இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?

இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?

நான் ஓர் ஆவிக்குரிய அபிஷேகம் பெற்ற கத்தோலிக்கர். அபிஷேகத்துக்கு முன், நான் மாதா ஜெபமாலை சொல்வதுண்டு. இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?
பதில்
1. மாதா ஜெபமாலை:
  • “மாதா ஜெபமாலை” கத்தோலிக்க சபையில் நுழைந்தது, “மரியன்னை பக்தி மூலமாக”.
  • மரியன்னை பக்தியை வளர்ப்பதற்கென்றே, கத்தோலிக்க சபையில், சில துறவற இயக்கங்கள் உள்ளன. இது அவர்கள் முழுநேரப் பணி.
  • எந்த ஒரு “பக்தி முயற்சியும்” ஆத்மீகத்தின் தொடக்க நிலையே. அவ்வண்ணமே, மாதா ஜெபமாலையும்.
2. பக்தி நிலையும் - விசுவாச நிலையும்:
  • கிறிஸ்தவ ஆத்மீகத்தில், “பக்தி நிலையிலிருந்து”, “விசுவாச நிலைக்கு” மக்கள் வளர வேண்டும் - அவர்களைத் திருச்சபை வளர்க்க வேண்டும்.
  • “பக்தி நிலை” என்பது, ஆத்மீக வளர்ச்சியின் “ஏணிப்படியே”.
  • ஒருவருடைய பக்தி நிலையின் “ஜெப முறைகள்” அவரை, “விசுவாச நிலைக்கு” உயர்த்தும் போது, அங்கே அவரது “ஜெப முறையும்” மாறுகிறது.
  • ஜெப முறைகள், வளர்ச்சிக்கான ஏணிப்படிகள் மட்டுமே. அந்த ஏணியிலேயே அமர்ந்து விடுவதும், மக்களை அமர வைப்பதும், ஞானமல்ல.
3. ஸ்தோத்திர ஜெபமும் - பரவச ஜெபமும்:
  • விசுவாச நிலை என்பது, ஒருவர் “இரட்சிப்பு – அபிஷேகம்” பெறும் நிலை.
  • அங்கே ஜெப வாழ்வு என்பது, “ஸ்தோத்திர ஜெபம்” – லூக் 24:53, பரவச ஜெபம் - தி.ப 2:1-4, 4:31, 10:10, 22:17.
  • மேற்சொன்ன ஜெபங்களெல்லாம், “விசுவாசியின் ஜெபம்”.
  • தூய ஆவியால் அபிஷேகம் பெற்ற மரியன்னை – லூக் 1:35,41, “செய்த ஜெபமாலை” “ஸ்தோத்திர ஜெபமும்” – தி.பா 1:14, லூக் 24:53, “பரவச ஜெபமும்” – தி.ப 2:1-4.
4. நிறைவானதும், குறைவானதும்:

  • நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்து போகும் - 1கொரி 13:10,11.
  • ஜெபமாலை செய்வது பாவமல்ல.
  • இருளில்இருப்பவர்க்கு “மெழுகுதிரியின் ஒளி” உயர்ந்தது.
  • பகல் வெளிச்சத்தில் இருப்பவர்க்கு, மேற்சொன்ன ஒளி தேவையா என்பதை, அவரவர் ஆத்மீக நிலையில் முடிவெடுக்க வேண்டும்.
  • நன்றி  http://www.catholicpentecostmission.in