ஏரளமான மருத்துவ குணங்கள் !!!!!!!!!!!!


கடுகிற்கு ஏரளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிகவும் உதவும்.
தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு வெண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.


விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர் விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் வாந்தி மூலம் விஷம் வெளியேறும்.
தேனில் கடுகை அறைத்து உட்கொள்ள இருமல், ஆஸ்துமா, கபம் குணமாகும்.