஊசி குத்துவது போல ஒரு நோ) இது உடலில் சக்கரையின் அளவு அதிகரித்துள்ளது என்பதனை காட்டும். திடீரென கண் மங்கலாக தெரிவது. அடிக்கடி சிறு நீர் கழிப்பது(சிறு நீர் கொஞ்சமாக செல்லும்) ஆனால் பல முறை செல்லவேண்டி இருக்கும். சக்கரை நோய் என்பது உலகின் நம்பர் 1 உயிர் கொல்லி நோய். சரியாக கவனிக்காவிட்டால், கால் அழுகும், சிறு நீரகங்கள் செயல் இழக்கும். ரத்த நரம்புகளை பாதித்து பிளட் பிரஷரை கூட்டும். கண்களை பாதிக்கும். சடுதியாக இதயத்தை நிறுத்தும். மேலும் சொல்லப் போனால் மூளையில் சக்கரையின் அளவு கூடினால் கோமா நிலைக்கு சென்றுவிடுவார்கள்(செல்வி ஜெயலலிதாவைப் போல)

அறிகுறி 8: அடிக்கடி உறக்கம் வருவது. இல்லையேல் நீண்ட நேரம் உறங்குவது. உறக்கத்தில் இருந்து எழும்ப முடியாமல் இருப்பது. கடும் தலைவலி. தலைச் சுற்று. இது சிலவேளைகளில் மூளை கட்டியின் அறிகுறியாக இருக்கலாம். வெறும் தலை வலி என்று நினைத்து விடவேண்டாம்.

அறிகுறி 9: கைகளில் அல்லது உடலில் தோன்றும் சிறு சிறு கொப்பளங்கள். இவை வெகுப் பருபோல இல்லாமல் சற்று பெரிதாக காணப்படும். இது திடீரென தோன்றும். இவ்வாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.அறிகுறி 10: அடிக்கடி காச்சல், ஜலதோஷம்(தடிமன்) வருவது. புண் ஏற்பட்டால் மாற பல நாட்கள் பிடிப்பது. தொற்று வியாதிகள் உடனே தொற்றிக் கொள்வது. இவை இருந்தால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்துவிட்டது என்று அர்த்தம். எயிட்ஸ் நோய் தாக்கம் இருந்தாலும் இவ்வாறு தோன்றும். உடலுறவில் தொற்றும் இந்த எயிட்ஸ் பற்றி சில தவறாக கருத்துக்கள் உள்ளது. ஓரின உறவுக்காரர்களுக்கே இது அதிகமாக உள்ளதாக பரப்புரை செய்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல. எவர் ஒருவருக்கு எயிட்ஸ் இருக்கிறது. அவரோடு யார் உடலுறவு கொண்டாலும் , அவருக்கு அன் நோய் பரவும். ஆனால் அதனை கண்டு பிடிப்பது மகா கஷ்டமான விடையம். நல்ல ஆரோக்கியமான ஒரு இளைஞர் உடலில் எயிட்ஸ் வைரஸ் புகுந்தால் சிலவேளை 14 ஆண்டுகளுக்கு பிறகே அதன் தாக்கத்தை உணர முடியும். ஆனால் ரத்தப் பரிசோதனை செய்தால், உடனே கண்டு பிடித்துவிடலாம்.

ஆண்களை பொறுத்தவரை எயிட்ஸ் வைரசுகள், விந்து மற்றும் உறுப்பில் சுரக்கும் திரவத்தில் காணப்படுகிறது. எனவே இவை பெண்களுக்கு அல்லது வேறு ஒரு ஆணுக்கு செல்லும். அதே போல பெண்களுக்கு எயிட்ஸ் வைரஸ் பெண் உறுப்பில் சுரக்கும் திரவத்தில் காணப்படுகிறது. எனவே ஆண் உறுப்பின் முன் தோல்(மிக மிக மென்மையான) இடத்தில் அது பட்டால் ரத்த நாளம் ஊடாக உடலுக்குள் செல்கிறது. இந்த வரைசஸ் தாக்கினால் 2 வாரத்தினுள் லேசாக ஒரு காச்சல் இருக்கும். அவ்வளவு தான். 2வாரம் கழித்தே எமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள், இதனை எதிர்த்து போராடும் . இதனால் தான் காச்சலும் வரும். அதன் பின்னர் எயிட்ஸ் கிருமி, எமது உடலில் உள்ள வெள்ளை அணுக்களை எப்படி சமாளிப்பது என்று கண்டறிந்து அதுபோல செயல்பட அரம்பித்து விடும். பல வருடங்கள் பின்னரே இதனால் நாம் இறப்போம்.ஆனால் ஒரு நல்ல செய்தியும் உள்ளது. அமெரிக்கா முஸ்லீம்களை அழிக்க தயாரித்த இந்த வைரஸ் , தற்போது தனது செயல் திறனை இழந்து வருகிறது. முதல் முதல் தயாரிக்கப்பட்ட இந்த வைரஸ் குட்டி போட்டு,  குட்டி போட்டு தற்போது செயல் இழக்க ஆரம்பித்துள்ளது. அதாவது ஒரு பிரதியை நீங்கள் போட்டோ காப்பி எடுத்தால் அதனை மீண்டும் மீண்டும் எடுத்தால் ஒவர் பிரதியும் அதன் உண்மை தன்மையை இழந்து போகும். அது போல தற்போது உள்ள எயிட்ஸ் கிருமிகள் அதன் மொத்த திறனில் இருந்து சுமார் 50% குறைந்துள்ளதாம். இதனால் இதனை கட்டுப்படுத்துவது என்பதும் இனி கடினமான விடையம் இல்லை என்கிறார்கள் மருந்து கம்பெனிகள்.
eno Yeno Yen Intha Muzhuval Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் Asathanaan Enmel Aasathi Konda Asathuru Un Pola Yevarumillai-2X அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட அசத்துரு உம் போல எவருமில்லை Yeno Yenindha Asalai Anbu Yeno Yenmeedhu Siluvai Anbu-2X ஏனோ ஏன் இந்த அசலை அன்பு ஏனோ என்மீது சிலுவை அன்பு Thavarugal Kondaen Nasinaigal Kondaen Aanalum Siluvaiyin Thalayazhi Kandaen Asadam Endrae Asattai Kandaen Asaraa Un Asarangal Thaangak Kandaen தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டே&ன் ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன் அசடம் என்றே அசட்டை கண்டேன் அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன் Naan Enna Seidhaen Endru Kaetkum Ulagil Enakkaaga Seidhitta Anbai Kandaen Thaniyaa Thagappanin Thalpam Kandaen (2) நான் என்ன செய்தேன் என்று கேட்கும் உலகில் எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன் தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
மனம் திரும்பிய மந்திரவாதி 
நாசாவைச் சேர்ந்த புரூஸ் மெக்கண்டில்சின் ஒரு புகைப்படம் 1984-ம் ஆண்டு வெளியிடப்பட்டு மிகவும் புகழ் பெற்றது. அந்த புகைப்படத்தில் புரூஸ் விண்வெளியில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் பயணம் செய்வார். விண்வெளியில் பிடிமானம் இல்லாமல் பயணம் செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில், புரூஸ் மெக்கண்டில்ஸ் கலிபோர்னியாவில் மரணமடைந்ததாக நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அவர் தனது 80வது வயதில் உயிரிழந்துள்ளார்.

அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் சாதனை நிமிடங்களை நாசா வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர் விண்வெளியில் வலம் வந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு உள்ளது. அவரின் இந்த புகைப்படம் விண்வெளி வரலாற்று பக்கங்களில் சிறந்த பக்கமாக அமையும் என்று புகழாரம் சூட்டியுள்ளது.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அங்கீகரிக்கப்பட்டதற்கு, ஐ.நா-வில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டுமென 128 நாடுகள் வாக்களித்துள்ளன.இலங்கை, இந்தியாவும், அமெரிக்காவின் முடிவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளது.

