உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

அரசியல் தீர்வு பாதிக்கப்படலாம்! – விக்னேஸ்வரன்

அரசியல் ரீதியான தீர்வு எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லாம், அரசியல் ரீதியான நிலைமையை சீராக்காது என வட மாகாண சபை முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை நேற்று தமது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், அரசியல் ரீதியான தீர்வு எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லாம், அரசியல் ரீதியான நிலைமையை சீராக்காது. மாறாக பலவீனமான இடத்திற்கே கொண்டு செல்லும். பொருளாதார ரீதியில் சில விடயங்களை பெற்று விட்டால் அரசியல் தீர்வுகளை பெற முடியாமல் போவதற்கு இடமுண்டு. எனவே இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் குறிப்பிடுவதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பதில் வழங்கியுள்ளார் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Recent Posts

Popular Posts

Blog Archive

Follow by Email

Google+ Followers

Blog Archive

ஊக்கம் தருபவர்கள்