தமிழனை போற்றும் லண்டன் வெள்ளைக்காரர்கள்

தமிழனை போற்றும் லண்டன் வெள்ளைக்காரர்கள்

சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றிவரும் குணசேகரன் குமார் என்னும் மருத்துவரை ,பிரித்தானிய சன் பேப்பர் சிறந்த ஒரு மனிதராக கெளரவித்துள்ளது. பல உயிர்களை காத்த கடவுள் என அந்த நாளிதழ் அவரை பெருமைப்படுத்தியுள்ளது. இதுவரை சுமார் 2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள மருத்துவர்கள் தர வரிசையில். இவரது பெயரும் இடம்பிடித்துள்ள விடையம். அனைத்து தமிழர்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு முறை வேல்சில் நிறைமாத கர்பிணியாக இருந்த தாய் ஒருவர் காரில் செல்லும் போது பெரும் விபத்தில் சிக்கினார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை.அங்கே வேலையில் இருந்த குணசேகரன் உடனே அறுவை சிகிச்சை செய்து பிள்ளையை வெளியே எடுத்தார். பிறந்து சில நிமிடங்களே ஆன அச் சிசுவுக்கு, மார்பில் பிரச்சனை இருப்பதை சட்டென கண்டு பிடித்து உடனே அறுவை சிகிச்சை செய்ததோடு மட்டுமல்லாது. சுமார் 7 மணி நேர அறுவை சிகிசை செய்து தாயாரையும் காப்பாறியுள்ளார்.

வெறோனிக்கா ஜோன்ஸன் என்னும் இப் பெண் கூறுகையில். என் உயிரை எனக்கு திருப்பி தந்த நபர் குணசேகரன் என்றும். அவர் தலை சிறந்த ஒரு மருத்துவர் என்றும் தெரிவித்துள்ளார். நானும் எனது பிள்ளையும், எமது வாழ்க்கையையே அவருக்கு அர்பணித்தாலும். அவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த ஒரு பெருமிதமும் இன்றி, குணசேகரன் மிகவும் சாதாரணமாக காணப்படும் ஒரு மருத்துவர். அவர் பல முது கலைகளை கற்று, பிரித்தானியாவில் அதி உச்ச தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.