கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பவதை தவிர்க்குமாறு உலகின் உயர் மட்ட விஞ்ஞானிகள் பலர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் வாழும் மிகப் பெரிய விஞ்ஞானிகள் எனக் கூறப்படும் பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கின், நோம் சோமஸ்கி, எலன் மாஸ்க், மற்றும் ஸ்டீவ் வொஸ்னியேக் ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கொடூரமான ரோபோக்களை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் மிகவும் குறுகிய காலத்தில் முழு மனித இனத்தையும் அழிக்கும் திறன் இந்த ரோபோக்களிடம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகில் பல நாடுகள் போர் நடவடிக்கைகளுக்காகவும் பாலியல் தேவைகளுக்காகவும் ரோபோக்களை உருவாக்கி வருகின்றன.
உலகின் பாதுகாப்பு மாத்திரமல்லாது நாகாரீகத்தின் எஞ்சிய பகுதிகளும் இதனால், அழியும் ஆபத்து இருப்பதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்யா ஏற்கனவே தனது கண்ணுக்கு புலப்படும் அனைத்தையும் சுட்டுக்கொல்லும் நோக்கில் ரோபோ இயந்திரம் ஒன்றை தயாரித்துள்து.
மனிதனின் சில செயற்பாடுகaள் திரைப்படங்களில் உச்சக்கட்ட இறுதி காட்சிகளில் வரும் துரதிஷ்டவசமான சம்பவங்கள் போல் மனிதனுக்கு அழிவை ஏற்படுத்தும் நிலைமையாக மாற வழிவகுக்கலாம் என்பது நிச்சயமானது
இந்த தகவல் வேதாகம தீர்க்கதரிசனம் விரைவில் நிறைவேற இருக்கிறது என்பதை காட்டுகிறது  இதோ அதற்கான வசனம் 
 வெளிப்படுத்துதல் 13 அதிகாரம்
14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்



15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.