சமீபத்தில், இஸ்ரேல் தலைநகராகத் தொன்மையான ஜெருசலேம் நகரை அமெரிக்கா அங்கீகரித்தது. கடந்த 1967-ம் ஆண்டு, பாலஸ்தீனப் போரின்போது, கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் கைப்பற்றியது. பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகள் இந்த நகருக்கு உரிமைகொண்டாடி வரும் வேளையில், அமெரிக்காவின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்கா அறிவிப்பை திரும்பப் பெறவேண்டுமென, ஐ.நா-வில் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா அவையில், 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்துள்ளன. ஆதரவாக 9 ஓட்டுகளே கிடைத்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 21 நாடுகள் வாக்குப்பதிவு செய்யவில்லை. வாக்கெடுப்பின்போது நழுவிய நாடுகளில் ஆஸ்திரேலியா, கனடா போன்றவை முக்கியமானவை. அமெரிக்காவுக்கு ஆதரவாக பலம்வாய்ந்த நாடுகளுள் ஒன்றுகூட வாக்களிக்கவில்லை. ஹோண்டுராஸ், கவுதமாலா, டோகோ போன்ற குட்டி நாடுகள்தான் வாக்களித்திருந்தன. பாகிஸ்தானும்கூட அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

ஐ.நா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே, ‘அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளைக் குறித்துவைத்து நிதியுதவியை ரத்து செய்வோம்’ என்று எச்சரித்திருந்தார். ஆனால், எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவுக்கு ஐ.நா சபையில் பலத்த அடி கிடைத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பாலஸ்தீன விவகாரத்தில், ‘ எங்கள் நாட்டுக்குள்ள சுதந்திரமான கொள்கை முடிவைத்தான் பின்பற்றுவோம் ‘ என்று தெளிவாகக் கூறிவிட்டது. சமீபத்தில், இஸ்ரேல் நாட்டுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பாலஸ்தீனத்துக்கு மோடி செல்லவில்லை. அடுத்தமாதம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நாதன்யாகு இந்தியாவுக்கு வருகிறார். இந்நிலையிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்துள்ளது. வங்கதேசம், மாலத்தீவு நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளன.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஒரே நாளில் ரூ.100 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்களார்களுக்கும் அதிமுக சார்பில் ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அதே நேரத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாவிட்டாலும், வீட்டின் உள்ளே பணத்தை வீசிவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. சென்னை மணலி பகுதியில் பட்டியல் போட்டு, கவர்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வைத்து விநியோகித்து வருபவர்களை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். ஒவ்வொரு கவரிலும் சுமார் 6000 இருப்பதாகவும், பட்டியலில் வாக்காளர்கள் பெயர் முழு முகவரியுடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று தொகுதி முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் விநியோகித்திருப்பதாக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஆர்.கே.நகரில் உள்ள பிசியோதெரஃபி மையத்தில் இருந்து 13 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் காணவேண்டிய காணொளி
கடலில் மற்றும் விவசாயிகள் மீது வரும் ஆபத்து  அதன் பிண்ணனி  அதனால் நனமையை பெறுபவர்கள் யார்? அன்றே  அம்பலப்படுத்திய கத்தர்

பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும். குடலியக்க பிரச்சினையால் அதிகம் சங்கடப்படுபவர்கள் தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. இவ்வாறு சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கி, குடலியக்கம் சீராக்கப்படும். முக்கியமாக குடல் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும். குடற் புற்று நோயை நீக்கும் போிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்கலாம். மற்றும் உடலின் கொலஸ்ரோல் உறிஞ்சும் அளவை இது குறைக்கின்றது. இதனால் கொலஸ்ரோல் பிரச்சனையால் இதய நோய் வருவது தடுக்கப்படும். பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும், எலும்புகளை பலப்படுத்தும், இளைப்பு நோயைக் குணப்படுத்தும், புண்களை ஆற்றும் மற்றும் மூட்டுவலியை நீக்கும்.

தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது. மனிதர்களுக்கு பதிலாக பல துறைகளில் ரோபோக்கள் பணியில் நியமிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள 'ரோபோட்' என்ற சைனீஸ் உணவகத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்கள் வெயிட்டர்களாக  செயல்படுகின்றன. இதற்காக இந்த உணவகத்தின் உரிமையாளர் சீனாவில் இருந்து 4 ரோபோக்களை இறக்குமதி செய்துள்ளார்.

உணவகத்தில் உள்ள மேஜையில் பொருத்தப்பட்டுள்ள ஐ-பேட் மூலம் வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம். அது டிரன்ஸ்மிட்டர் மூலமாக சமையல் அறைக்கு செய்தி சென்றடையும். அதை கண்ட சமையல் காரர்கள் சமைத்து அதனை ரோபோட்டின் கையில் உள்ள தட்டில் வைத்து அனுப்புவர். அது உணவை வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும்.

ரோபோட்டில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் அவை வாடிக்கையாளர்களை சென்றடையும். ரோபோவானது வாடிக்கையாளர் வாசலில் வரும் போதே அவர்களை வரவேற்று மேஜையில் அமர வைக்கும். வாடிக்கையாளர்களை நினைவில் கொண்டு மீண்டும் உணவகத்திற்கு வந்தால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும், உணவகத்தில் உள்ள ரோபோக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் மனிதர்கள் உணவு பரிமாறி பார்த்த வாடிக்கையாளர்க்கு ரோபோர்ட் உணவு கொடுப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த
உணவகம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.


ஆவிகள் உண்டா? இறந்தவர் ஆவிகள் எங்கே போகின்ன? .ஏன் இந்த உலகத்தில் பலவிதமான தெய்வங்கள் ? அவைகளில் யார் உண்மை தெய்வம் இப்படி பலவிதமான கேள்விகளிற்கு விடை இந்த காணொளிகள் 
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் தேர்தல் பிரசாரத்துக்கு நீர்வழி விமானத்தை பயன்படுத்துகிறார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ 2002-ம் ஆண்டே கடல்வழி விமானத்தை பயன்படுத்திவிட்டனர் என்பது வரலாறு.


குஜராத்தில் சபர்மதி ஆற்றில் நீர்வழி விமானம் இயக்கபடுகிறது. இந்த விமானம் மூலமாக தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.
இந்தியாவுக்கு கடல்வழி அல்லது நீர்வழி விமான சேவை புதியதாக இருக்கலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2002-ம் ஆண்டிலேயே இதனை பயன்படுத்தினார்.
இலங்கையுடன் பேச்சுவார்த்தை
பிரபாகரன் பிரஸ் மீட் .

2002-ம் ஆண்டு இலங்கை அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தனர். இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சர்வதேச செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.


பாலசிங்கத்துக்கு அழைப்பு
அனுமதி மறுப்பு
இந்த் பிரஸ் மீட்டில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தமிழீழத்துக்கு வருகை தர இருந்தார். ஆனால் இதற்கு உரிய அனுமதிகள் கிடைக்கவில்லை.


இதையடுத்து நார்வேயின் உதவியுடன் மாலத்தீவுக்கு பாலசிங்கம் வருகை தந்தார். அங்கிருந்து கடல்வழி விமானம் மூலமாக வன்னியின் இரணைமடுகுளத்துக்கு பாலசிங்கமும் அவரது மனைவி அடேல் அம்மையாரும் வருகை தந்தனர்.இரணைமடுகுளத்துக்கு நேரில் சென்று பாலசிங்கத்தை தளபதிகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வரவேற்றார் என்பது  வரலாறு. அவருடன் மனைவி மதிவதினி, அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலிகளின் குரல் வானொலி பொறுப்பாளர் ஜவான் உள்ளிட்டோர் பாலசிங்கத்தை வரவேற்றனர்.
பிரான்ஸில் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிற்கு மாணவர்கள் தொலைபேசி கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு நடைபெறும்போது மாணவர்கள் தொலைபேசி பாவிப்பதற்கு ஏற்கனவே தடை உள்ளது. ஆனாலும் தற்று போது பிரான்ஸ் கல்வி அமைச்சர் Jean Michel Blanquer அறிவித்துள்ள தடையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவர்கள் தொலைபேசி கொண்டுவருவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத் தடையானது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரானின் தேர்தல் கொள்கைகளில் ஒன்றாகும்.

