சிலந்தியின் இனப்பெருக்கம்

சிலந்தியின் இனப்பெருக்கம்

பூச்சி இனத்தை சேர்ந்த சிலந்தியின் இனப்பெருக்கம் சற்று வித்தியாசமானது. இவற்றுள் பருவத்திற்கு வந்த ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியை தேடி செல்கின்றன.

அதனை கண்டவுடன் இனப்பெருக்கம் நடைபெற்று விடுவதில்லை.


முதலில் பெண் சிலந்தியின் வலையை ஆண் சிலந்தி தனது காலால் மெல்ல தட்டுகிறது. அதற்கேற்ப பெண் சிலந்தியிடம் இருந்து பதில் வந்தவுடன் ஆண் சிலந்தி இனப்பெருக்கத்திற்கு உரிய சில அங்க அசைவுகளை செய்கிறது. அதில் ஈர்க்கப்படும் பெண் சிலந்தியுடன் ஆண் சிலந்தி ஒன்றாய் கூடுகிறது.
எனினும் சில சமயங்களில் இனப்பெருக்கம் முடிந்தவுடன் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று விடுகிறது. இந்த நிலை நீடித்தால் அந்த சிலந்தியின் இனமே பிற்காலத்தில் இல்லாத வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதை தவிர்த்து அவை எவ்வாறு வாழ்கின்றன என கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த ஜோனாதன் ப்ரூட் மற்றும் அவரது சகாக்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
அதற்காக ஆய்வகத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாரான நிலையிலுள்ள சில இளம் சிலந்திகளை ஜோடியாக விட்டனர். சில இளஞ்சிலந்திகளை தனியாக வைத்திருந்தனர். இனப்பெருக்கத்திற்கு உரிய பருவத்தில் சிலந்திகளில் ஒரு ஜோடி மிக வேகமாக தங்களுக்குள் ஒன்றாக கூடின. இந்த வேகம் தங்களது சரியான ஜோடியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
அவ்வாறு இல்லாவிட்டால் வேறு சிலந்தியால் குறுக்கிடப்பட வாய்ப்பு உள்ளது. அதை தவிர்ப்பதற்காக தான். மேலும் அதி விரைவாக செயல்படுவதால் அது ஜோடிகளுக்கு பாதுகாப்பினை தருகிறது. இந்த கூடுதலில் பெண் சிலந்திக்கு ஏதேனும் நன்மை ஏற்படுகிறதா? என ஆராய்ந்ததில் ஆம் என்பதே பதிலாக இருந்தது.
ஜோடிகள் ஒன்றாக கூடும் இந்த நிகழ்வில் ஆண் சிலந்தி சாதனை செய்த பெரியவராகி விடுகிறது. மேலும் வேறு சிலந்தியினால் தொல்லை ஏற்படுவதில் இருந்து விடுபட்டு போதுமான பாதுகாப்பும் ஏற்பட ஏதுவாகிறது என ஆய்வாளர் ப்ரூட் தெரிவித்தார்