மலக்குழி தொழிலாளர்கள் துயர் தோய்ந்த தங்கள் கதை

மலக்குழி தொழிலாளர்கள் துயர் தோய்ந்த தங்கள் கதை

இந்தியா முழுவதிலும் தமிழகத்தில்தான் மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் என்கிறது மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கான உரிமைகள் குறித்து பணியாற்றும் சஃபாயி கர்மசாரி அந்தோலன் என்னும் அமைப்பு. "இது அபாயகரமான வேலை என்று தெரிந்தும் உடலையும் உயிரையும் பணயம் வைத்து இதை செய்வதற்கு ஒரே காரணம் இது அரசாங்க வேலை என்பதால்தான். எட்டு வருடங்களாக இந்த பணியில் இருக்கிறேன் ஆனால் 2 வருடங்களுக்கு முன்பு தான் இது அரசாங்க வேலை இல்லை என்பது தெரியவந்தது" என்கிறார் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் சென்னை சூளையை சேர்ந்த மணி