தமிழ் இல்லாமல் ஒரு மொழியா..?

தமிழ் இல்லாமல் ஒரு மொழியா..?

இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நிகழும் மாநிலமாக இருப்பது தமிழ்நாடு. ஓரிடத்தில் உரிமை மீறப்படுகிறது என்றால் அங்கே ஒரு போராட்டம் வெடிக்கும். பரிணாம வளர்ச்சியில் உலகிற்கே முன்னோடியான இனம் இது. சம்பிரதாயம் என்ற வார்த்தைக்குள் சயின்ஸை வைத்த பூமி இது. சடங்குகள் வேறு, சம்பிரதாயங்கள் வேறு. மூட நம்பிக்கைகள் சடங்குகள் வரிசையில் வரும். அது இடைச்சொறுகலாக வந்தது. 


ஆனால் தமிழர்களின் பண்பாடு தொன்று தொட்டு வருவது. அறிவியலை தவிர வேறு எந்த பின்னணி காரணங்களும் இருக்காது. இன்றைக்கு இருக்கும் பல உலக மொழிகளுக்கு வேர் மொழியானது தமிழ். காலத்தின் கட்டாயம் நிரூபிக்க பல ஆதாரங்களை தேட வேண்டி இருக்கிறது. தற்போது கொரியா உலகையே எதிர்த்து போராடும் அளவிற்கு தற்சார்பு உடைய நாடாக மாறி இருக்கிறது என்றால், அங்கு தமிழ் கலாச்சாரமும் ஒரு வகையில் வேரூன்றி இருக்கிறது. நம்கிம் எனும் கொரியர் ஏறத்தாழ ஐந்தாயிரம் தமிழ்ச்சொற்கள் கொரிய மொழியில் உள்ளதாக கோவை செம்மொழி மாநாட்டில் தமதாய்வுக் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். 


அவரைத் தமிழ் கற்கத் தூண்டியது எது என்பதை அவரே விளக்குகின்றார். கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக அவர் பணியாற்றுகின்றார். ஒரு நாள் தொடர் வண்டியில் அவர் பயணிக்கும்போது ஒரு தமிழ்க் குடும்பத்தினர் தமிழில் பேசியதைக் கவனித்துள்ளார். அவர்களின் பேச்சில் பல சொற்களின் ஒலிப்புக் கொரிய மொழிச் சொற்களைப் போல இருந்துள்ளன. அவர்களிடம் பேசியபோது அவர்கள் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார்கள். பிறகுதான் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியுள்ளார்