மஹிந்த ராஜபக்ஷ கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினர்!!!!!

.மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் பரம்பரை வாரிசு மட்டுமன்றி கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்று பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் அண்டனி தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் சிங்கள மக்களுக்கே உரியது என்றும், இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முற்காலத்தில் சிங்கள மக்களும் பௌத்த தேரர்களும் பரவி வாழ்ந்ததாக நிரூபிக்கும் ஊடக ஆய்வு நடவடிக்கையை ஜெக்சன்
அண்டனியிடம் ஒப்படைக்குமளவுக்கு அவர் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான ஒரு கலைஞராவார்.
அவர் இலங்கையின் ஆரம்ப கால வரலாறு பற்றி தொலைக்காட்சியில் நடாத்திவரும் நிகழ்ச்சியின் திரைக்கதைப் பிரதி ஜனாதிபதி செயலகத்திலிருந்தே தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.
அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் போதே அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் வாரிசு மட்டுமன்றி, கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்றும் அவர் தன் கண்டுபிடிப்பின் அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரது கண்டுபிடிப்பின் பிரகாரம் கௌதம புத்தர் தொட்டு மஹிந்த வரையான பரம்பரை வழித்தொடர் பின்வருமாறு அமைகின்றது.
கௌதம  புத்தரின் தகப்பனார் - சுத்தோதன
சுத்தோதனவின் சகோதரர் - அமிதோதன
அமிதோதனவின் மகன் - பண்டுசாக்கிய
பண்டுசாக்கியவின் மகள் - பத்த கச்சானா
பத்தகச்சானா இலங்கை வந்து பண்டுவஸ்தெவி அரசரை மணக்கின்றார்.
அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா வாகும்.
உன்மாத சித்ராவின் மகன் - பண்டுகாபய
பண்டுகாபயவின் மகன் - முட்டசீவ
முட்டசீவவின் மகன் - தேவானம்பியதிஸ்ஸ
தேவானம்பியதிஸ்ஸவின் சகோதரன் மகாநாக வாகும்.அவர் தான் ருஹுணையில் புதியதொரு இராசதானியை உருவாக்கியவராவார்.
மகாநாகவின் சகோதரன் - யடாலதிஸ்ஸ
யடாலதிஸ்ஸவின் சகோதரன் - கோட்டாபய
கோட்டாபயவின் மகன் - காவன்திஸ்ஸ
காவன்திஸ்ஸவின் மகன் - துட்டகைமுனு
அதன் பின்பு துட்டகைமுனு தொடக்கம் ராஜபக்ஷ பரம்பரை வரையான சங்கிலித்தொடரை ஜெக்சன் அண்டனி விளக்கவில்லை. ஆயினும் துட்டகைமுனுவின் பின் இலங்கையை ஒரே குடையின் கீழ்  கொண்டுவந்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் அவர் துட்டகைமுனுவின் பரம்பரை வழிவந்தவர் என்றும் ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதற்கிடையே தாம் துட்டகைமுனு மன்னனின் உண்மையான வாரிசுகள் தான் என்று நிரூபிக்கும் வகையில் ராஜபக்ஷவினரும் தற்போதைய நாட்களில் அனுராதபுரம் பூராகவும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு துட்டகைமுனு மன்னனின் வாளைத் தேடி ஒரு பாரிய தேடலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
இதற்கிடையே மஹிந்த ராஜபக்ஷ கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினர் என்ற கருத்து பெரும்பான்மை பௌத்த மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியொன்றை உருவாக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இலங்கை முழுவதும் சிங்கள மக்களுக்கே உரியது என்றும், இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முற்காலத்தில் சிங்கள மக்களும் பௌத்த தேரர்களும் பரவி வாழ்ந்ததாக நிரூபிக்கும் ஊடக ஆய்வு நடவடிக்கையை ஜெக்சன் அண்டனியிடம் ஒப்படைக்குமளவுக்கு அவர் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான ஒரு கலைஞராவார்.
அவர் இலங்கையின் ஆரம்ப கால வரலாறு பற்றி தொலைக்காட்சியில் நடாத்திவரும் நிகழ்ச்சியின் திரைக்கதைப் பிரதி ஜனாதிபதி செயலகத்திலிருந்தே தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.
அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் போதே அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துட்டகைமுனு மன்னனின் வாரிசு மட்டுமன்றி, கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்றும் அவர் தன் கண்டுபிடிப்பின் அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரது கண்டுபிடிப்பின் பிரகாரம் கௌதம புத்தர் தொட்டு மஹிந்த வரையான பரம்பரை வழித்தொடர் பின்வருமாறு அமைகின்றது.
கௌதம  புத்தரின் தகப்பனார் - சுத்தோதன
சுத்தோதனவின் சகோதரர் - அமிதோதன
அமிதோதனவின் மகன் - பண்டுசாக்கிய
பண்டுசாக்கியவின் மகள் - பத்த கச்சானா
பத்தகச்சானா இலங்கை வந்து பண்டுவஸ்தெவி அரசரை மணக்கின்றார்.
அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா வாகும்.
உன்மாத சித்ராவின் மகன் - பண்டுகாபய
பண்டுகாபயவின் மகன் - முட்டசீவ
முட்டசீவவின் மகன் - தேவானம்பியதிஸ்ஸ
தேவானம்பியதிஸ்ஸவின் சகோதரன் மகாநாக வாகும்.அவர் தான் ருஹுணையில் புதியதொரு இராசதானியை உருவாக்கியவராவார்.
மகாநாகவின் சகோதரன் - யடாலதிஸ்ஸ
யடாலதிஸ்ஸவின் சகோதரன் - கோட்டாபய
கோட்டாபயவின் மகன் - காவன்திஸ்ஸ
காவன்திஸ்ஸவின் மகன் - துட்டகைமுனு
அதன் பின்பு துட்டகைமுனு தொடக்கம் ராஜபக்ஷ பரம்பரை வரையான சங்கிலித்தொடரை ஜெக்சன் அண்டனி விளக்கவில்லை. ஆயினும் துட்டகைமுனுவின் பின் இலங்கையை ஒரே குடையின் கீழ்  கொண்டுவந்தவர் மஹிந்த ராஜபக்ஷ என்றும் அவர் துட்டகைமுனுவின் பரம்பரை வழிவந்தவர் என்றும் ஆணித்தரமாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதற்கிடையே தாம் துட்டகைமுனு மன்னனின் உண்மையான வாரிசுகள் தான் என்று நிரூபிக்கும் வகையில் ராஜபக்ஷவினரும் தற்போதைய நாட்களில் அனுராதபுரம் பூராகவும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு துட்டகைமுனு மன்னனின் வாளைத் தேடி ஒரு பாரிய தேடலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.
இதற்கிடையே மஹிந்த ராஜபக்ஷ கௌதம புத்தரின் பரம்பரை வழி உறவினர் என்ற கருத்து பெரும்பான்மை பௌத்த மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியொன்றை உருவாக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
 நன்றி  தமிழ் வின்