இஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கும்

இஸ்ரவேல் தேவனுடைய வாக்கும் இஸ்ரேல் நாட்டின் போக்கும்

நவீன இஸ்ரேல் நாடு 60 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. 1948_ம் ஆண்டு மே மாதம் 14_ம் நாள் டேவிட் பென்குரியான் இஸ்ரேல் நாட்டை சுதந்திர நாடாய் அறிவித்தார். யூதர்கள் மற்றும் அவர்களின் தேசம் அற்புதமாய்த் தோன்றி நிலைப்பதை நாம் நமது சொந்தக் கண்களால் காண்கிறோம்.

" ஒரு தேசத்திக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்க பிறக்குமோ?" என்று ஏசாயா 66:8_8 உள்ள தீர்க்க தரிசனத்தின் நிறைவேறுதலாகும் இது.

இஸ்ரேல் தேசத்தின் சுதந்திரத்திற்குப் பின் முதல் 3 ஆண்டுகளில் யூதர்களின் ஜனத்தொகை இரட்டிப்பானது. 100 நாடுகளுக்கும் மேலான தேசங்களிலின்று மக்கள் வந்து ஒற்றுமையாய் வாழவது பிரமிப்பைத்தரும் ஒன்றாகும். 60 ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனாவில் 6,00,000_கும் குறைவான யூதர்காளே வாழ்ந்தனர். இன்று இஸ்ரேல் நாட்டின் முழு ஜனத்தொகை 70 இலட்சத்திற்கும் மேல் இஸ்ரேல் நாடு ஊடகங்களின் கவனத்தை வெகுவாய் தன் பக்கம் ஈர்ப்பதனால் உலகில் உள்ள நாடிகளில் பெரிதாய் கணிக்கப்படுகிறது. இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகளைக் குறித்துப் பேசும் போது, அவர்கள் எந்தப் பொருளில் சொல்லுகிறார்கள் என்பதை இஸ்ரேலின் பூகோள அமைப்பை நீங்கள் ஒருமுறை பார்த்தால் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இஸ்ரேல் நாட்டின் ம‌த்திய‌ ப‌குதியின் 9 மைல் குறுக்க‌ள‌வை ச‌ற்று ம‌ற‌ந்து விடுங்க‌ள். நீங்க‌ள் எருச‌லேம் சென்றால், யூத‌ர்க‌ளுக்கும் அர‌பிய‌ர்களுக்கும் இடையில் சிறிது தூர‌மே இருப்ப‌தைக் காண‌லாம். எருச‌லேமில் ப‌ரிசுத்த‌ ஸ்த‌ல‌மாகிய‌ மேற்கு ம‌திலின் மீதும், தேவால‌ய‌ ம‌லையின் மீதும் " டோம் ஆஃப் த‌ ராக்" என‌ப்ப‌டும் பாறை ம‌ண்ட‌ப‌மும், அல் - அக்ச‌ர் ம‌சூதியும் அமைன்துள்ள‌ன‌, சுற்றிவரும் முனையில் ந‌ன்கு அறிந்த‌ ப‌ரிசுத்த‌ க‌ல்ல‌ரையின் தேவ‌ல‌ய‌ம் உள்ள‌து. நீங்க‌ள் எப்ப‌டி யூத‌ர்க‌ளுக்கும், அர‌பியர்க‌ளுக்கும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் முக‌ம‌திய‌ருக்கும் கோடிட்டு பிரித்துக் காட்ட‌விய‌லும்?