இருப்பினும் இத் தடையை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனென்றால் வகுப்புக்கள் முடிந்து வெளியில் செல்லும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் தொடர்பில் இருக்க முடியாது என கூறியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி பிரான்ஸில் 80 சதவீத பதின்ம பருவத்தினர் ஸ்மாட் போன்களை வைத்துள்ளனர். தற்போது ஸ்மாட் போன் பயன்படுத்தும் ஆரம்பப்பள்ளி மாணவர்களது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
சமாதானத்தை நோக்கி நகரும் விதமாக, ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற உண்மையுடன் பாலத்தீனியர்கள் கட்டாயம் உடன்பட வேண்டும் என இஸ்ரேஸ் பிரதமர் கூறியுள்ளார்.
ஜெருசலேம் 3,000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்த மக்களுக்கும் தலைநகராக இருந்ததில்லை என இஸ்ரேஸ் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்த பிறகு முஸ்லிம்கள் மற்றும் அரபு உலகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் பெஞ்சமின் நெதன்யாகு இக்கருத்தைக் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகில் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.
ஜெருசலேமில், மத்திய பேருந்து நிலையத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு வீரரைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்திய ஒரு பாலத்தீனியர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் உடனான பேச்சுவார்த்தைக்கும் பிறகு பேசிய பெஞ்சமின் நெதன்யாகு,''ஜெருசலேமிற்கும் யூத மக்களுக்கு உள்ள ஆயிரமாயிரம் இணைப்புகளை மறுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அபத்தமானது'' என கூறினார்.
''இதைப்பற்றி மிகவும் நல்ல புத்தகமான பைபிளில் படிக்கலாம்'' என கூறினார்.
''எங்கள் புலம்பெயர்ந்த யூத சமூகத்தின் வரலாற்றின் மூலம் இதைப்பற்றி நீங்கள் அறியலாம். ஜெருசலேம் இல்லாமல் வேறு எங்கு இஸ்ரேலின் தலைநகர் இருக்கும்'' என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு.
''இந்த உண்மையுடன் விரைவில் பாலத்தீனியர்கள் உடன்பட்டால், விரைவாக நாம் அமைதியை நோக்கி நகரலாம்'' எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்,அமெரிக்க துணை அதிபரான மைக் பென்ஸ் உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது 'துரதிருஷ்டவசமானது' என மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எகிப்தின் மூத்த கிறித்துவ மற்றும் முஸ்லிம் மதகுருக்களும், மைக் பென்ஸ் உடனான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளனர்.
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்குப் பரவலான கண்டங்கள் எழுந்துள்ளன. ஜெருசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா காத்துவந்த நடுநிலை, டிரம்பின் நடவடிக்கையால் மாறியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலத்தீனியர்களுக்கும் ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த இடம். யூதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் புனித தளங்கள் இங்கு உள்ளன.
ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் எப்போதும் கருதுகிறது. ஆனால், 1967 போரின் போது கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக பாலத்தீனியர்கள் கூறுகின்றனர்.
"நான் இந்தியாவில் இருந்து வெளியேறி இஸ்ரேலில் குடியேற முடிவு செய்தபோது எனக்கு18 வயது. அது ஒரு எளிமையான முடிவு அல்ல" என்கிறார் தற்போது இஸ்ரேலில் வசிக்கும் மராத்தி மொழி பேசும் யூதரான ஷெர்லி பால்கர்.
"நான் பல பிரச்சனைகளை சந்தித்தேன். ஆனால் எப்படியோ நான் அந்த கஷ்டங்களை எல்லாம் கடந்து தற்போது இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறேன். இப்போது இது என்னுடைய நாடு. ஆனால், இந்தியாவுடனான எனது பாசத்தை இதனோடு ஒப்பிட முடியாது. "
மும்பைக்கு அருகே உள்ள தானேவின் ஸ்ரீராங் சொசைட்டியில் ஷெர்லி வாழ்ந்து வந்தார்.
20 வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் குடியேறினார். இப்போது இஸ்ரேலில் உள்ள நகரங்களில் ஒன்றான கெதராவில் அவர் வாழ்ந்து வருகிறார். அவர் கல்வித் துறையின் அலுவலக மேலாளராக பணிபுரிகிறார்.இஸ்ரேலில் குடியேறுவதற்கு முன்பு, நான் இங்கு சுற்றுப்பயணத்திற்காக வந்தேன். என்னுடைய பல உறவினர்கள் இங்கு வசித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது, இந்த நாட்டை வாய்ப்புகள் குவிந்துள்ள இடமாக பார்த்தேன். எனவே இங்கேயே குடியேற முடிவு செய்தேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.ஒரு நாட்டை சுற்றுலா பயணியாக பார்வையிடுவதற்கும், அந்நாட்டின் குடிமகனாக மாறுவதற்கும் அதிகளவிலான வித்தியாசம் உள்ளது. அதற்கான வேறுபாட்டை விரைவிலேயே உணர்ந்தார் ஷெர்லி.
"மிகப்பெரிய சவாலே பேசும் மொழிதான். நாங்கள் யூதர்களாக இருந்தாலும், மற்ற இந்தியர்களை போன்று மராத்தி, ஹிந்தி அல்லது ஆங்கிலம் போன்ற மொழிகளையே பேசுகிறோம். ஆனால் இங்கே இஸ்ரேலில், ஹீப்ரு கட்டாயமாகும். உங்களுக்கு ஹீப்ரு தெரியாவிட்டால் நீங்கள் முற்றிலும் முடங்கி விடுவீர்கள்" என்று ஷெர்லி கூறுகிறார்.
"எனவே, நான் அரசு நிதியில் செயல்படும் அடிப்படை ஹீப்ரு கற்றல் திட்டமொன்றில் சேர்ந்து கொண்டேன். அதன் பிறகு என் சொந்த பணத்தை செலவிட்டு, ஹீப்ரு மொழியை கற்றுக்கொண்டேன். ஒரு இஸ்ரேலிய குடிமகனாக ஆவதற்குரிய போதுமான தகுதியை பெற்றேன்" என்று தனது தொடக்ககால சிரமங்களை நினைவுக் கூறுகிறார்.
மொழி மட்டுமல்லாது, சவால்கள் அனைத்து முனைகளிலும் இருந்தன. உணவு, உடை, பழக்கவழக்கம் மற்றும் மரபுகள்... என நீங்கள் எந்தவொரு காரியத்தை குறிப்பிட்டாலும் அது சவாலான விடயமாகவே இருந்தது. ஆனால் பெனி இஸ்ரேலியர்களை (இந்திய யூதர்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் வார்த்தை) போலவே, அந்த சவால்களை சமாளிக்க கற்றுக்கொண்டார். ஆனால், இஸ்ரேலில் உள்ள யூதர்கள் பின்பற்றும் பாரம்பரியத்தை பழக்கப்படுத்தி கொள்வதே சிறந்த வழியாகும்.
"நாங்கள் இன்னும் எங்களது பாரம்பரியங்களை பராமரித்து வருகிறோம். பெனி இஸ்ரேலியர்களின் தனித்துவமான மரபுகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுகிறோம் " என்று கூறி பெருமிதமடைகிறார் ஷெர்லி."கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் யூதர்கள் தரம் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். பல நாடுகளில் அவர்கள் கொடுமைகளை எதிர்கொண்டனர். இதன் காரணமாக பெரும்பாலான இஸ்ரேலியர்கள் தங்களது நாடுகளை மறக்க விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வந்த நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருப்பதை விரும்பவில்லை."
"ஆனால், பெனி இஸ்ரேலியர்களான நாங்கள் அதில் மாறுபட்டவர்கள். இந்தியா எங்களை மரியாதையுடனும், அன்புடனும் உபசரித்தது. நாங்களும் அதே உணர்வை திரும்ப அளிக்கிறோம்" என்று தான் இந்தியா மீது கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை ஷெர்லி வெளிப்படுத்துகிறார்.ஷெர்லி பால்கர் மட்டும்தான் இஸ்ரேலில் குடியேறிய மராத்தி மொழி பேசும் பெனி இஸ்ரேலிய யூதர் அல்ல. மராத்தி கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார் பேராசிரியர் விஜய் தபாஸ். இவரது பயணமே 1948ம் ஆண்டு உருவான இந்த யூத தேசத்திற்கு மராத்திய யூதர்கள் தங்களது "நம்பிக்கையளிக்கும் நாட்டிற்கு" புலம்பெயரத் தொடங்கிய வரலாறு குறித்து தெரிய வருகிறது. பீர்ஷெவா, அஷ்டோட் அஷ்கலோன், லோட், ராம்லே, எருஹம், டிமோனோ, ஹைபா போன்ற இஸ்ரேலிய நகரங்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பெனி இஸ்ரேலியர்கள் குடியேறியுள்ளனர்.ஆனால், இது பெனி இஸ்ரேலியர்களின் முதல் குடிபெயர்வு இல்லை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் குடிபெயர்ந்துள்ளனர். அந்நேரத்தில் அது தலைகீழ் இடம்பெயர்வாக இருந்தது. அதாவது, இஸ்ரேலிலிருந்து மகாராஷ்டிராவுக்கு!
இன்றைய மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்திற்கு அருகே இந்தியாவின் மேற்கு கரையோரத்தில் இஸ்ரேலில் துன்புறுத்தலுக்குள்ளான யூத குடும்பங்களைச் சுமந்து வந்த கப்பல் உடைந்தது. அவ்விபத்தில் 7 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டனர். அவர்கள் நவ்கோனை என்ற கிராமத்தின் கரையை வந்தடைந்தார்கள்.
அவர்கள் தங்களது அன்புக்குரியவர்களை அதே கிராமத்தில் அடக்கம் செய்தார்கள். இதுதான் இந்தியாவில் யூதர்களின் முதல் மயான இடமாகும்.
