தமிழர்கள் தான் உலகின் மூத்த குடி

தமிழர்கள் தான் உலகின் மூத்த குடி

அறிவியல் மற்றும் வரலாற்று ஆய்வு என்பது தனியான சமாசாரம். ஆரியக் குடியிருப்பு நடந்ததற்கு இருநூறு ஆண்டுகளாக ஆதாரங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அப்படி எதுவும் நடக்கவில்லை, ஆரியர்கள் என்பவர்களும் இந்தியாவின் பூர்வ குடிகள்தான் என்று விவாதங்கள் முன்னெடுக்கப் பட்டன. முன்பு மொழியியல் அல்லது அகழ்வாய்வு ஆதாரங்கள் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இப்போது காலம் மாறி விட்டது. மனிதர்களின் டிஎன்ஏ எனப்படும் மரபணுவை வைத்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள்.

இதில் சமீபத்தில் ஒரு மாபெரும் ஆய்வுக் கட்டுரை BMC Evolutionary Biology எனும் அறிவியல் இதழில் பதிப்பிக்கப் பட்டிருகிறது.

வழக்கமாக ஆய்வின் போது X குரோமோசோம் எனப்படும் பெண்களின் டிஎன்ஏவை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்.

இப்போதைய ஆய்வில் Y குரோமோசோம் எனப்படும் ஆண்களின் டிஎன்ஏவை வைத்து ஆய்வு நடத்தப் பட்டிருகிறது.

மத்திய ஐரோப்பா, வளைகுடா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், பர்மா ஆகிய பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 17,000 ஆண்களை வைத்து 32 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு இது.

இதில் பூர்வ குடிகளின் டிஎன்ஏவை R1a என்று தனிமைப் படுத்தி இருக்கிறார்கள். இது இந்தியாவில் 17.5 சதவிகிதம் ஆண்களிடம் பெரும்பான்மையாக கிடைக்கிறது.

அதிலும் தமிழத்தில் மிகுதியாக காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தவிர மீதி ஆண்களிடம் சில பல குறைபாடுகளோடு இருக்கிறது. அதாவது இனக் கலப்பு நடந்திருக்கிறது.

இன்றைய நவீன ஆய்வுகள் சந்தேகமற ஆரியக் குடியிருப்பு நடந்திருப்பதை உறுதி படுத்துகின்றன. அந்தக் குடியிருப்பு இந்தியாவில் மாபெரும் கலாச்சார மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.