மாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்

மாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்

தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. லஞ்சப் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக, பாண்டே, எடப்பாடி பழனிச்சாமியை அணுகி, அரசு மற்றும் முதல்வர் செய்திகளுக்கு நல்ல கவரேஜ் கொடுப்பதாகவும்,  மற்ற கட்சிகள் இதே போல மீடியாவை கண்காணிக்க தனித் தனியாக ஆட்களை நியமித்திருப்பதாகவும் பேசியுள்ளார். எடப்பாடி பெரிய அளவில் பிடி கொடுக்கவில்லை.

மதுரையின் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் தலைமையில், ஊடகங்களை கண்காணித்து, எந்த சேனல், அரசுக்கு ஆதரவாக உள்ளது, எதில் செய்திகள் குறைவாக வருகின்றன என்பதை கண்காணித்து,  அரசு கேபிளில் இருந்து ஒளிபரப்பை நிறுத்தி விடுவோம் என்ற ஆயுதத்தை வைத்து மிரட்டும் பணியை செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  இந்த நிலையில்தான் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் மற்றும் தங்கதமிழ்ச் செல்வன், ஆகியோர், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது ஊழல் புகாரை வெளியிட்டனர்.  இந்த செய்தியை போடக் கூடாது என்று எடப்பாடி தரப்பில் இருந்து நேரடியாகவே தந்தி நிர்வாகத்திடம் சொல்லப்பட்டது.   அது பாண்டேவிடமும் தெரிவிக்கப்பட்டது.  இரவு 7.30 மணி செய்தியில் அந்த செய்தி வெளியிடப்படவில்லை.   ஆனால் 8 மணி செய்தியில் அந்த செய்தி விரிவாக வெளியிடப்பட்டது.  

கோபத்தின் உச்சத்துக்கே சென்றார் எடப்பாடி.   தனது மீடியா செல்லை அழைத்து, தந்தி டிவியில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்த செய்திகள் எப்படியெல்லாம் முக்கியத்துவம் அளித்து ஒளிபரப்பப்பட்டன என்பது குறித்து அறிக்கை பெறுகிறார். இந்த அறிக்கையை தந்தி டிவி நிர்வாகத்துக்கு அனுப்பி, என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கிறார்.    நிர்வாகம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, தந்தி டிவி அரசு கேபிளில் இருந்து நீக்கப்படுகிறது.  நான்கு நாட்களுக்கு அரசு கேபிளில் தந்தி டிவி தெரியவில்லை.  எப்போதுமே தந்தி டிவிக்கு ஒரே நிலைபாடுதான்.  குழப்பமேயில்லாமல் எப்போதும் ஒரு கட்சி சார்புதான்.   அந்த ஒரே கட்சி ஆளுங்கட்சிதான். 

அரசு கேபிளில் பிடுங்கப்பட்டதும் பதறிப் போனது நிர்வாகம்.   புல்லட்டின் எடிட்டர் பாஸ்கர் பாபுவை அழைத்து உடனடியாக ராஜினாமா செய்யச் சொன்னது.  பாண்டேவை அழைத்து அவரையும் ராஜினாமா செய்யச் சொன்னது.இத்தனை பெரிய பதவியில் இருந்து விட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியே பரவினால் வேறு வேலை கிடைக்காது என்பதால், வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் பாண்டே. எது எப்படியோ, இனி நீங்கள் அலுவலகம் வர வேண்டாம் என்று தெளிவாக கூறி விட்டது நிர்வாகம்.  பாண்டேவின் ஆதரவாளர்கள், அவர் சொந்த வேலையாக வெளிநாடு சென்று விட்டார்.   விடுப்பில் சென்று விட்டார் என்று கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் பாண்டே பணி நீக்கம் செய்யப்பட்டதுதான் உண்மை. அடுத்ததாக பாண்டே, பெருந்தலைவர் எச்.ராஜா அவர்களின் முகநூல் அட்மினாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.