நடந்து வந்த பாதை

நடந்து வந்த பாதை

எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,  அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கையில் எனது ஓய்வு நேரங்களில் எனது அனுபவத்தைப் பதிவாக கவிதை வடிவில் கிறுக்குவது வழக்கம்.  எனது  நண்பர்
என் கவிதைகளை வாசித்தார்.   ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இதை பிரசுரிக்கும்படி
கூறினார்.  ஆரம்பத்தில் அதை அலட்சியப்படுத்திவிட்டேன்.  ஏனென்றால், இங்கே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தொழில் போட்டி காரணமாக பலவிடயங்களைக் கற்க வேண்டியுள்ளது.  இதில் சுவாரசியம் என்னவென்றால் தலைவா தலைவாவென உசிப்பேத்தி ஆப்பு வசிட்டாங்கையா  எனது  அலுவலகதத்தில் அதில் எழுந்த கவிதை இது. இவர்கள் மட்டில் எப்போதும் விழிப்பாக இருந்துவிட்டால் வாழ்க்கையில் ஓரளவு
பிரச்சனைகளில்  இருந்து தப்பிக் கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

நான் வலைப்பூவை ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை  .  கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும்  எனது  வலைப்பூவிற்கு வருகைதரும்  அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.எனது   வலைப்பூவில் பல்சுவை அம்சங்கள்
நிறைந்ததாக உருவாக்கஎண்ணியுள்ளேன்  தங்களது ஆதரவைத் தொடர்ந்து 
வழங்குவீர்கள் என நம்புகின்றேன்.