இப்போது என்னாலும் அழகாக ஆங்கிலம் பேச முடியுமுங்கோ!

எதைப்பற்றி  எழுதுவது  என  யோசித்துக்  கொண்டிருந்தேன். அப்பொழுது எனது கணணியை திறந்தேன்.
அழகான தோற்றத்தில்   உங்களது பேசும் உருவத்தை உருவாக்குங்கள் என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். சரி என்னதான் இருக்கிறது என    முயற்சித்துப் பார்த்தேன். ஆகா!! என்ன மாதிரி  எனது உருவத்தில் ஆங்கிலத்தில் அழகாக பேசுகிறது.  முன்னர் யாழ்ப்பணத்தில் எனது கல்லூரியில் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை  எனவே, மாதத்தில் ஒரு நாள் ஆங்கில வகுப்பு நடக்கும்.  அதுமட்டும் நாங்கள் சந்தோசமாக இருப்போம்.  ஆங்கில ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும் மயான அமைதியாக இருப்பார்கள்.  எனது ஆங்கில உச்சரிப்பு அழகாக இல்லையென ஆசிரியரிடம் எவ்வளவு அடி அடியாக வாங்கினேன்.  அப்பொழுது இந்த தொழில் நுட்பம் வந்திருந்தால், இதையே வீடியோ பண்ணி அடிவாங்காமல் இருந்திருப்பேன்.  சரி இப்போது  என்னாலும் அழகாக ஆங்கிலம் பேச முடியுமுங்கோ!
  இங்கே
கருத்துரையிடுக