ஸ்கைப்,கூகிள் டாக் போன்ற புதிய வீடியோ சாட்டிங் மென்பொருள்!!!!!!!!!!!!!!!!!

ஸ்கைப்,கூகிள் டாக் போன்ற புதிய வீடியோ சாட்டிங் மென்பொருள்!!!!!!!!!!!!!!!!!



 
வீடியோ வழி சாட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது.
மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர் அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும் தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது.
இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும். அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது.

இதன் பெயர் ஓவூ. இதில் பல டூல்கள் புதிய வசதிகளைத் தரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆறு வழி வீடியோ காலிங் என்ற வசதி முதலாவதாக இந்த டூல் மூலம் வழங்கப்படுகிறது.
உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் ஒரு சில நொடிகளில் தொடர்பு கிடைக்கிறது. இதனைஇங்கே  இலவசமாக இறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தலாம்.
இறக்கம் செய்யப்படும் பைல் ஒரு எக்ஸிகியூடிவ் பைலாக உள்ளது. இந்த பைலில் டபுள் கிளிக் செய்தால் நமக்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய செட் அப் விஸார்ட் கிடைக்கிறது. இதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து முடித்தவுடன் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.

அடிப்படைத் தகவல்களைக் கொடுத்த பின்னர் I accept – Create account. என்ற இடத்தில் கிளிக் செய்திட உங்கள் அக்கவுண்ட் அமைக்கப்படுகிறது. பின்னர் ஓவூ அப்ளிகேஷன் உங்கள் திரையின் வலது பக்கத்தில் திறக்கப்படும். அதில் இதே போல அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்கள் காட்டப்படும்.
அடுத்து பூமி படம் உள்ள டேப்பில் கிளிக் செய்திடவும். உடனே ஓவூ உங்களுக்கான வீடியோ கால் லிங்க் ஒன்றைத் தரும். இந்த லிங்க்கினை உங்கள் நண்பர்களுக்கு இமெயில் மூலமாகவோ, வேறு வழியிலோ அனுப்பவும்.

அவர்களுக்கு ஓவூ அக்கவுண்ட் இருக்க வேண்டியதில்லை. இந்த லிங்க் பெறுபவர்கள் இதில் கிளிக் செய்தால் சில நொடிகளில் அவர்கள் உங்களுடன் வீடியோ சேட் செய்திட இணைவார்கள். இதில் நண்பர்களை இணைக்க Add to call பட்டன் அழுத்தி இணைக்கவும்.

ஓவூ சாட்டிங்கில் சைட்பார் வியூ(Sidebar View) தரப்படுகிறது. இது வீடியோ விண்டோவின் வலது கீழாகத் தரப்பட்டுள்ளது. வீடியோ சேட் செய்து கொண்டே இணையப் பக்கங்களையும் படிக்க விரும்பினால் இந்த சைட் பார் வியூவில் சேட்டிங் மேற்கொள்ளலாம். வீடியோ சேட்டிங் சிறிய அளவில் கிடைக்கும்.
இதில் நம்மை அழைப்பவர்களுக்குக் கணணி பதில் அளிக்கும் வசதியும் உள்ளது. உங்கள் நண்பருக்கு அவர் இல்லாத நேரத்தில் செய்தியை அனுப்பினால் அது அவர் மீண்டும் இணையத்தில் இணைகையில் காட்டப்படுகிறது.

ஏற்கனவே ஓவூ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களை அழைக்க மெனு பாரிலிருந்து Contacts அழுத்திப் பின்னர் Import காண்டக்ட் என்பதனை அழுத்தவும்.