தமிழ் மொழிக் ­கல்­வி­யில் கூடிய கவ­னம் எடுக்க வேண்­டும்! – விக்னேஸ்வரன்

தமிழ் மொழிக் ­கல்­வி­யில் கூடிய கவ­னம் எடுக்க வேண்­டும்! – விக்னேஸ்வரன்

தமிழ்ப் பிள்­ளை­க­ளுக்கு தமிழ் உச்­ச­ரிக்கத் தெரி­ய­வில்லை. லகர, ளகர, ழகர வேறு­பா­டு­கள் மற்­றும் ன, ந, ண, போன்­ற­வற்­றின் வேறு­பாடு தெரி­வ­தில்லை என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். கொழும்பு இரா­ம­நா­தன் இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யின் பரி­ச­ளிப்பு விழா நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­றும் போதே இவ்­வாறு தெரி­வித்­தார்.

முன்பு வானொலி ஒலி­ப­ரப்­புக்­க­ளில் பேசப்­ப­டு­கின்ற தமிழ் இலக்­கி­ய­நடை நிறைந்­த­தாக முறை­யான உச்­ச­ரிப்­பு­டன் கூடி­ய­தாக அமைந்­தி­ருக்­கும். ஆனால் இப்­போதோ வானொ­லிப் பெட்­டியை அல்­லது தொலைக்­காட்­சிப் பெட்­டியை திருப்­பி­னால் அங்கு பேசப்­ப­டு­கின்ற தமிழை எப்­படி வர்­ணிப்­ப­தென்று எமக்­குப் புரி­ய­ வில்லை.சில திரைப்­ப­டங்கள் கூட இவ்­வா­றான பிழை­களைவிட ஊக்­கு­விக்­கின்­றன. அவர்­க­ளின் பேச்­சில் ஆங்­கி­லம் அறு­பது சத­வீ­தம் தமிழ் நாற்­பது சத­வீ­தம் என்று காணப்­ப­டு­கின்­ற­து.
தமிழ் கொல்­லப்­ப­டு­கின்­றதா என்று ஏங்­க­வேண்­டி­யுள்­ளது. மொழிக்­கல்­வி­யில் நீங்­கள் கூடிய கவ­னம் எடுக்க வேண்­டும். எம்­மெல்­லோ­ரை­யும் பிணைப்­பது எமது மொழியே. அந்த மொழி­யில் பாண்­டித்­தி­யம் அடை­வது இன்­றி­ய­மை­யா­தது. கணி­தம், விஞ்­ஞா­னம், புவி­யி­யல், வர­லாறு போன்ற பாடங்­க­ளி­லும் நீங்­கள் கூடிய கவ­னம் செலுத்­து­வ­தன் மூலமே உல­கைப் பற்­றி­யும் எம்­மைப் பற்­றி­யும் எமது சூழ­லைப் பற்­றி­யும் அறிந்து கொள்ள முடி­யும்.
நீங்­கள் மருத்­து­வ­ராக அல்­லது பொறி­யி­ய­லா­ள­ராக அல்­லது சட்­டத்­த­ர­ணி­யாக அல்­லது ஆசி­ரி­ய­ராக ஏதோ ஒன்­றாக வர முடி­யும்.ஆனால் எம்­மைப் பற்­றி­யும் சூழ­லைப் பற்­றி­யும் எமது அர­சி­யல் நிலமை பற்­றி­யும் அறிந்து கொண்­டால் மட்­டுமே எமது வாழ்க்­கையைச் சிறப்­பாக அமைத்­துக் கொள்ள முடி­யும்.பரந்த அறிவு இன்று எம் எல்­லோ­ருக்­கும் தேவைப்­ப­டு­கின்­றது. அந்தப் பரந்த அறி­வைப் பெறு­வ­தற்கு கணி­னிய­றிவு போது­மான அனு­ச­ரணை வழங்கி வரு­கி­றது என்­றார்.