அனைத்து அர‌பு நாடுக‌ளையும் சேர்த்தால், ப‌ர‌ப்ப‌ள‌வில் இஸ்ரேல் நாட்டின் அள‌வைப்போல் அது 650 ம‌ட‌ங்கு பெரிய‌தாகும். பூகோள‌ ரீதியாக‌ குறிப்பாக‌ அர‌பு நாடுக‌ளின் மிக‌ப்பெரிய‌ ப‌ர‌ப்ப‌ள‌வை ஒப்பிட்டால் இஸ்ரேல் நாடு மிக‌வும் சின்ன‌ நாடு. இருப்பினும் யூத‌ர்க‌ளின் தேச‌ம், சில‌ நாடுக‌ளின் ப‌ய‌முறுத்த‌லுக்கும், ப‌கையான‌ க‌ண்ட‌ன‌த்திற்கும் ஓயாத‌ இல‌க்காய் இருந்து கொண்டிருக்கிற‌து. ம‌னித‌ வ‌ர‌லாற்றின் துவ‌க்க‌ம் முத‌ற்கொண்டே, யூத‌ ம‌க்க‌ள் தாங்க‌ள் உயிர்வாழ‌வே அச்சுருத்த‌ல்க‌ளை எதிர்கொண்ட‌ன‌ர். ஆனால் ச‌ர்வ‌ வ‌ல்ல‌மையுள்ள‌ தேவ‌னின் கிருபையால் அவ‌ற்றை அவ‌ர்க‌ள் மேற்கொண்ட‌ன‌ர். இன்று இஸ்ரேல் நாடு உல‌கின் அனைத்து நாடுக‌ளிலும் அது நிலைத்திருப்ப‌தின் உரிமை விவாதிக்க‌ப்ப‌ட்டு, அத‌ன் எதிர்கால‌ம் கேள்விக்குறியாயிருக்கிற‌ ஒரே நாடாக‌ ஒருவேளை இருக்க‌லாம். ஏன் அநேக‌மாக‌ உல‌க‌ம‌னைத்தும் யூத‌ர்க‌ளை வெறுக்கிறது? யூத‌ர்க‌ள் உல‌கிற்கு என்ன‌ செய்து விட்டார்க‌ள்? இஸ்ரேல் நாடு நிலைக்குமா? அநேக‌ ம‌க்க‌ளுக்கு, முழு த‌க‌ராறும் பூகோள‌ ரீதிய‌ன‌து போல் தோண்றுகிற‌து ஒரு துண்டு நில‌த்தை யூதரும், பால‌ஸ்தீன‌ர்க‌ளும் த‌ங்க‌ளுக்கு சொந்த‌மான‌தாக‌ உரிமை பாராட்டுகிறார்க‌ள்.
மீட்சல் ஜி. பார்டு தனது " இஸ்ரேல் தேசம் இருக்குமா" என்ற நூலில் முகமதியருக்கு நாஸ்திகரை கீழ்ப்படுத்துவது மதசம்பந்தமானதொரு உதவி என்றும் முகமதியரை ஆளுவது அல்லது முகமதியரின் தேசங்களைக் கட்டுபடுத்துவது முகமதிரல்லாதவர்களுக்கு ஒத்துக்கொள்ளக் கூடாத ஒன்று என்றும் எழுதுகிறார். இஸ்ரேல் இஸ்லாமிய தகராற்றினை சமாளிக்க முடியாது என்பதை அறிய முற்றிலும் அடிப்படையானது இது. இஸ்லாமிய‌ உலகின் சங்கத்தில் யூதர்களின் நாடு இருப்பதை ஹாமாஸ் அல்லது இஸ்லாமிய ஜிகாத் அல்லது ஹிஸ்பொல்லா அல்லது வேதாகமத்தின் படைப்பின் காரிய‌த்தில் நம்பிக்கையுள்ள வேறு எந்த குழுவாயினும் ஏற்றுக்கொள்ளவியலும் என்பது நினைப்புக்குறியதாகும். இஸ்ரேல் புற்று நோய், (அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் குறிப்பு) அது துண்டித்து தூக்கி எரியப்பட வேண்டும். அவர்கள் மனதை மாற்ற யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் அவர்கள். நாளைக்கே இஸ்ரேல் மேற்கு கரையில் எல்லாப்பகுதிகளினின்றும் கிழக்கு எருசலேமிலிருந்தும் தங்கள் படைகளை விலக்கினாலும், கோலன் உச்சிகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் சிரியாவுக்குக் கொடுத்தாலும் சமாதானம் ஏற்படாது. ஏனெனில் 1967_ம் ஆண்டின் படியான எல்லைக் கோட்டிகுத் திரும்பி வருவதில் இஸ்லாமியக் கொள்கைக்காரர்கள் திருப்தியடையார்கள். அவர்கள் தங்கள் எல்லை மத்திய தரைக்கடல் வரைக்கும் உள்ளது என்று உரிமை கொண்டாடுகிறார்கள்.

