அசத்தும் ஆங்கில அகராதி

வோர்டியா மற்ற அகராதிகளை போல சொற்களுக்கான அர்த்தத்தை தருவதோடு அதற்கான வீடியோ விளக்கத்தையும் தருகிறது என்பதே விஷேசம். எந்த‌ வார்த்தைக்கான பொருள் தேடினாலும் அதற்கான அகராதி அர்த்தம் வந்து நிற்கிறது. அந்த சொல்லின் பயன்பாடு போன்ற விவரங்களும் கொடுக்கப்படுகிறது. கூடவே அந்த சொல்லுக்கான வீடியோ விளக்கத்தையும் காணலாம். அதாவது அந்த சொல்லை யாராவது வீடியோ மூலம் விளக்கியிருந்தால், இல்லையென்றால் நீங்கள் கூட விளக்கத்தை சமர்பிக்கலாம். 
இப்போதைக்கு ஆங்கில மொழி சொற்களே இடம் பெற்றுள்ளன. விரைவில் மற்ற மொழிகளையும் இணைக்கு திட்டம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கு ஆர்வம் உள்ளவர்களை வர‌‌வேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே