சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன், 584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு (சனிக்கிழமை) 9.30 மணியளவில் தாக்கிய இந்த சுனாமியினால், பெருமளவு மக்கள் காணாமற்போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்புகள், கட்டடங்கள் மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளதோடு, பெருமளவு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கு அமைய, சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நில அதிர்வு காரணமல்ல என்றும், அனக் கரக்காட்டோ எனும் எரிமலை வெடிப்பின் விளைவாக இருக்கலாம் என்றும் தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.