புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது !

புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது !


விடுதலைப் புலிகள் மேல் இருந்த தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இன்று காலை 11.00 மணிக்கு நீக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை என்றும். அவர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடாத காரணத்தால் அவர்கள் மீது உள்ள தடையை தாம் நீக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று காலை 11.00 மணி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 22 நாடுகளிலும் இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது. இனி விடுதலைப் புலிகளின் பணத்தை முடக்கவோ இல்லை, விடுதலைப் புலிகள் உறுப்பினர் என்று கூறி கைதுசெய்யவே ஐரோப்பிய நாடுகளுக்கு உரிமை இல்லை. அத்தோடு விடுதலைப் புலிகளின் கொடியை பாவிக்க எந்த ஒரு தடையும் இல்லை. இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிய உள்ளது. இருப்பினும் தற்போது அது இணைந்துள்ள காரணத்தால், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டும். எனவே இன்று முதல் பிரித்தானியாவிலும் புலிகளுக்கு தடை இல்லை. அத்தோடு தமிழர்கள் இனி மாவீரர் தினத்தை நேரடியாக கொண்டாட முடியும். புலிகளை இதுவரை காலமும் பயங்கரவாதிகள் என்று கூறிவந்த நபர்கள் இனி அந்த சொல்லை பாவிக்க முடியாது. அது போக , இனி ஐரோப்பிய நாடுகள் எங்கேயும் புலிகளின் கொடி உயரப் பறக்கலாம் !