உலக ஜனத்தொகையில் யூதர்கள் மிகச்சொற்பமானவர்களான போதிலும் 20_ம் நூற்றாண்டில் வேதியல், பொருளாதாரம், இலக்கியம், சமாதானம், பௌதீகம், மருந்து போன்ற துறைகளுக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் கால்பகுதியை யூதர்களே பெற்றிருக்கிறார்கள். கேட்பதற்காக ஒருவேளை இஸ்ரேலோடு அரபு உலகின் நாடுகள் சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனாலும் உலகளாவிய அளவில் பூமியில் வேறு எந்த ஒரு நாடும் அவ்வளவாய் தாழவாய் நோக்கிப்பார்க்கப்படவில்லை. எதிர்காலத்தைக் குறித்த ஐயங்களிடையிலும் யூத மக்களின் வரலாறு வாழ்வின் ஒரு கதையாகும்.
அவர்கள் இஸ்ரவேலர்களாய் அல்ல யூதர்களாய் பிழைத்திருக்கிறார்கள் என பெயர் தெரியாத ஒரு நூலாசிரியர் கூறினார். தனிப்பட்ட இஸ்ரவேலரோடு அல்லது ஒரு முகமதிய இஸ்ரவேலனிடத்தில் உலகிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. யூத இஸ்ரவேலரோடு உலகம் வாழ முடியாது. அதன் காரனத்தையும் விளக்கவியலாது. எனக்குத் தெரிந்தவரையில் காலகாலமாக இருந்து வருகிற யூதர்களுக்கு விரோதமான போக்கும், விளக்கக்கூடிய நியாயமான எந்த முறையையும் பின்பற்றாமல் மெய்யாகவே அர்த்தமற்ற ஒரு சமூக கோட்பாடாகவே இருந்து வந்திருக்கிறது. யூத விரோதக் கொள்கை உலகமெங்கும், ஒவ்வொரு தலைமுறையிலும், எல்ல மக்கள் நடுவிலும் யூதன் கால்வைத்த ஒவ்வொரு கண்டத்திலும் இருந்திருக்கிறது.

ஆனால் யூத விரோதக்கொளகைக்கு நியாயமான விளக்கமொன்றுண்டு. அது ஆவிக்குரியது. இஸ்ரேல் தான் அனைத்துப் பிரச்சனைக்கும் காரணம் என்று பிசாசு உலகத்தை நம்பப் பண்ண முயற்சிக்கிறான். யூதர்கள் தங்களுக்குரியதைப் பெற்றுக்கொள்கினர் ஏன் சாத்தான் யூத மக்களைக் கொடூரமாக வெறுக்கிறான்? மைக்கேல் ப்ரௌன் " எங்கள் கரங்கள் இரத்ததால் கறைபடிந்துள்ளன." என்ற நூலில், யூதர்களைக் காயப்படுத்துவதால் சாத்தான் ஆண்டவரைக் காயப்படுத்தி, தனது சொந்த மரணாக்கினைக்கு பழிவாங்குகிறான். அவன் யூதரை அடியோடு அழிக்க முயற்சிப்பது ஆண்டவருக்கு அவமானத்தை உண்டாக்கவே. யூதர்கள் முற்றிலும் வேறுபட்ட மக்களாய் இல்லாமற் போனால், அப்போது தேவன் தமது வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளாதவராய் அல்லது காத்துக்கொள்ளக் கூடாதவராய்ப் போய்விடுவார்.

குறிப்பாக யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்த‌ங்கள் எவை? அடிப்படையாக, ஆதியாகமம் 12:1-3_ல் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டவைகளின்று எடுக்கப்பட்டவை. ஜனங்கள் தேசம், ஆசீர்வாதம் இவைகளுக்கு அடுத்த வாக்குத்தத்தங்கள்.

எசேக்கியேல் 36:24_ல் " உங்களை சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுய தேசத்திற்கு உங்களைக் கொண்டு வருவேன்". என்று வாசிக்கிறோம்.
இஸ்ரேல் ப‌ல‌ திசைக‌ளிலிருந்தும் தாக்க‌ப்ப‌டுகிற‌து. இருண்ட‌ கால‌ம் இன்னும் வ‌ர‌ இருக்கிற‌து, ஆனால் முடிவில் தேவ‌ன் மேற்கொள்ளுவார். வேதாக‌ம‌ முடிவுரையே இந்த‌ த‌லைய‌ங்க‌த்திற்கு மிக‌வும் ஏற்ற‌ முடிவுரையாய் அமையும். " இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்." வெளி 22:20-21. என்ற‌ அப்போஸ்த‌லனாகிய‌ யோவானின் இறுதி ஜெப‌மே ந‌ம‌து முடிவான‌ வேண்டுத‌லாயுமிருக்க‌ வேண்டும்.
Bro. Henk Kameteeg
-நன்றி 
பைபிள் அங்கிள் http://www.bibleuncle.com/2009/03/blog-post_17.html