ராய்காட் மாவட்டத்திலுள்ள உள்ளூர் மக்களின் ஆர்வத்தை உயர்த்துவதற்கு இவர்களின் மொழியும், அசாதாரண பழக்கங்களும் போதுமானதாக இருந்தது.இவர்கள் அவ்விடத்தை வந்தடைந்தபோது "நாங்கள் பெனி இஸ்ரேலியர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
"ஹீப்ரு மொழியில் பெனி என்றால் மகன் என்று அர்த்தம். எனவே, இந்த சமூகம் தங்களை தாங்களே 'இஸ்ரேலின் மகன்கள்' என்று அழைத்துக் கொண்டது" என்கிறார் ருயா கல்லூரியின் வரலாறுத்துறை பேராசிரியரான மொஹசினா முகடம்.
கொங்கன் பகுதியில், பெனி இஸ்ரேலியர்கள் ஷான்வர் டெலிஸ் என்று அழைக்கப்படுகின்றனர். ஆங்கிலத்தில் 'ஷானிவார்' என்றால் 'சனிக்கிழமை' என்றும் தெலி என்பது எண்ணெய் பிரித்தெடுக்கும் பணியை மேற்கொள்பவர்களையும் குறிக்கும்.
மகாராஷ்டிராவின் யூத சமூகத்தை சேர்ந்தவர்கள் (பெனி இஸ்ரேல்) ஷானிவர் டெலிஸ் என்று அறியப்படுகின்றனர். யூதர்களின் வழக்கத்தின்படி வாரத்தின் ஏழாவது நாளாக சனிக்கிழமையை கருதி அதை ஷப்பாட் என்று அழைப்பதுடன் அன்று பணிபுரிவதை தவிர்க்கின்றனர்.பெனி இஸ்ரேலியர்கள், இந்திய மண்ணில் தங்கள் கால்களை வைக்கும் முன் அவர்கள் எதிர்கொண்ட நிலைமையைக் கருத்திற்கொள்ளும்போது, அவர்களின் புனித நூல்களால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சர்யம் அளிப்பதாக இல்லை. எனவே அவர்கள் நீண்ட காலமாக மத நூல்களுடன் எவ்வித தொடர்பையும் கொள்ளவில்லை. யூத பாரம்பரியங்களை தங்களது மனதில் நிலை நிறுத்தியவர்கள் அதை பின்தொடர்ந்தார்கள்.
பிரிட்டிஷ் தலைமையிலான ஆட்சிக் காலத்தின்போது, கொங்கன் பகுதியிலிருந்து பல பெனி இஸ்ரேலியர்கள் மும்பைக்கு வந்தனர். 1948ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது, உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த யூதர்கள் தங்களின் 'நம்பிக்கையளிக்கும் தேசத்திற்கு' திரும்பி வரும்படி முறையீடு செய்யப்பட்டது. இந்த அழைப்பை ஏற்ற பல பெனி இஸ்ரேலியர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால், இஸ்ரேலில் குடியேறிய பின்னரும் கூட, அவர்கள் தங்களின் மகாராஷ்டிர கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.
இரண்டு கலாச்சாரங்களின் கலப்பு
"முந்தைய பெனி இஸ்ரேலியர்கள் முற்றிலும் வேறுபட்ட மக்களாக காணப்படவில்லை. ஆனால், இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷ்காரர்கள் இந்த மக்களின் சில அசாதாரண பாரம்பரியங்களை உற்றுநோக்கினர். யூதர்கள் மீன்களை செதில்களோடு மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்யவில்லை. அவர்களின் சமையல் முறை வேறுபட்டது. விலங்குகளை கொல்லும் முறை கூட தனித்துவமானது. இவற்றையெல்லாம் கவனித்த பிரிட்டிஷ்காரர்கள் இம்மக்கள் யூதர்கள் என்று உணர்ந்து கொண்டனர்" என்கிறார் மொஹசினா முகடம்.
"பிரிட்டிஷ் சகாப்தத்தில் பெனி இஸ்ரேலியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அவர்கள் இராணுவம், ரயில்வே, மருத்துவ சேவைகள் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றினர்" என்று புனேவில் உள்ள பெனி இஸ்ரேலியரான சாமுவேல் ரோஹெர்கார் கூறுகிறார்.
"அவர்கள் மும்பைக்கு வந்தபோது, இன்றைய மஸ்ஜித் நிலையத்திற்கு அருகே ஒரு யூத வழிபாட்டு தலத்தை கட்டினார்கள்" என்கிறார் சாமுவேல்.
"யூத வழிபாட்டு தலத்தில் எந்த சிலையையும் உங்களால் காண முடியாது. எங்கள் புனித நூல்களை ஒரு அலமாரியில் வைத்திருக்கிறோம். அந்த அலமாரியானது மேற்குப்புறத்தில் வைக்கப்படும். ஹீப்ருவில் இந்த புத்தகங்களை 'செபர் டோரா' என்று அழைத்தார்கள். ஒரு மாதத்திற்கு ஒருமுறை, சனிக்கிழமையன்று புனித நூல்களை அவர்கள் ஓதினார்கள்" என்று சாமுவேல் கூறுகிறார்.
மாலிடாபெனி இஸ்ரேலியர்கள் பல இந்து மரபுகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றினர். உதாரணமாக, திருமண சடங்குகள் அல்லது வளையல்கள் போன்றவை இந்து மரபுகளிலிருந்து எடுக்கப்பட்டன.
யூதர்களின் திருமண விழாக்களில் வழங்கப்படும் திராட்சை மதுவுக்கு சிறப்பிடம் உண்டு. அவர்கள் இந்த மதுவை கிதுஷ் என்று அழைக்கிறார்கள். யூதர்களின் கொண்டாட்டங்களில் கிதுஷுக்கு சிறப்பிடம் இருக்கிறது. திருமண விழாவில் கிதுஷ் முக்கிய பங்கு வகிக்கிறது.
"பெனி இஸ்ரேலியர்களது சிறப்பு பண்டிகை உணவாக 'மாலிடா' என்பது உள்ளது. இது மராத்திய இந்து மதத்தின் பாரம்பரியமான 'சத்யநாராயண்' போன்ற செயற்பாட்டை கொண்டது. இது ஒவ்வொரு சுப நிகழ்ச்சிக்கும் செய்யப்படுகிறது."பெனி இஸ்ரேலியர்களுக்கும் மற்ற யூதர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஷெர்லி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். "மற்ற நாடுகளில் யூதர்கள் அட்டூழியங்களுக்கு உள்ளானார்கள். எனவே, அவர்கள் உள்ளூர் மக்களுடன் இணையவில்லை. இந்தியாவை பொறுத்தவரை அது வேறுபட்ட பின்புலத்தை கொண்டது. இந்தியர்கள் எங்களுக்கு மரியாதையுடனும் மற்றும் கண்ணியத்துடன் நடத்தினார்கள். எனவே, நாங்கள் மற்ற இந்திய சமூகங்களோடு இணைந்தோம். அதன் காரணமாக மற்ற சமூகத்தினரின் மரபு சார்ந்த பழக்கவழக்கங்கள் எங்களுடையதானது" என்று ஷெர்லி பால்கர் கூறுகிறார்.
மராத்தி மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள்
முதன் முதலில் இஸ்ரேலுக்கு சென்ற பெனி இஸ்ரேலியர்கள் மராத்தி மொழியை நன்றாக பேசக்கூடியவர்கள். ஆனால், அவர்களது புதிய தலைமுறை மராத்தி மொழியை நன்றாக பேசுவதில்லை. எனவே, பெனி இஸ்ரேலிய சமூகத்தினர் மராத்தி கற்றல் படிப்புகளை துவங்கினர்.
இதன் ஒரு பகுதியாக, பேராசிரியர் விஜய் தபாஸ் மும்பையில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றார். "பெனி இஸ்ரேலியர்களுக்கு மராத்தி மீது பெரும் மரியாதை உண்டு. அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் உள்ளவர்கள். அவர்கள் இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பல யூத வழிபாட்டுத் தலங்களுக்கு இம்மக்களால் நிதியளிக்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.பல ஆண்டுகளாக இஸ்ரேலில் தங்கிய பின்னரும் கூட, பெனி இஸ்ரேலியர்களுக்கு இந்தியா குறித்து தங்கள் மனதில் சிறப்பிடம் உண்டு. "எங்கள் இதயத்தின் தனியிடத்தில் இந்தியா உள்ளது. நாங்கள் இன்னும் அங்கே போகிறோம். சமீப காலம் முன்னர்வரை என் பெற்றோர் தானேயில் இருந்தார்கள். என் சகோதரி மும்பையில் இருக்கிறார். நான் மும்பைக்கு செல்லும் போதெல்லாம், 'சாப்பிட வேண்டிய' உணவு வகைகள் குறித்த பட்டியலை தயார் செய்கிறேன். வாடா-பாவ் மற்றும் சாட் பொருட்களை நான் விரும்புகிறேன்" என்று ஷெர்லி கூறுகிறார்.
அவளுடைய பெற்றோர் சமீபத்தில் இஸ்ரேலுக்கு சென்றனர். ஆனால், அங்குள்ள மாற்றத்தை சமாளிக்கப்பதற்கு அவர்களுக்கு கடினமாக உள்ளது.
அவருடைய மகள் இஸ்ரேலில் பிறந்தாள். அவரால் மராத்தி மொழியை பேச முடியும். ஆனால், இனி எப்போதுமே இந்தியாவில் இருப்பதற்கு அவர் விரும்பவில்லை.
டிரம்ப்பின் அறிவிப்பு குறித்து
"ஜெருசலேம் பற்றிய அமெரிக்காவின் அறிவிப்புக்குப் பிறகு இஸ்ரேலில் உள்ள மராத்திய யூதர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முன்னரும், இப்போதும் ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகரம் ஆகும். ஆனால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விடயங்கள் விரைவாக மாற்றப் போகின்றன. ஜெருசலேம் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொள்ள போகிறது, அதற்காக நான் கவலைப்படுகிறேன்" என்று ஷெர்லி கூறுகிறார்.
"அதிபர் டிரம்பின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஜெருசலேமில் நிலைமை எப்போதும் பதட்டமாக இருக்கிறது. மேலும், சமீபத்திய நிகழ்வுகள் வன்முறையை தூண்டலாம். ஆனால் நாங்களும், எங்களது இராணுவமும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இந்தியா அமெரிக்காவைப் பின்பற்றி ஜெருசலேமில் தனது தூதரகத்தை திறக்க வேண்டும்" என்கிறார் ஜெருசலேம் நகரத்தை சேர்ந்த மராத்தி யூதரான நோவா மசில்.
சற்று முன்னர் அமெரிக்க நியூயோர்க நகரில் உள்ள , அண்டகிரவுன் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. பிளாஸ்டிக் பைப்பில் செய்யப்பட்ட குண்டு வெடித்ததில் பலர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. நியூயோர்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுரங்கத்திற்கு அருகே உள்ள மிக முக்கியமான தொடரூந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கே தினம் தோறும் சுமார் 2 லட்சம் பயணிகள் சென்றுவருவது வழக்கம் என்கிறார்கள்.

