ஆபரேசன் "வெட்டிங் ஹால்".. மனித வெடிகுண்டுகள் மூலம் சென்னையைத் தகர்க்கத் திட்டமிட்ட தீவிரவாதிகள்

மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தீவிரவாத தாக்குதல் போல தென்னிந்தியாவில் சதிவேலைகளை அரங்கேற்ற திட்டமிருந்த தீவிரவாதிகள் சென்னையில் ஸ்லீப்பர் செல்களாக தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். ‘ஆபரேசன் வெட்டிங் ஹால்' என்ற பெயரில் சென்னையில் உள்ள முக்கிய இடங்களை தீவிரவாதிகள் தகர்க்க திட்டமிட்டிருந்தனர். இந்த திட்டத்தில் தொடர்புடைய முகமது உசேன் என்ற தீவிரவாதியை மலேசியாவில் கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவனை இந்தியாவிற்கு கொண்டு வருவது பற்றி தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அதில் சிக்கல் நீடிக்கிறது.
முகமது உசேனை நாடு கடத்திக் கொண்டு வந்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்தது. அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் மூலம் இந்தியா ‘ரெட்கார்னர் நோட்டீஸ்' பெறப்பட்டது. ஆனால் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இது தொடர்பான அனுமதியை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மலேசிய அட்டார்னி ஜெனரல் அலுவலகம் போர்க்கொடி உயர்த்தியது. காரணம் முகமது உசேன் இலங்கை குடிமகன் என்பதால், மலேசியாவில் இருந்து மூன்றாவது நாட்டுக்கு (இந்தியா) நாடு கடத்திக்கொண்டு செல்லும்போது, இதில் இலங்கையின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் என மலேசிய அட்டார்னி ஜெனரல் அலுவலகம் கருதுகிறது. எனவே அவரை இலங்கையின் ஒப்புதலின்றி இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர முடியாத நிலை நீடிக்கிறது.
தூதரக அதிகாரி சித்திக் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் இலங்கை தலைநகர் கொழும்பில் பணியாற்றிய தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக்கின் பெயரை கூறியுள்ளனர். சித்திக்தான் முதலில் இரண்டு இலங்கை நாட்டவரை சென்னை அனுப்பி உளவு பார்க்க வைத்தான். அந்த இருவர்தான் அருண் செல்வராஜன் மற்றும் ஜாகிர் ஹூசைன். இவர்கள் சென்னைக்குள் ஊடுருவி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உட்பட குண்டுவெடிப்பை நடத்துவதற்கு வாய்ப்புள்ள மிக முக்கியமான இடங்களை உளவு பார்த்து தகவல்களைத் திரட்டினர்.
அருண் செல்வராஜூக்கு சிக்கல் ஏற்பட்டால் சித்திக் மேலும் பலரை அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தான். முகம்மது உசேனின் முக்கியத்துவம் இந்த தாக்குதல் திட்டத்திற்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் முகம்மது உசேன். இது குறித்து ஒன் இந்தியாவிடம் பேசிய தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரி, தீவிரவாதி ஜாகிர் மூலம் அமெரிக்க தூதரகம், இஸ்ரேஸ் தூதரகங்களை 26/11 பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கு மூளையாக செயல்பட்டவர் இலங்கையில் தூதரக அதிகாரியான சித்திக். இதில் முகம்மது உசேனை மலேசிய போலீசார், இந்தியாவிடம் ஒப்படைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. தற்கொலைப்படையினர் சென்னையில் இரண்டு மனித வெடிகுண்டுகளை உலாவ விட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டது குறித்து போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளான். இந்த மனித வெடிகுண்டுகள் மலேசியாவை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாதிகள் என்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான பண உதவியை முகம்மது உசேன்தான் செய்து வந்துள்ளான். இதுவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த மனித வெடிகுண்டுகள் மூலம் சென்னை, பெங்களூருவில் தாக்குதல் நடத்தி குழப்பம் விளைவிக்கவும் திட்டமிட்டிருந்தனர் தீவிரவாதிகள். தீவிரவாதிகள் திட்டம் என்ன? சென்னை, பெங்களூருவில் நகரின் மக்கள் நெரிசலாக நடமாடும் இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். அவர்களது நோக்கமே ஒட்டுமொத்த பாதுகாப்பு நிர்வாகத்தையே முடக்கிப் போடுவது என்பதுதான். குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு அதில் பாதுகாப்பு தரப்பினர் கவனத்தை செலுத்தும் போது பிற தீவிரவாதிகள் ஏகே௪7 ரக துப்பாக்கிகள் முனையில் சென்னை நகரை கைப்பற்றி பொதுமக்கள், வெளிநாட்டு பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து தாக்குதல் நடத்துவது என்பது ஐ.எஸ்.ஐ. திட்டம்.
5 தீவிரவாதிகள் இதற்காக மொத்தம் 5 பேரை சென்னைக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர். இருவர் பாகிஸ்தான் நாட்டவர். எஞ்சிய மூவர் மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரை இலங்கை தூதரகத்தில் பணியாற்றி சித்திக் தயார் நிலையில் வைத்திருந்தான்.. முதலில் அவர்களை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து சென்னைக்குள் ஊடுருவச் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதுவும் முதலில் மாலத்தீவு சென்றுவிட்டு அங்கிருந்து மூன்று தீவிரவாதிகளுடன் இணைந்து அப்படியே பெங்களூருக்குள் ஊடுருவி கடைசியாக சென்னையில் ஒன்றிணைவது இவர்கள்து ப்ளான்.
இந்த 5 பேருக்கும் கொழும்பு மற்றும் மாலத்தீவில் பயிற்சி அளிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தனர்.. சென்னை கடைவீதிகளில் தாக்குதலைத் தொடங்கி கடைசியாக அமெரிக்கா தூதரகத்தை தகர்ப்பது என்பது ஐ.எஸ்.ஐ. போட்டுக் கொடுத்த திட்டம். ஆபரேசன் வெட்டிங் ஹால் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு வைத்திருந்த பெயர் ஆபரேசன் வெட்டிங் ஹால் என்பதாகும். ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் திட்டப்படி, சென்னையின் முக்கிய நகரங்களை தாக்கும் தீவிரவாதிகள் இறுதியாக அமெரிக்க தூதரகத்தை தங்களின் கைப்பிடிக்குள் கொண்டுவர திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நம் தேவன் வெளிபடுத்திய தீர்கதரிசனம் காணக 

முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி வைக்கின்றனர்

நன்றி அதிர்வு  http://www.athirvu.com/newsdetail/3673.html