உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 03இந்த தொடரின் மூன்றாவது பாகத்தில் வேதாகமத்தின் ஒவொரு வசனத்துக்கும் பல ஆவிக்குரிய மற்றும் மறைமுக அர்த்தம் இருந்தாலும் தற்போது உலகில் நடை பெறும் சம்பவங்கள் வேதத்தின் சொல்லபட்டதன் நிறைவேறுதலே.
அந்த வகையில் தற்போது உலகில் நடை பெறும் சில சம்பவங்களும் அது வேதத்தில் சொல்ல படுள்ளதா? என ஆராய்வோம்.இந்த பதிவு முழுக்க வேத அடிப்படையிலும் தற்காலத்தில் நடைபெறும் சம்பவங்கள் அடிபடையிலும் எழுத படுகின்றது .பெண்களை இழிவுபடுத்த எழுத படவில்லை. ஆதியில் பிசாசு மனிதனை பாவத்தில் விழுத்த பெண்ணை பயன்படுத்தினான் என்பது அனைவரும் அறிந்த உண்மை தற்போதும் அதே பாணியையே அவன் பாவிகின்றான் தற்போதைய உலகில் நாகரிகம் என்ற போர்வையில் பெண்களை நிர்வாணபடுத்துவதும் ,விபசாரத்துக்கு உட்படுத்துவதும்   நிர்வாணநடனம் மேலை நாடுகளில் சர்வ சாதரணமாக நடை பெற்று வருகின்றது . இது வேத்தில் உள்ளதா ? காண்க 

 .2 திமோத்தேயு ,அதிகாரம் 03

1 மேலும் இதைத் தெரிந்துகொள்ளும்: இறுதி நாட்கள் பொல்லாத காலமாயிருக்கும்.

2 அப்போது மக்கள் தன்னலப்பிரியர், பொருளாசை பிடித்தவர், வீம்புக்காரர், செருக்குடையவர், பழித்துப்பேசுபவர், பெற்றோருக்கு அடங்காதவர், நன்றி கொன்றவர், இறைவனைப் புறகணிப்பவர்,

3 பரிவில்லாதவர், தீராப் பகையினர், புரணி பேசுபவர், தன்னடக்கமற்றவர், கொடியவர், நல்லதை வெறுப்பவர்,

4 நம்பிக்கைத் துரோகிகள், மூர்க்கர், இறுமாப்புடையவர் என்று இவ்வாறெல்லாம் இருப்பர். அவர்கள் கடவுளை நாடுவதைவிடச் சிற்றின்பங்களையே மிகுதியாய் நாடுவர்.

5 பக்தியின் வெளித் தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள்@ ஆனால் அதன் உள்ளாற்றலைப் பொருட்படுத்த மாட்டார்கள்.இவர்களுடன் சேராதீர்.

6 இத்தகையவர்களுள் சிலர் பிறர் வீடுகளில் புகுந்து மதிகெட்ட பெண்களை வயப்படுத்துகிறார்கள். இப்பெண்களோ பாவங்களால் மூழ்கடிக்கப்பட்டு, பல்வேறு இச்சைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

7 இவர்கள் ஓயாமல் கற்றுக்கொண்டேயிருந்தாலும் உண்மையைக் கண்டுணர்வதில்லை.

மேலே எப்படி வேத வசனம் நிறைவேறி வருகின்றது என்று பார்த்தோம்.
இப்பொழுது ஐரோப்பாவில் ஒரு நுதன திறந்த மார்புப் பெண்ணியப் போராட்டக் குழுவின்  பிரதான நோக்கம் பெண் உரிமை என்ற பெயரில் பெண்களை நிர்வாணபடுத்தியதுடன்  .பல தூசண வார்த்தைகளை உடலியல் எழுதி உலகின் மதங்களை ஒழிப்பதுடன் உலகெங்கிலும் ஓரினபாலுறவை பரப்புவது இவர்களது பிரதான கொள்கை உங்களுக்கா பாரிஸ் தமிழில் இருந்து லிங்க் 
இந்த சம்பவத்துக்கும் வேததுக்கும் என்ன தொடர்பு? என நீங்கள் யோசிக்கலாம் தேவனின் எதிரியான பிசாசு மனித அவதாரம் எடுத்து  அந்தி கிறிஸ்துவாக இந்த உலகத்தில் தோன்ற முன்பு உலகத்தில் உள்ள மதங்கள் அழிக்க பட வேண்டும் மதங்கள் அழிக்கபட்டாலே அந்த வெற்றிடத்துக்கு தன்னை தெய்வமாக மக்களை வணங்க வைக்க முடியும் .எனவே இந்த  பெண்ணியப் போராட்டக் குழு தங்களது  தலைவரின் வருகைக்கு முன்பு உள்ள தடைகளை அகற்றி வருகின்றனர் .அத்துடன் தேவன் அறவே வெறுக்கும் ஓரினபாலுறவை பரப்புவதில் இருந்து இவர்கள் யாருடைய ஊழியர் என தெரிந்து கொள்ளலாம்.இதோ வேத வசனம் 

2 தெசலோனிக்கேயர் அதிகாரம் 02

4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 

II பேதுரு 2:18 வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.

திருவெளிப்பாடு
அதிகாரம் 17  
3 தேவ ஆவி என்னை ஆட்கொள்ளவே, வானதூதர் என்னைப் பாலைவனத்திற்குக் கொண்டு சென்றார். அங்கே செந்நிற விலங்கின்மேல் அமர்ந்திருந்த பெண் ஒருத்தியைக் கண்டேன். அந்த விலங்கின் உடலெல்லாம் தூஷணப்பெயர்கள் நிறைந்திருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன.

எனவே உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலம் என அறிந்து கொள்ளலாம்
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 05