இக் குண்டு வெடித்து சிறிது நேரத்தில், மேலும் ஒரு சிறிய குண்டு வயர்களோடு சென்ற ஒரு பங்களாதேஷ் நபர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன் நபரே முதல் குண்டை வெடிக்க வைத்துவிட்டு. மற்றுமொரு குண்டை வேறு ஒரு இடத்தில் வெடிக்கவைக்க எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்கிறார்கள் பொலிசார்.

அமெரிக்காவின் மிக முக்கிய பாதுகாப்பான நகரங்களில் நியூயோர்க்கும் ஒன்றாகும். அங்கே குண்டு வெடித்துள்ளமை பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
பாலி: ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பிற்கு பாலஸ்தீனம், லெபனான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அரபு நாடுகளும் அவருக்கு எதிராக நிறைய கருத்துக்களை தெரிவித்து இருந்தது.
தற்போது உலகின் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் பெரிய மக்கள் போராட்டமே வெடித்து இருக்கிறது.
தலைநகர்
தலைநகர் பிரச்சனை
டெல் அவிவ் என்ற சிறிய பகுதியே இவ்வளவு நாட்களாக இஸ்ரேலில் தலைநகராக இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். இந்த அறிவிப்பு இஸ்ரேலுக்கு அரசியல் ரீதியாக எந்த அதிகாரத்தையும் வழங்காது எனினும் புவியியல் ரீதியாக நிறைய அதிகாரங்களை வழங்கும். இது தற்போது பெரிய பிரச்னையை உருவாக்கி இருக்கிறது.
போராட்டம் வெடித்தது
போராட்டம்
இந்த நிலையில் அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஏற்றுக்கொள்ள முடியாது என உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியா மக்கள் போராட்டம் செய்ய ஆர்மபித்தனர். அந்நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னர் இன்று காலையில் இருந்து பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

எங்கள் இதயம்
எங்களுடைய இதயம்
இந்த நிலையில் இந்த அறிவிப்பால் இஸ்ரேலில் இருக்கும் முஸ்லிம்களும், ஜெருசலேமை நம்பி இருக்கும் பாலஸ்தீனமும் அதிகம் கஷ்டப்படுவார்கள் என்று இந்தோனேசியா மக்கள் பேசியுள்ளனர். மேலும் 'பாலஸ்தீனம் எங்கள் இதயம்' என்ற பதாகைகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர். இந்த போராட்டம் பெரிய அளவில் நடந்து வருகிறது.
அமைதி போகிறது
அமைதிக்கு கேடு
மேலும் அந்த நாட்டு மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக மிகவும் கோபமாக கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி ''அமெரிக்கா இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்து உலகத்தின் அமைதியை போக்குகிறது. மக்களை நிம்மதியாக இருக்கவிட கூடாது என்று டிரம்ப் வேலை செய்கிறார். இதுகுறித்து அனைத்து நாடுகளும் பேச வேண்டும். முக்கியமாக ஐநா சபையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

RSS இயக்கத்தின்   அட்டுழியங்கள், வன்முறைகள் ,மதவெறி இந்திய அரசே திருந்து மனம்மாறு சேனைகளின் கத்தரின் கோபம் உன்மீது 

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது 
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது 
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது 
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 

2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே மா ஜோதி மானிடரானார் உன்னை மீட்க தம்மை பலியாக தந்த அவர் அன்பிற்கு இணையில்லையே-2 நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது 
மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது 
மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது 
நம் மேசியா மண்ணில் உதித்தார்-2

போதை வஸ்து  கடத்தல் தாதா மக்களை மிரட்டி பணம் பறித்தல்

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம், சரனாக்லேக் என்ற கிராமத்தில் நடைபெற்ற உலக பனி ஷூ விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் தன்வீர் உசேன் கடந்த பிப்ரவரி மாதம் சென்றார்.

இந்த நிலையில் அங்கு அவர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு 12 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர் மார்ச் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது எசெக்ஸ் கவுண்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோர்ட்டு விசாரணையின்போது அவர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி அந்த கோர்ட்டின் அரசு தரப்பு துணை வக்கீல் கிறிஸ்டி ஸ்பிராக் விடுத்துள்ள அறிக்கையில், “சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான குற்றச்சாட்டை தன்வீர் உசேன் ஒப்புக்கொண்டு விட்டார். அதை பிரமாண வாக்குமூலமாக அளித்துள்ளார்” என கூறினார். அவரது விசா கடந்த ஆகஸ்டு மாதமே முடிந்துவிட்டது.

அவரது தாயார் உடல் நலக்குறைவால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அவரது சகோதரியின் திருமணமும் ஒத்தி போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அவர் கோர்ட்டில் செய்துகொண்ட குற்ற உடன்படிக்கையின்படி தண்டிக்கப்படாமல் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன. எனினும் அதற்கு சிறிது காலம் ஆகும் என தெரியவந்துள்ளது.
காசா சிட்டி: ஜெருசலம் நகர விவகாரத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் பலியானார்கள். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காசா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கி வந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில், காசா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் மூன்று ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்தினர்.

அவற்றில் ஒரு ராக்கெட் இஸ்ரேல் நாட்டின் தென்நகரமான ஸ்டெராட் மீது விழுந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் நேற்று காலை காசா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தின. காசா நகரின் மத்திய பகுதியில் உள்ள நுசெய்ரட் நகரின் மீது தாழ்வாக பறந்துசென்ற போர் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் இரண்டு ஆயுத தொழிற்சாலைகள் மற்றும் வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கு, ராணுவ முகாம் ஆகியவை நாசம் அடைந்ததாகவும், ஹமாஸ் போராளிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை மொத்தம் 4 ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பாலஸ்தீனம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

1967ம் ஆண்டு வரை ஜோர்டான் வசமிருந்த  கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் 1980ல்  இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலம் நகரில் யூத,  கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும்  இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறி அமைத்த  வசிப்பிடங்களில் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த தூதர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபரின் இந்த முடிவு ஐ.நா.பாதுகாப்பு சபை தீர்மானத்துக்கு பொருத்தமற்றது. மத்திய கிழக்கு பிராந்திய அமைதிக்கு இதனால் நன்மை ஏற்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுகள் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டைத் தௌிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் – “ சுய நலம் மேலோங்கும் போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்தப் பிளவுகளைச் சரி செய்யவும் உதவும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுகள் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டைத் தௌிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் – “ சுய நலம் மேலோங்கும் போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்தப் பிளவுகளைச் சரி செய்யவும் உதவும்.
1949ல் கொள்கை நிமித்தம் தந்தை செல்வா தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்தார். யுத்தம் முடிவடையும் தறுவாயில் சுயநலங் காரணமாக பிரபாகரனை விட்டு சிலர் வெளியேறினர். ஆகவே, பிளவுகள் கொள்கை நிமித்தமும் ஏற்படக் கூடும், சுயநல காரணங்களுக்காகவும் ஏற்படலாம்.

இன்றைய பிளவு நிலை எவ்வாறு ஏற்பட்டதென்பதை நீங்களே ஆய்தறிந்து கொள்ளுங்கள். அது அரசியல் அவதானியரின் வேலை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது மக்களின் நெடுங்கால பாதுகாப்பிற்கும் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாற்றி, யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என, அவர் கூறியுள்ளார்.

