விந்தணு சோதனை வீட்டிலேயே செய்யலாம்

விந்தணு சோதனை வீட்டிலேயே செய்யலாம்


பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து பார்ப்பது இயல்பான ஒன்றாகும். மருத்துவர்கள் விந்தணு பரிசோதனை செய்யும் போது, ஆண்களின் விந்து சாம்பிள் எடுத்து தர வேண்டும் என்று கூறுவார்கள். இதனால் மருத்துவமனையில் தரப்படும் அறைக்கு வெளியே அல்லது மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் அல்லது கழிப்பறைக்குப் போய் தான் விந்தணு சாம்பிள் எடுக்க வேண்டும்எனவே இது மாதிரியான சிக்கல்களை போக்க, மெடிக்கல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், யோ என்ற கைகளுக்கு அடக்கமான ஒரு சாதனத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த யோ என்ற சாதனமானது, ஐபோன் அல்லது சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் போன்களுடன் பொருத்தக்கூடியது. எனவே இந்த சாதனத்தை வீட்டிலேயே வைத்து, ஆண்களின் விந்து திரவத்தில் இருக்கும் விந்தணுக்களின் நீந்தும் வேகம், அடர்த்தி, எத்தனை சதவீத அணுக்கள் செயல்படாமல் இருக்கின்றன என்பது போன்ற சில விபரங்களை கண்டுபிடிக்க முடியும். யோ என்ற சாதனத்தில் ஒரு கண்ணாடித் தகடு, விந்தணுக்களை உறிஞ்சும் பிப்பெட் மற்றும் ஒரு நுண்ணோக்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் இருக்கும் நுண்ணோக்கியை மொபைல் கேமராவுடன் இணையுமாறு பொருத்தி, பின் கண்ணாடித் தகடில் விந்து திரவத்தை வைத்து, யோ சாதனத்துடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் மொபைல் செயலியானது, விந்தணுக்களின் தன்மை பற்றிய அனைத்து விவரங்களையுமே கொடுத்து விடுகிறது. மேலும் செயற்கை கருத்தரிப்பை விரும்பும் தம்பதிகளுக்கு, இந்த யோ சாதனமானது மிகவும் பயன்படக் கூடியதாக உள்ளது.