மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

இந்த காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பதுடன், அறியாமல் சில தவறுகளை செய்து விடுவார்கள்.
மேலும் மாதவிடாய் காலத்தின் போது, பெண்களின் ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, அதிக எரிச்சல் மற்றும் கோபமாக நடந்து கொள்வார்கள்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் ஒருசில மோசமான தவறுகளை அவர்களுக்கு அறியாமலே செய்து விடுவார்கள் அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
  • மாதவிடாய் காலத்தில், அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட நமது உடலுக்கு தேவையான ஆற்றலை நாம் சாப்பிடும் உணவுகள் வழங்குகின்றது. எனவே நமக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இதனால் கடுமையாக வயிற்று வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • மாதவிடாய் காலத்தில் நாம் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஜங்க் உணவுகளை தவிர்த்து, நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால், பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கள் மூலம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் மட்டும் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்காமல் இருப்பார்கள். இதனால் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே மாதவிடாய் காலத்தில் நன்றாக தூங்குவது மிகவும் நல்லது.
  • பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம் எனபதால், அந்த நேரத்தில் மட்டும் பெண்கள் வேலைக்கு செல்லாமல் ஓய்வு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
  • தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்ப்பது மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.
  • பெண்களில் சிலர் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் துணியானது, நோய்த் தொற்றுகள் மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே துணிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.