வெரைட்டி. Dosa

முற்பகல் 3:27 0 Comments
பல சுவை பல்வகை தோசை சாப்பிடுங்கள் மகிழ்த்திடுங்கள் எங்களிற்கு உங்கள் ஆதரவு தாருங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்  
தமிழ் மக்களுக்கிடையே நேர் மையான, விட்டுக்கொடுப்பற்ற, கொள்கையிலிருந்து விலகாத தலைமை உருவாவதை இலங்கை அரசும் இந்தியாவும் மேற்குலக மும் விரும்பவில்லை.

அதனால் தான் தமிழ் மக்களுக்கு விரோதமான கட்சிகளை பலப் படுத்துவதாக சாடியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலை வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உள்@ராட்சி தேர்தலை எதிர் கொள்ளும் தமது கூட்டணி
யில் 80 வீதத்துக்கும் அதிகமான வேட்பாளர் கள் பொது அமைப்புக்களை சார்ந்தோரே எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் பிற்பகல் இரண்டு மணியளவில் நடைபெற்ற பத்திரி கையாளர் சந்திப்பின் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஈ.பி.ஆர். எல்.எவ் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இடையே உள்@ராட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஒரு புரிந்து ணர்வு கடந்த நவம்பர் மாதமே எட்டப்பட்டிரு ந்தது. இந்த தேர்தல் வெறுமனே ஒரு அபி விருத்தியை பிரதானமாக கொண்டிராமல், புதிதாக கொண்டுவரப்படவுள்ள ஒற்றையா ட்சி அரசியலமைப்பிற்கு மக்களிடையே ஆத ரவு உள்ளதா? மக்கள் யாருடைய பக்கம் உள்ளார்கள் என்பதை நாடி பிடிக்கும் தேர்த லாகவே இது உள்ளது.
அதன் அடிப்படையிலேயே இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற இணக்கப் பாட்டை எட்டியிருந்தோம். இதேபோன்று தமிழ் மக்கள் பேரவையின் மத்தியஸ்தத்தில் இரு கட்சிகளுமே இணைந்து தேர்தலை எதிர்கொள்ளுவது என தீர்மானிக்கப்பட்டிரு ந்தது. இந்த சந்திப்பு நவம்பர் 12ஆம் திகதி நடைபெற்றிருந்தது. எனினும் கடந்த 27 ஆம் திகதி முதல் ஈ.பி.ஆர்.எல்.எவ் எம்மு டன் தொடர்பு கொள்ளவில்லை. சுரேஷ் பிரே மச்சந்திரன் டில்லி சென்று வந்த பின்னர் உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடு தலை கூட்டணியோடு சேர்ந்து தான் தேர் தலை எதிர்கொள்ள வேண்டும் என எம்மி டம் கூறினார்.எனினும் அதற்கு நாம் மறுப்பு தெரி வித்துவிட்டோம். பேரவையோடு மற்றும் எங்களோடு எட்டப்பட்ட முடிவுக்கு மாறாக இது அமைந்திருந்தது. எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவறான நிலைப்பாடு களை மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, தமிழர் விடுதலை கூட்டணியின் பிழையான நிலைப்பாடுகளையும் மக்களுக்கு தெரியப் படுத்துவோம் என கூறியிருந்தோம். எனி னும் தனது சுய விருப்பின் அடிப்படையில் உதயசூரியனில் போட்டியிடவில்லை என கூறிய சுரேஷ், கிழக்கு மாகாண உறுப்பின ர்களை அழுத்தத்தினால் தான் உதயசூரிய னின் கீழ் போட்டியிட முடிவு செய்ததாகவும் எம்மிடம் கூறியிருந்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலை மைகள் தேர்தலுக்காக என்றாலும் சமஷ்டி, வடகிழக்கு இணைப்பு என பேசி வருகின்ற னர். ஆனால் தமிழர் விடுதலை கூட்டணி யின் தலைவர் ஆனந்தசங்கரி சமஷ்டியை யும், வடகிழக்கு இணைப்பையும் ஏற்க வில்லை. மாறாக 13ஆம் திருத்த சட்டத்தையே அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட மோசமான கொள்கையை கொண்டுள்ள தமிழர் விடுதலை கூட்டணி யுடன் எவ்வாறு இணைந்து தேர்தலை எதிர்கொள்ளுவது? அதேபோன்று இன் னொரு கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டி யிடுவதும் தமிழரசு கட்சியின் சர்வாதிகார த்தையே அங்கும் தோற்றுவிக்கும்.

தமிழர் தரப்பில் நியாயமான, கொள்கை உறுதியுடைய தலைமை உருவாவதை இந்தியாவும், மேற்குலகும், இலங்கை அர சும் விரும்பவில்லை. அதனால் தான் சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏமாற்றி தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்றுள்ளனர். எனி னும் சுரேஷ் மீது எமக்கு மதிப்பு உண்டு என் பதால் தான் அவருடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தோம். எனினும் அவர் எம்மை இறுதியில் ஏமாற்றி யுள்ளார்.
மேலும் எமது தமிழ்த்தேசிய பேரவை சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாள ர்களில் 80 வீதமானோர் பொது அமைப்புக் களை சார்ந்தோரே, எம்மோடு சேர்ந்து செய ற்பட விரும்புவர்கள் இணைந்து கொள்ள முடி யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி,

வலம்புரி

தமிழனாக வாழும் வெள்ளைக்காரன்

ஆர்கே..நகரில் பண பட்டுவாடா நேரடி காட்சிகள்

ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகளில் உள்ள ஒலிவாங்கிகளான மைக்ரோபோன்கள் நமது உரையாடல்களை நமக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்டு அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு சரியான விளம்பரங்களை வழங்குகின்றன என்கிற குற்றச்சாட்டை ஃபேஸ்புக் போன்ற பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.
ஃபேஸ்புக்கின் விளம்பரங்கள் பிரிவின் துணைத் தலைவரான ராப் கோல்ட்மேன், ஃபேஸ்புக் இதுபோன்ற வழிமுறைகளை மேற்கொண்டதே இல்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும் ஆன்லைன் விளம்பரங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், இவ்வாறு நடப்பது முற்றிலும் தற்செயலானது என்பது ஒரு வலுவான வாதமாக உள்ளது. இதற்கு முன்னரே இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றாலும் தற்போதுதான் அதைப் பற்றி பேசத் தொடங்கியிருப்பதால் அவ்வாறு நினைக்க தோன்றலாம் என்றும் கூறப்படுகிறது.இதுவரை உங்கள் திறன்பேசிகளில் உள்ள ஒலிவாங்கிகள் நாம் பேசுவதை மற்றவருக்கு கேட்க செய்வதற்கும், ஒலியை செய்வதற்கு மட்டுமே பயன்படுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், இங்கு சிலர் தங்களின் திறன்பேசிகள் மற்றவர்களுடனான உரையாடல்களை ஒட்டுக் கேட்டு அதன் காரணமாக தொடர்புடைய விளம்பரங்களை பெற்றதாக தங்களின் அனுபவங்களை கூறுகிறார்கள்நிச்சயதார்த்தம் பற்றி அறிவிப்பதற்கு முன்னரே திருமணம் சார்ந்த விளம்பரங்களை பார்த்தோம் "நானும் என்னுடைய வருங்கால மனைவியும் எவருக்கும் கூறாமல் நடத்திய நிச்சயதார்த்தத்தை பற்றி மற்றவர்க்கு தெரிவிப்பதற்கு முன்னரே திருமணம் சார்ந்த விளம்பரங்களை பார்த்தோம்," என்கிறார் அமெரிக்காவின் ஸ்ப்ரிங்பீல்டு பகுதியை சேர்ந்த நாட்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நாங்கள் மோதிரத்தை வாங்கினோம் மற்றும் அது தொடர்புடைய எதையும் இணையத்தில் பார்க்கவே இல்லை.
"இரண்டு வாரங்களுக்கு முன்னர் நானும் என்னுடைய வருங்கால மனைவியும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அதுவரை நாங்கள் வாங்காத, பேசாத மதுபானம் ஒன்றை அருந்தினோம். அதற்கு அடுத்த நாள் காலையிலேயே அது என்னுடைய ஃபேஸ்புக் கணக்கின் முகப்பில் முதல் விளம்பரமாக வந்தது.".நகைச்சுவையாக பேசிய வார்த்தை விளம்பரமாக வந்தது"சென்ற வாரம்தான் நான் என்னுடைய வேலையை விட்டேன். நண்பர் ஒருவருடன் அடுத்து எந்த திசையை நோக்கி செல்லவிருக்கிறேன் என்பது குறித்து பேசிக்கொண்டிருந்தேன்," என்கிறார் லின்கனை சேர்ந்த லிண்ட்சே என்பவர்.
"எனக்கு காபி மிகவும் பிடிக்கும் என்பதால், ஒருவேளை நான் ஸ்டார்பக்ஸ்க்கு சென்றால் நிறைய காபி குடிக்க முடியுமென்று கூறினேன்."
"அதற்கடுத்த முறை நான் என் திறன்பேசியில் ஃபேஸ்புக்கை திறந்தபோது, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் புதிய பணியாட்களை தேர்ந்தெடுப்பதற்கான லண்டனில் முகாமொன்றை நடத்துவதாக விளம்பரம் வந்தது" என்று கூறுகிறார்.
திடீரென வந்த வீட்டு பாதுகாப்பு சாதனங்கள் பற்றிய விளம்பரம்
"தனது வீட்டில் கண்காணிப்பு காமெராவை அமைக்கும் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்" என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெலிசா கூறுகிறார்.வீட்டு பாதுகாப்பு சாதனங்கள் தொடர்புடைய எவற்றையும் பார்க்க நான் இணையத்தை நாடியதே கிடையாது. ஆனால், வெறும் அரை மணி நேரத்திற்கும் குறைவாக கண்காணிப்பு காமெராவை நிறுவுவது பற்றி பேசியவுடன் , வீட்டு பாதுகாப்பு சாதனங்கள் பற்றிய விளம்பரம் என்னுடைய ஃபேஸ்புக்கில் வந்தது."
"அந்த உரையாடலின் முழு நேரமும் திறன்பேசி என் பாக்கெட்டில்தான் இருந்தது."நண்பர் பேசியதற்கு ஏற்ற விளம்பரம் எனக்கு வந்ததுஒருமுறை என்னுடைய நண்பரொருவர் அவருக்கு லேசர் கண் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாக கூறிக்கொண்டிருந்தார்," என்கிறார் ஓரிகனை சேர்ந்த ஆஸ்டின்.
"அந்த உரையாடலுக்கு பின்பு நான் உடனடியாக ஃபேஸ்புக்கை திறந்தபோது லேசர் கண் சிகிச்சை பற்றிய விளம்பரம் வந்தது."


