தமிழ் உலகின் பழமையான மொழி

தமிழ் உலகின் பழமையான மொழி

’தமிழ்’என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். உலகின் பழமையான மொழிகள் மொத்தம் ஏழு, அதில் மூன்று தான் தற்போது வழக்கில் உள்ளது. அதில் ஒன்று தான் தமிழ்!. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்கிறார்கள். இந்திய நாட்டில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டு பதிவுகளில், அறுபதாயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவைகள் ஆகும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மூலம் எண்களும் எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் கோடிக்கு மேல் குறிப்பிட தனி சொற்கள் கிடையாது. பத்து கோடி, நூறு கோடி என சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் இதை பிரமகற்பம் என சொல்ல முடியும். உலகில் இந்தியா, மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழி இலங்கை நாட்டின் நாடாளுமன்ற மொழியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.