வாரம்தோறும் 18 தமிழர்களை இனம்மாற்றும் முஸ்லிம்கள்

வாரம்தோறும் 18 தமிழர்களை இனம்மாற்றும் முஸ்லிம்கள்

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களில் 18 பேர் வாரந்தோறும் இனமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்தேசியக் கூட்மைப்பிலிருந்து விலகி மஹிந்த அணியில் இணைந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள இந்த நடவடிக்கைகளை தடுக்காது, தமிழ் மக்களின் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூடட்மைப்பினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் வியாழேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.

நல்லிணக்கம் பேசிக்கொண்டு காலத்தை கழித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிலர், ஏனைய சமூக அரசியல் வாதிகள் நல்லிணக்கம் என்ற போர்வையில் கிழக்கில் உள்ள தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளும் செயற்பாடுகளை தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் வியாழேந்திரன் குற்றம்சாட்டினார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிவருகின்ற போதிலும், தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ உத்தேச அரசியல் சாசனத்தால் தமிழ் மக்களுக்கான தீர்வுகள் மறுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள போதிலும், இன்னமும் உத்தேச அரசியல் சாசனம் தொடர்பான அறிக்கைகள் குறித்து கூட்டமைப்பினர் முக்கியஸ்தர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருவது வேடிக்கையாக இருப்பதாகவும் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். .