"தெளிவான கண்பார்வை திறனுள்ள நான் இதுவரை லேசர் அறுவை சிகிச்சையை பற்றி தேடல் மேற்கொண்டதே இல்லை."மேற்காணும் நிகழ்வுகளெல்லாம் ஆங்கிலத்தில் பேசுபவர்களின் உரையாடல்கள் வாயிலாக தரவுகளை திரட்டி அதன் மூலம் தகுந்த விளம்பரங்கள் வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள்.
தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் ஆழக் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் வெகுவேகமாக முன்னேறி வரும் நிலையில், தமிழ் மொழியில் நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள் கூட ஒட்டுக் கேட்கப்படலாம்.
தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளதாக கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கே இதுபோன்ற விடயங்கள் நடப்பது அசாதாரண ஒன்றாக இருக்கும் போது, முதல் முறை திறன்பேசி பயன்பாட்டாளர்கள் அதிகரித்து வரும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மின்னணு தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சர்வதேச எதிர்ப்பையும் மீறி, ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு "நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற" செயல் என்று தெரிவித்துள்ளது.
ஆனால், இது ஒரு "வரலாற்று சிறப்புமிக்க நாள்" என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.
'இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்': டிரம்ப்பின் அறிவிப்பில் என்ன முக்கியத்துவம்?
டிரம்பின் இந்த அறிவிப்பு, பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த அமெரிக்க கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது. ஜெருசலேம் குறித்த சர்ச்சை இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்கள் இடையே பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
அமெரிக்காவின் இந்த முடிவையடுத்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் 15 நாடுகளில், 8 நாடுகள் இந்த வார இறுதியில் அவசர கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளன.
என்ன முக்கியத்துவம்?
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக வெளியான அமெரிக்காவின் அறிவிப்பு, ஜெருசலேம் தொடர்பான நிலைப்பாட்டின் மீது சர்வதேச சமூகத்தின் பார்வைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்துள்ளது..
பாலத்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் தங்களின் எதிர்கால அரசின் தலைநகரமாகக் கூறுகின்றனர். மேலும், 1993 ஆண்டு நடந்த இஸ்ரேல்-பாலத்தீனிய சமாதான உடன்படிக்கைகளின்படி, அதன் இறுதி நிலை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் கடைசி கட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும்.
ஜெருசலேம் மீது இஸ்ரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை.
இதுவரை அனைத்து நாடுகளும் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன.
யூத, இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதநம்பிக்கைகளுக்கும் நெருக்கமான புனித தளங்கள் ஜெருசலேம் நகரில் அமைந்துள்ளது.
பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேத்தை , 1967 ஆம் ஆண்டில் நடந்த 6 நாள் போர் முடிந்த பின்னர் இஸ்ரேல் இணைத்தது. ஆனால், இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை.
டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
'இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்' : டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
'வரலாற்று சிறப்புமிக்க நாள்'
டிரம்ப்பின் அ றிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
"மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஜெருசலேம் எங்கள் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் பிரார்த்தனைகளின் மையமாக இருந்தது," என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.இதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாஸ் தனது முன் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி உரையில் ஜெருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து மத்திய கிழக்கில் புதிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.
“இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன்” என, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து அறிவித்தார்.
இவ்வறிவிப்பின் மூலம் ஜெருசலேமை உரிமை கோரிய இஸ்ரேல்-பலஸ்தீனத்தின் ஏழு தசாப்த போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அறிவிப்புடன் நின்றுவிடாத ட்ரம்ப், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க சார்பு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அதன் தலைவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் புதிய வன்முறைகள் வெடிக்கலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்

அரசியல் விபச்சாரி வைகோ

முற்பகல் 5:47 0 Comments

புலிகள் தோற்று போனது வைகோ திருமா போன்றவர்களினால் இவர்கள் செய்யும் துரோகம் என்ன ?
வைகோ, திருமாவளவன் திமுகவோடு கூட்டு வச்சதுக்கு இருவரையும் வறுத்தெடுக்கும் ஈழத்தமிழர்
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967 மத்திய கிழக்கு போரின் போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.

இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. சர்வதேச சட்ட திட்டங்களின் படி இது ஆக்கிரமிப்பு நகராகவே கருதப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் பேசியிருந்தார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க தயாராக அமெரிக்கா இருப்பதாக செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாதி, இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை உண்டாக்கும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். பிரான்சை பொருத்தவரை இவ்விவகாரத்தில் எந்த முடிவும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பேச்சுவார்த்தைக்கு உள்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யானது இடம்பெறவுள்ள உள்@ ராட்சி தேர்தலில் பொது அமைப் புக்களுடன் இணைந்து வடக்கு கிழக்கு முழுவதும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே போட்டி யிடப்போவதாக அறிவித்துள்ளது.

அத்துடன் தம்மோடு இணைந்து செயற்படுபவர்களையும் இணைத் துக் கொண்டு செயற்படவுள்ளதாக வும் அக் கட்சியானது அறிவித்துள் ளது.
எதிர்வரும் உள்@ராட்சி தேர் தலில் பொது எதிரணியொன்று களமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின ரும் தமிழ் மக்கள்பேரவையுடைய ஆதரவுடன் இணைந்து செயற் பட போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இப் பொது எதி ரணியின் சின்னமாக தமிழர் விடுதலை கூட் டணியின் உதயசூரியன் சின்னம் பிரஸ்தாபி க்கப்பட்ட நிலையில் அச் சின்னத்தில் இணை ந்து போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி க்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியி னருக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார். இது தொட ர்பாக மேலும் தெரிவித்திருப்பதாவது,
இவ் உள்@ராட்சி தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அகில இல ங்கை தமிழ் காங்கிரஸின் சின்னமான சைக் கிள் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது. இதில் வடக்கு கிழக்கை சேர்ந்த பொது அமை ப்புக்களுடன் இணைந்தே போட்டியிடவுள் ளோம். எமது கொள்கையில் இருந்து நாம் விடுபட போவதில்லை. எனவே தான் சைக் கிள் சின்னத்திலேயே போட்டியிடப்போகின்றோம்.

மேலும் எமது கொள்கையை ஏற்று எமது கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எவர் தயாராக இருந்தாலும் அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் செயற்பட தயா ராகவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
புலிகள் தோற்று போனது வைகோ திருமா போன்றவர்களினால் இவர்கள் செய்யும் துரோகம் என்ன ?
வைகோ, திருமாவளவன் திமுகவோடு கூட்டு வச்சதுக்கு இருவரையும் வறுத்தெடுக்கும் ஈழத்தமிழர்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் துப்பாக்கி, வெடிகுண்டு, கத்தி போன்ற ஆயுதங்களால் நடத்தப்படும் தாக்குதல்களை விட ‘ஆசிட்’ வீச்சு சாதாரணமாகி விட்டது.

இங்கு பணம் கொள்ளையடிக்க அவரது உடலில் ஆசிட் வீசப்படுகிறது. இதனால் பலர் தங்களது முக அழகையும், கண்பார்வையையும் இழந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 454 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதேபோன்று 2015-ம் ஆண்டில் 261 பேரும், 2014-ம் ஆண்டில் 166 பேரும் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிட் வீச்சு சர்வ சாதாரணமாக நடைபெறுவதால் லண்டன் வீதிகளில் சுதந்திரமாக நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதற்கிடையே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதற்கு ஆசிட் வகைகள் எளிதாக கிடைப்பதுவே காரணம் என கூறப்படுகிறது.

