ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் முயற்சி !!!!!!
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் ஸ்கைப் அழைப்புகளை பதிவு செய்தல் மற்றும் ஒட்டுக் கேட்டல் என்பனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நோக்கமாகும்.
ஆரம்பத்தில் அதற்காக சர்சஸ் எனப்படும் பிரபல கம்பியூட்டர் தொழில்நுட்ப நிறுவனமே அணுகப்பட்டுள்ளது. ஆயினும் பாதுகாப்புச் செயலாளரின் நீண்ட கால நண்பரான அதன் உரிமையாளர் அதனை அடியோடு மறுத்துவிட்டார்.
ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியுமாயின் அதனை இதுவரை அமெரிக்கப் படையினர் விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர், வேண்டுமென்றால் ஸ்கைப் உரையாடல்களை தடைசெய்ய மட்டுமே முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆயினும் அதன் பின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரஸ்தாப விடயத்துக்காக இஸ்ரேலின் தொழில்நுட்ப நிறுவனமொன்றை நாடியுள்ளார். அவர்கள் பல நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒப்பந்தத்தில் அதனை மேற்கொள்ள இணங்கியுள்ளனர்.
ஆனாலும் வொயிப் தொழில்நுட்பத்தின் அடிநுனி தெரியாத பாதுகாப்புச் செயலாளர் பெருமளவு பணத்தை அநியாயமாக வாரியிறைக்கப் போவதாகவே தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில் இதுவரை ஸ்கைப் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்கான வசதியை தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் கண்டுபிடிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ்வின்