தமிழ் மொழி கற்க

 என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது பொங்கல்  வாழ்த்துக்கள்.என் வலைப்பூவை வாசித்த   ஒருவர்,  என்னை    தொடர்பு  கொண்டு  கூறியது,  பல பயனுள்ள இடுகைகள் எழுதி உள்ளீர்கள்.   அதில்  பிரெஞ்சு மொழி கற்க ? என்ற   இடுகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.  நான் பத்து வருடங்களாக பிரெஞ்சு  பேச  முடியாமல்  பலவிதமாக  சிரமப் பட்டதுடன் எனது நண்பர்கள் பலர் என்னை கேலி செய்தனர். இப்போது   நான் பிரெஞ்சு பேசுவதை  பார்த்து வியப்படைகின்றனர். என்று   கூறினார்.    பிளாக்கர் எழுதுவது  எனது  ஒய்வு  நேரத்தை விழுங்கி விடுகிறது. எனவேதான்   நான் பிளாக்கர் எழுதுவதை    நிறுத்த   எண்ணிய     பொழுது!  நான் எழுதிய  சிறிய  இடுகை  ஒருவரின் மொழிப் பிரச்சனையை  தீர்த்தது.  எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது.  நான் வெளியிட்ட இடுகையை அவர் தொடர்ந்து  கற்ற பெருமை அவரையே  சாரும். அத்துடன்  அவர்  தமிழ் கற்க ஒரு தளம் சொல்லுங்கள்  என்றார். நீங்கள்  மிக அழகாக தமிழ் பேசுகின்றிர்கள் தானே என்றேன் . எனது பிள்ளைகள் தமிழ் கற்க என்றார் ;சரி என்றேன் இத்தளங்கள்  பிரெஞ்சு  மூலம்   தமிழ் கற்கலாம்