எனவே ஆசிட் விற்பனை செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ஜப்பான் நாட்டின் கனசவா பல்கலைக்கழகத்தின் (Kanazawa University) ஆராய்ச்சியாளர்கள்,  குளிர்களி( ice-cream) உருகிவிடாமல் அதன் உருவத்தினை பராமரிக்கும் ஒரு வழியினை கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின், கனசவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்,  அறை வெப்பநிலைக்கேற்ப, மூன்று மணிநேரம் வரை உருகாது,  அதன் உருவத்தினை பராமரிக்கும்  குளிர்களியைக் கண்டுபிடித்துள்ளனர்.
பரிசோதனையில் தலைமுடி உலர்த்தும் கருவி மூலம் சூடான‌ காற்றினை வீசச் செய்த‌ போதும்கூட குளிர்களி உருகவில்லை. ஐந்து நிமிடம் சுடுகாற்று பட்டும் கூட‌ குளிர்களி உருமாற‌வில்லை.
இது எவ்வாறு சாத்தியமாகும் என ஆராய்ந்ததில் குளிர்களியில்  சேர்க்கப்பட்ட‌ பாலிபினால் என்ற திரவம்தான் காரணம் என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
செம்புற்றுப்பழங்களிலிருந்து (Strawberries)  பிரித்தெடுக்கப்பட்ட பாலிபினோல் திரவத்துடன் குளிர்களி  தயார் செய்யப்பட்டுள்ளது.
பாலிபினோல் திரமானது,  நீர் மற்றும் எண்ணெயை பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும் தன்மையினை கொண்டுள்ளது  என கனசவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான டோமிஹீசா குறிப்பிட்டுள்ளார்.
இந்தவகை குளிர்களியானது  சொக்லேட், வென்னிலா, ஸ்ட்ராபெர்ரி  எனப் பல்வேறு சுவைமணங்களில் (flavour) கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரினங்கள்  தொடர்ச்சியாக வாழ்வதற்கு நீர், வளி மாத்திரம் இருந்தால் போதாது  என்பது அனைவரும் அறிந்ததே.

பூமியைப்  போன்ற  சூழலை  செவ்வாய்  கிரகத்தில்  ஏற்படுத்த   முயற்சி !

செவ்வாய் கிரகம் தொடர்பில் மும்முரமாக ஆராய்ந்து வரும் நாசா நிறுவனம், அங்கு உயிரினங்களை குடியமர்த்துவதற்கும் எத்தனித்து வருவதோடு,  பூமியைப் போன்ற சூழலை செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்தவும் முயற்சிகளை மேற்ககொண்டு வருகின்றது.

இதில் ஒரு அங்கமாக செவ்வாய் கிரகத்தில் உள்ள மண்ணைப் போன்ற மாதிரியை நாசா உருவாக்கியுள்ளது.

இந்த மண்ணில், மண்புழுக்களை ஆராய்ச்சியாளர் குழு ஒன்று வளர்த்துள்ளது.

பூமியைப்  போன்ற  சூழலை  செவ்வாய்  கிரகத்தில்  ஏற்படுத்த   முயற்சி !

மண்புழுக்கள் குறித்த மண்ணில் சிறப்பாக வளர்வதுடன் துளைத்து உட்செல்லக்கூடியதாகவும் இருப்பதால், இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மண் புழுக்கள் வாழ்வது சாத்தியம் என்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது வாஷிங்டன் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால்  மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோ : 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்திய ராணுவத்துக்காக, 140 அதிநவீன ஹெலிகாப்டர்களை தயாரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ரஷ்யாவுடன், 6,500 கோடி ரூபாய் மதிப்பில், ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் நவீன ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு: 'மேக் இன் இந்தியா' திட்டத்தை நனவாக்க அரசு தீவிரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'மேக் இன் இந்தியா' என்ற பெயரில், இந்தியாவில் பொருட்கள் தயாரிப்பதை ஊக்கப்படுத்தி வருகிறது.


ஆர்வம்


ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும் போர் தளவாடங்களை, உள்நாட்டில் தயாரிப்பதில், மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த, 2015 டிசம்பரில், பிரதமர் மோடி ரஷ்யா சென்ற போது, 6,500 கோடி ரூபாய்மதிப்பில், இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்காக, 200 அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள் வாங்க, ஒப்பந்தம் கையெழுத்தானது.

'கமோவ் - 226டி' எனப்படும், அந்த ஹெலிகாப்டர்களில், 60 ஹெலிகாப்டர்கள், தயார் நிலையில், இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட உள்ளன.மீதமுள்ள, 140 ஹெலிகாப்டர்களை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்திய ராணுவத்திடம் நீண்ட காலமாக, 'சீட்டா, சேடக்' எனப்படும், போர் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுக்கு மாற்றாக, நவீன வசதிகள் செய்யப்பட்ட, 'கமோவ்' ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன.
அக்டோபரில் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த, ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ், ரோஸோபரோனெக்ஸ்போர்ட் ஆகிய இரு நிறுவனங்கள், கூட்டு முயற்சியில், ஹெலிகாப்டர்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளன.


ஒப்பந்தம்


இது தவிர, இந்திய கடற்படைக்காக, ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து, 111 பிரமாண்ட ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 'நவீன வசதிகளுடன் கூடிய ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படுவதால், எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் அதிகரிக்கும்' என, நிபுணர்கள் கருதுகின்றனர்.


4 கட்டங்களாக தயாரிப்பு பணி


'கமோவ்' ஹெலிகாப்டர் தயாரிப்பு பணி, நான்கு கட்டங்களாக நடக்க உள்ளதாக, 'கமோவ் - 226டி' ஹெலிகாப்டர் தயாரிப்பு திட்ட இயக்குனர், டிமிட்ரி ஸ்வெட்ஸ் கூறினார்.

நிருபர்களிடம், டிமிட்ரி ஸ்வெட்ஸ் கூறியதாவது: ரஷ்யா - இந்தியா இடையே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, கமோவ் - 226டி ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தப்படி, ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழில்நுட்பமும், இந்தியாவுக்கு மாற்றித் தரப்படும். நான்கு கட்டங்களாக, இந்த ஹெலிகாப்டர்களை தயாரிக்க, திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் பாகங்கள், இந்தியாவுக்கு, 'டெலிவரி' செய்யப்படும். இரண்டாவது கட்டத்தில், கூட்டு தயாரிப்பில் உருவான பாகங்கள் டெலிவரி செய்யப்பட்டு,


இந்தியாவில் தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கும். தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உதவிகள் அளிக்கப்படும்.

மூன்றாவது கட்டத்தில், இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட்ட மூலப்பொருட்களை வைத்து, உற்பத்தி மற்றும் கட்டுமான பணிகள் நடக்கும். நான்காவது கட்டமாக, முழுமையான ஹெலிகாப்டர் உருவாக்கப்படும். இது தவிர, ஹெலிகாப்டர் பராமரிப்பு மையம், சேவை மையம், இந்தியாவில் நிர்மாணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


சிறந்த பலன் கிடைக்கும்


ரஷ்யாவைச் சேர்ந்த, ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவன தலைவர், ஆண்ட்ரே போகினிஸ்கி,நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய கடற்படைக்கு, 111 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. இவற்றுடன், 'கமோவ் - 226டி' ஹெலிகாப்டர்களை, இந்திய கடற்படை பயன்படுத்தினால், சிறப்பான பலனை பெற முடியும்.

கமோவ் ஹெலிகாப்டர்களை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், இந்தியாவில் தயாரிப்பதற்கான பணியில், நாங்கள் உதவுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்று உலகிலேயே முதல்முறையாக சட்டத்துக்கு உட்பட்டு மனித கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜப்பானில் இருக்கும் 'சாப்பாட்டு சகோதர்கள்' என்ற உணவகம் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அந்த உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும் அந்த உணவகத்துக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இங்கு விற்கும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 100 டொலரில் இருந்து உணவுகள் கிடைக்கிறது. அதிகபட்சமாக 1193 டொலர் வரை உணவுகள் கிடைக்கிறது.மேலும் பல விதமான வகைகளில் உணவுகள் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூப்களும் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு மனித உடல்கள் கிடைக்கும் ரகசியத்தையும் அந்த உணவகம் வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கி சமைக்கின்றனர்.

ஒரு உடலை இவர்கள் 35,799 டொலர் கொடுத்து வாங்குகின்றனர். மேலும் 30 வயதுக்கும் குறைவான நோய் இல்லாத உடலை மட்டுமே வாங்குகின்றனர்.

தற்போது அந்த உணவகத்தில் சாப்பிட்ட சில மக்கள் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அதன்படி ஒருவர் ''இங்கு உணவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கிறது.

பன்றி கறி போலவே இருப்பதால் மனித கறியில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.