ஆண்மைக்குறைபாட்டை குணப்பபடுத்த

இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மைக் குறைபாடு பிரச்சினையில் சிக்கித்தவிக்கின்றனர். எனினும் ஆண்மைக்குறைபாட்டை எளிய முறையில் குணப்படுத்த முடியும்

அதிகமாக தூக்க மாத்திரைகள் அல்லது போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்மைக்குறைவு ஏற்படும். தேவையில்லாத மாத்திரைகளை தவிர்ப்பதன்மூலம் ஆண்மைக்குறைவை தவிர்க்கலாம்.

இரத்தத்தில் சர்க்கரையளவு உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலிலிருந்தே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஆண்மைக் குறைவைத் தவிர்க்கலாம்.

மது அருந்துவதன் மூலம் இளைஞர்களுக்கு மூளைச் செயல்திறன் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்பட்டு நாளடைவில் ஆண்மைக் குறைவு உண்டாகும்.எனவே மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடம் புகைப்பழக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆண்மைக்குறைவு ஏற்படும்.புகைப்பழக்கத்தை விட்டுவிடுவதன் மூலம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.

உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டம் இல்லாமல் போகும். எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.